Advertisement
Uncategorized

அட்டகாசமான சுவையில் ஆனியன் சிக்கன் வறுவல் இப்படி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்!

Advertisement

நான் வெஜ்ல என்னதான் மட்டன் ,சிக்கன், மீன் ,முட்டை ,இறால் ,நண்டு, கணவாய் னு இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு பிடிச்சதுனு அது வந்து சிக்கன் தா.. சிக்கன் மட்டும் நம்ம எப்படி செஞ்சு சாப்பிட்டாலும் ரொம்பவே டேஸ்ட்டா தான் இருக்கும். சிக்கன்ல பிரியாணி சிக்கன் 65 சிக்கன் கிரேவி மிளகு சிக்கன் செட்டிநாடு மிளகு சிக்கன் குழம்பு அப்படின்னு நம்ம ஏகப்பட்ட வெரைட்டிஸ் சாப்பிட்டு இருப்போம் ஆனால் இன்னைக்கு நம்ம கொஞ்சம் சிம்பிளா செய்யக்கூடிய ஆனியன் சிக்கன் வறுவல் தான் பார்க்க போறோம்.

இந்த ஆனியன் சிக்கன் வறுவல் செய்வதற்கு ரொம்பவே குறைவான டைம் தான் நமக்கு தேவைப்படும். ஆனா டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். எவ்ளோ வச்சாலும் சாப்பிட்டுகிட்டு இருப்போம் அந்த அளவுக்கு இந்த ஆனியன் சிக்கன் வறுவல் சூப்பரா இருக்கும். ஆனியன் கொஞ்சம் அதிகமா சேர்த்து செய்யக்கூடிய இந்த சிக்கன நம்ம சாதத்துக்கு கூடயே போட்டு கூட பிசஞ்சு சாப்பிடலாம்.

Advertisement

அது மட்டும் இல்லாம வெரைட்டி ரைஸ் ஆன தக்காளி சாதம் லெமன் சாதம், தேங்காய் சாதம் நெய் சாதம்ன்னு எல்லாத்துக்கூடையும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். பிரியாணி குடு கூட நம்ம இதை சைட் அடிச்சா வச்சு சாப்பிடலாம் டேஸ்ட் அருமையா இருக்கும். பிரியாணி இந்த சிக்கன் ஆனியன் வறுவல் தயிர் பச்சடி எல்லாத்தையும் சேர்த்து வச்சு ஒரு வாய் சாப்பிட்டா அவ்வளவு ருசியா இருக்கும். ரொம்பவே ஈசியா குழந்தைகளுக்கு பிடிச்ச மாதிரி செய்ய குடிக்க இந்த ஆனியன் சிக்கன் வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

ஆனியன் சிக்கன் வறுவல் | Onion Chicken Fry In Tamil

Print Recipe
ஆனியன் சிக்கன் வறுவல்
Advertisement
செய்வதற்கு ரொம்பவே குறைவான டைம் தான் நமக்கு தேவைப்படும். ஆனா டேஸ்ட் அட்டகாசமாஇருக்கும். எவ்ளோ வச்சாலும் சாப்பிட்டுகிட்டு இருப்போம் அந்த அளவுக்கு இந்த ஆனியன் சிக்கன் வறுவல் சூப்பரா இருக்கும். ஆனியன் கொஞ்சம் அதிகமா சேர்த்து செய்யக்கூடிய இந்தசிக்கன நம்ம சாதத்துக்கு கூடயே போட்டு கூட பிசஞ்சு சாப்பிடலாம். ரொம்பவே ஈசியா குழந்தைகளுக்கு பிடிச்ச மாதிரி செய்யகுடிக்க இந்த ஆனியன் சிக்கன் வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
Advertisement
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Onion Chicken Fry
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 217

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/2 கிலோ சிக்கன்
  • 3 பெரிய வெங்காயம்
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • 1 கைப்பிடி மல்லி இலைகள்

Instructions

  • முதலில் பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை சேர்த்து நல்ல பொன்னிறமாகும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
  • சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம் வறுத்த அதே எண்ணெயில் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • சிக்கன் நன்றாக வெந்தவுடன் அதில் மிளகுத்தூள் மற்றும் வறுத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக கெட்டியாகும் வரை பிரட்டி கொள்ளவும்.
  • இப்பொழுது சூடான சுவையான அட்டகாசமான ஆனியன் சிக்கன் வறுவல் தயார்

Nutrition

Serving: 500g | Calories: 217kcal | Carbohydrates: 56g | Protein: 18g | Cholesterol: 10mg | Sodium: 5mg | Potassium: 382mg | Fiber: 9g | Sugar: 2g

இதையும் படியுங்கள்: ருசியான வெண்டைக்காய் சட்னி இப்படி செய்து ஒரு முறை செய்து கொடுங்கள் 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்கள்!

Advertisement
Prem Kumar

Recent Posts

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

1 மணி நேரம் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

11 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

22 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago