Advertisement
சட்னி

தஞ்சாவூர் வெங்காய சட்னி செய்வது எப்படி ?

Advertisement

நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என மாற்றி மாற்றி வைத்து இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த தஞ்சாவூர் வெங்காய சட்னியை செய்து பாருங்கள்.

இதையும் படியுங்கள் : செட்டிநாடு காரசாரமான பச்சை மிளகாய் சட்னி செய்வது எப்படி ?

Advertisement

கண்டிப்பாக இந்த தஞ்சாவூர் வெங்காய சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்தையும் மிகவும் பிடித்த சட்னியாக மாறி போகும். ஆகையால் இன்று இந்த தஞ்சாவூர் வெங்காய சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

வெங்காய சட்னி | Onion Chutney Recipe in Tamil

Print Recipe
புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த தஞ்சாவூர் வெங்காய சட்னியை செய்து பாருங்கள். கண்டிப்பாக இந்த தஞ்சாவூர் வெங்காய சட்ஞஞஞ சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்தையும் மிகவும் பிடித்த சட்னியாக மாறி போகும். ஆகையால் இன்று இந்த தஞ்சாவூர் வெங்காய சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.
Course chutney
Cuisine Indian, TAMIL
Keyword onion chutney, வெங்காய சட்னி
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 people
Calories 120

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Ingredients

வதக்கி அரைக்க

  • 1 tbsp எண்ணெய்
  • 5 காய்ந்த மிளகாய்
  • 30 சின்ன வெங்காயம் தோல் உரித்தது
  • 1 கொத்து கருவேப்பிலை
  • புளி சிறிய துண்டு
  • 1 tbsp பூண்டு                           பொடியாக நறுக்கியது
  • 1 tbsp இஞ்சி பொடியாக நறுக்கியது
  • 4 tbsp தண்ணீர்

தாளிக்க

  • 2 tbsp எண்ணெய்
  • ½ tbsp கடுகு                            
  • ½ tbsp உளுந்தம் பருப்பு
  • கருவேப்பிலை சிறிது
  • 2 வர மிளகாய்
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள், எண்ணெய் நன்கு
    Advertisement
    காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக சிவக்கும் வரை வறுத்துக் கொள்ளுங்கள்.
  • அதன்பின் இதனுடன் நான் வைத்திருக்கும் தோல் உரித்த சின்ன வெங்காயங்களை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை கொள்ளுங்கள், வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் ஒரு கொத்து கருவேப்பிலை சின்ன துண்டு புளி சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
  • அதன் பின் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். அனைத்து பொருட்களையும் ஒரு நிமிடம் கடாயில் வைத்து நன்கு வதக்கிய பின் கடாயை இறக்கி வதக்கிய பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு குளிர வையுங்கள்.
  • பின் வதக்கிய பொருட்கள் குளிர்ந்த உடன் அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.
  • எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் சிறிது கருவேப்பிலை சேர்த்து நன்றாக தாளித்துக் கொள்ளுங்கள். பின் நாம் மிக்ஸியில் அரைத்த சட்னியை இதனுடன் சேர்த்து கொள்ளவும்.
  • பின் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட்டு ஒரு நிமிடம் கடாயில் வைத்து நன்றாக வதக்கியதும் இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் சுவையான தஞ்சாவூர் வெங்காய சட்னி தயார்.

Nutrition

Serving: 4People | Calories: 120kcal | Carbohydrates: 22g | Protein: 18.7g | Fat: 8.1g | Sodium: 38mg | Potassium: 363mg | Fiber: 6.7g | Sugar: 1.2g | Calcium: 13mg
Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!

எல்லாருக்குமே சிக்கன் என்றாலும் புடிக்கும் சப்பாத்தி என்றாலும் ரொம்ப பிடிக்கும். இப்படி சிக்கனையும் சப்பாத்தியும் தனித்தனியா சாப்பிட்டு கவலைப்படாம சிக்கன்…

10 மணி நேரங்கள் ago

மே மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒரு சில குணங்கள் இருக்கும். ஒரு சில நபர்களுக்கு அவர்களுடைய குணங்கள் ராசி நட்சத்திரத்தை பொருத்தும்…

11 மணி நேரங்கள் ago

ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை…

12 மணி நேரங்கள் ago

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

16 மணி நேரங்கள் ago

மணக்க மணக்க ருசியான தட்டை பயறு சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து…

16 மணி நேரங்கள் ago

கருவாட்டு தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ஒரு சிலருக்கு கருவாடு மீன் அப்படின்னு சொன்னாலே ரொம்ப பிடிக்கும். கருவாடு மீன் எல்லாமே விரும்பி சாப்பிடுறவங்களும் இருக்காங்க. ஒவ்வொருத்தரும்…

16 மணி நேரங்கள் ago