பெரும்பாலும் வீட்ல இருக்க கூடிய தாய்மார்கள் சமைக்க கூடியவர்கள் எல்லாருமே நினைக்கிறது சட்டுனு ஏதாவது ஒன்னு செஞ்சுட்டு சமையலறையை விட்டு வெளிய வரணும் அப்படின்னு தான். அந்த வகையில அதுக்கு ஏதாவது ஒரு சிம்பிளான சட்டுனு செய்ய கூடிய ரெசிபியை தேடி தேடி கலைத்து போயிருந்தீங்கன்னா இந்த சுவையான ஒன் பாட் அவரைக்காய் சாம்பார் ஒரு தடவ செஞ்சு பாருங்க. 15 நிமிஷத்துல ஒரு சூப்பரான சாம்பார் ரெடி ஆகிடும் அதுவும் சுவையாக இருக்கும். இந்த சாம்பார நம்ம அவசரத்துக்கு செய்யலாம் அப்படி இல்லன்னா நிறைய நேரம் இருந்தா கூட வேற ஏதாவது வேலை இருக்கு சட்டுனு ஏதாவது செய்யணும் அப்படின்னு நீங்க யோசிச்சா யோசிக்காம இந்த அவரைக்காய் சாம்பார் வெச்சிடுங்க.
இட்லி தோசை சாதம் அப்படின்னா எல்லாத்துக்குமே சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். அதுமட்டுமில்லாம வெண்பொங்கலுக்கு கூட ஊத்தி சாப்பிடுவதற்கு அவ்வளவு சூப்பரா இருக்கும். தேவைப்பட்டால் இந்த அவரைக்காய் சாம்பார்ல ஒரு உருளைக்கிழங்கும் சேர்த்துக்கோங்க சாம்பாருக்கு இன்னும் சுவை கூடுதலாகவே இருக்கும். காலைல ஒருவேளை நீங்க லேட்டா எழுந்துடா கூட குழந்தைகளுக்கு இந்த சாம்பார் வச்சு சட்டுன்னு ஸ்கூலுக்கு அனுப்பிடலாம். அந்த அளவுக்கு இது ஒரு ஈஸியான சாம்பார்.
இதுல அவரைக்காய் மட்டும் இல்லாம உங்களுக்கு விருப்பமான காய்கறிகளும் கூட நீங்க சேர்த்துக்கலாம். ஆனா முருங்கைக்காய் மட்டும் சேர்க்க வேணாம் முருங்கைக்காய் சேர்த்த அது ரொம்ப வெந்து கண்டிப்பா வீணாகிடும். அதனால அதைத் தவிர மற்ற எந்த காய்கறிகள் வேணும்னாலும் சேர்த்து இந்த சாம்பார் செய்யலாம். இந்த சாம்பார் செய்வதற்கு ரொம்ப ஈஸியாகவும் இருக்கும் அதே சமயத்துல ஊத்தி சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியாகவும் இருக்கும்.
ஒரு தடவை வச்சு பாத்துட்டீங்கன்னா அதுக்கு அப்புறம் அடிக்கடி செய்வீங்க. டக்குனு விருந்தாளிகள் வீட்டுக்கு வந்துட்டா கூட அவங்களுக்கு இந்த சாம்பார் வச்சு கூட ஏதாவது ஒரு அப்பளம் பொரிச்சு கொடுத்துடலாம். சட்டுனு வேலை முடிஞ்சு மாதிரி ஆகிடும் அவங்களும் திருப்தியா சாப்பிட்ட மாதிரி ஆகிவிடும். இவ்வளவு ஒரு சூப்பரான சாம்பார் ரெசிபியை 15 நிமிஷத்துல எப்படி ருசியாவும் மணமாகவும் செய்றதுனு வாங்க பார்க்கலாம்.
ஒன் பாட் அவரைக்காய் சாம்பார் | One Pot Sambar Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 குக்கர்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/4 கி அவரைக்காய்
- 2 பெரிய வெங்காயம்
- 50 கி துவரம்பருப்பு
- 3 தக்காளி
- 1 டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி
- 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
- ஒரு குக்கரில் துவரம் பருப்பை கழுவி சேர்த்து அதனுடன் நறுக்கி அவரைக்காய் நறுக்கிய தக்காளி ஒரு பெரிய வெங்காயம் நறுக்கியது சேர்த்து கொள்ளவும்.
- தேவையான அளவு உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து மூன்று விசில் விட்டு இறக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம்பருப்பு கறிவேப்பிலை சீரகம் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து தாளித்து குக்கரில் சேர்த்து மல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான ஒன் பாட் அவரைக்காய் சாம்பார் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ஆரோக்கியமான தினை சாம்பார் சாதம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்!!!