நாம் சாப்பிடும் சாத வகைகளில் பல வகையான சாதங்கள் இருந்தாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சாதம் எப்பொழுது கேட்டாலும் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடும் சாதம் என்றால் அது இந்த சாம்பார் சாதம் மட்டும்தான். சாம்பார் சாதம் என்றாலே பசி எடுக்க ஆரம்பிக்கும். அந்த அளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான மத்திய உணவு சாம்பார் சாதம். பொதுவாக சாதம் என்றால் அரிசியில் செய்யும் சாதம் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அது ஒரு பக்கம் இருக்க, இந்த சத்தான தினை சாம்பார் சாதம் எத்தனை பேருக்கு தெரியும்.
சிறுதானியங்களை பற்றி பெரிதாக அறிமுகம் தேவையில்லை. இது அனைவரும் அறிந்த சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை. நாம் பல வகையான சாதங்களை சுவைத்து இருப்போம். அதில் இடம்பெறாத ஒன்று ஆனால் உடலுக்கு ஆரோக்கியமான ஒரு சாதம் தான் தினை சாம்பார் சாதம். மிகவும் சுவையாகவும் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் தினை சாம்பார் சாதத்தினை குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்கள் உடல் வலு பெறும். தினை அரிசி ஒரு புன்செய் பயிராகும். இந்த அற்புதமான தினை அரிசியில் கால்சியம், மணிச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. மேலும் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை இவற்றில் அதிகமாகவே உள்ளன. அதோடு கோதுமையை விட தினையில் ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது.
இப்படி எண்ணற்ற நற்பயன்களை உள்ளடக்கியுள்ள தினை அரிசியில் சாம்பார் சாதம் எப்படி தயார் செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம். கூடுமானவரை உடல் ஆரோக்கியத்திற்கு அரிசியை தவிர்த்து விட்டு, இப்படி சிறுதானியங்களை நம் உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு விஷயம் தானே. இந்த சாம்பார் சாதத்தை தினை அரிசியில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. குதிரைவாலி, வரகு, சாமை போன்ற மற்ற மில்லட் வகைகளிலும் இதேபோல சாம்பார் சாதம் செய்தால் ருசியாக இருக்கும். வாங்க சுலபமான உடலுக்கு ஆரோக்கியம் தரும் அந்த சாம்பார் சாதத்தை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
தினை சாம்பார் சாதம் |Thinai Sambar Sadam Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 கடாய்
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 1 1/2 கப் தினை
- 1 1/4 கப் துவரம் பருப்பு
- 20 சின்ன வெங்காயம்
- 2 தக்காளி
- 2 கேரட்
- 4 கத்தரிக்காய்
- 2 டேபிள் ஸ்பூன் நெய்
- கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
அரைக்க :
- 1/2 கப் தேங்காய் துருவல்
- 1 பட்டை
- 2 டீஸ்பூன் சாம்பார் பொடி
- 1 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் ஆம்சூர் பவுடர்
- 2 டீஸ்பூன் மல்லி தூள்
தாளிக்க :
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/4 டீஸ்பூன் வெந்தயம்
- 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- 4 வர மிளகாய்
- 1 டீஸ்பூன் சீரகம்
செய்முறை
- முதலில் வெங்காயம், தக்காளி, கேரட், கத்தரிக்காய், கொத்தமல்லி ஆகியவற்றை நன்கு அலசி விட்டு நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் தினையை சேர்த்து வறுத்து எடுத்து பின் ஊற வைத்துக் கொள்ளவும்.
- ஒரு குக்கரில் பருப்பை சேர்த்து நன்கு அலசி விட்டு மஞ்சள் தூள், எண்ணெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைத்து கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பட்டை, இலவங்கம், ஆம்சூர் தூள், காஷ்மீர் மிளகாய் தூள், சாம்பார் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் அனைத்தையும் சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை வெந்தயம், வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும். பின் வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அதனுடன் தக்காளி, கேரட், கத்தரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் வேகவைத்த காய்கறி மற்றும் ஊற வைத்த தினை, அரைத்து வைத்துள்ள பொடியை பருப்புடன் சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூன்று விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் குக்கரை திறந்து கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான தினை சாம்பார் சாதம் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : காலை டிபனுக்கு சூப்பரான தினை புட்டு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்! எவ்வளவு செய்தாலும் காலியாகும்!