பணக்கஷ்டம் தீர முருகனுக்கு ஒரு ரூபாய் பரிகாரம்!!
செவ்வாய்க்கிழமை என்று சொன்னாலே முருகன் தான் நம் ஞாபகத்திற்கு வருவார். முருகா என்ற வார்த்தையை சொன்னாலே நாம் கேட்ட அனைத்தையும் முருகன் நமக்கு வாரி வாரி வழங்குவார். முருகனை மனதார வழிபட்டவர்களுக்கு அவர் அனைத்து வரங்களையும் கொடுப்பார் அப்படி இருக்கும் போது ஒரு ரூபாய் காணிக்கையாக வைத்த
செவ்வாய்க்கிழமை என்று சொன்னாலே முருகன் தான் நம் ஞாபகத்திற்கு வருவார். முருகா என்ற வார்த்தையை சொன்னாலே நாம் கேட்ட அனைத்தையும் முருகன் நமக்கு வாரி வாரி வழங்குவார். முருகனை மனதார வழிபட்டவர்களுக்கு அவர் அனைத்து வரங்களையும் கொடுப்பார் அப்படி இருக்கும் போது ஒரு ரூபாய் காணிக்கையாக வைத்து முருகனுக்கு ஒரு பாடலை பாடி வேண்டுதலை வைத்தாள் நிச்சயமாக நீங்கள் கேட்ட வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. செல்வ வளத்தை வாரி வழங்கக்கூடிய எளிமையான முருகர் வழிபாட்டை பற்றி முருகன் பாடலைப் பற்றிய இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.
பரிகாரம் செய்யும் முறை
இந்த வழிபாட்டை செய்வதற்கு ஒரு வில்வ இலையை எடுத்து அதில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து வீட்டில் உள்ள முருகர் திருவுருவப்படத்திற்கு முன்பாக அதனை வைத்துவிட்டு கடன் சுமையை குறைக்க வேண்டும், கடன் வாங்கி சிரமத்திற்கு உள்ளாகிறேன் அந்த அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்துவிடு. கஷ்டத்தில் இருந்து என்னை காப்பாற்றி விடு என்று மனம் உருகி முருகரிடம் வேண்டிக் கொள்ளுங்கள் எங்கள் செய்த தவறுக்கு எல்லாம் மன்னிப்பு கேளுங்கள். பணம் விஷயத்தில் ஏதாவது தவறு செய்திருந்தாலும் யாரையாவது ஏமாற்றி இருந்தாலோ தவறான பாதையில் பணம் சம்பாதித்து இருந்தாலும் அதற்கெல்லாம் மன்னிப்பு கேட்டு முருகனிடம் கண்ணீர் விட்டு கேளுங்கள்.
முருகனுக்கான பாடல்
இந்த வேண்டுதலை முருகனிடம் வைத்துவிட்டு முருகனுக்கு முன்பாக ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு முருகனுக்கான இந்த பாடலை பாடுங்கள். நம்முடைய உள்ளமும் உருகி இந்த பாடலை பாட வேண்டும்.
பாடல் வரிகள்
அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் நெஞ்சம் அதில் அஞ்சல் என வேல் தோன்றும்-நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன்.
இந்த பாடல் வரிகளை முருகனுக்கு முன்பாக அமர்ந்து பாடி வரும்போது உங்களுடைய மன குழப்பங்கள் தீர்ந்து உங்களுடைய கடன் பிரச்சினைகள் தீர்ந்து செல்வ வளம் அதிகமாகவே கிடைக்கும். முருகனை மனதார நம்பி முருகப்பெருமானுக்கு இந்த வழிபாட்டை செய்யுங்கள் மனதில் அச்சம் வரும்போது எல்லாம் இந்த பாடலை பாடுங்கள். முருகனுக்கு முன்பாக வைத்த ஒரு ரூபாயை எடுத்து உங்கள் பர்ஸ் அல்லது பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள் நிச்சயமாக உங்களிடத்தில் பணம் அதிகமாக சேரும்.
இதனையும் படியுங்கள் : திருச்செந்தூர் முருகனுக்கும் வைகாசி விசாகத்திற்கும் இருக்கும் தொடர்!