Home சைவம் மாலை நேர ஸ்நாக்ஸ் மொறு மொறுன்னு டேஸ்டா வெங்காயம் ரிங்ஸ் இப்படி ட்ரை பண்ணி...

மாலை நேர ஸ்நாக்ஸ் மொறு மொறுன்னு டேஸ்டா வெங்காயம் ரிங்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

வெங்காயம் நம்ம அன்றாட வாழ்க்கையில நம்மல அழ வைக்கிறது மட்டும் இல்லாம நம்ம சாப்பிடுற எல்லா சாப்பாட்டுக்கும் ஒரு அருமையான டேஸ்ட் கொடுக்கக் கூடியது. வெங்காயம் கொஞ்சம் அதிகமா சேர்த்து நம்ம செய்யக்கூடிய எல்லா உணவுகளுமே கொஞ்சம் அதிகமான டேஸ்ட்டோட தான் நமக்கு கிடைக்கும். அதுலயும் வெங்காய பஜ்ஜி வெங்காய போண்டா வெங்காய பக்கோடா இது எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கும். கடைகளில் வாங்குனா மட்டும்தான் இதெல்லாம் சூப்பரா இருக்கும் அப்படின்னு நினைச்சிட்டு இருப்போம் ஆனால் கடைகள்ல கிடைக்கக்கூடிய அதே சுவைல நம்மளால வீட்டிலயும் செய்ய முடியும்.

-விளம்பரம்-

அந்த வகையில இன்னைக்கு நம்ம வெங்காயம் வச்சு மொறு மொறுப்பா செய்ய கூடிய வெங்காயம் ரிங்ஸ் தான் பார்க்க போறோம். இந்த வெங்காயம் ரிங்ஸ் பாக்குறதுக்கு ரொம்பவே அழகா சாப்பிடணும் அப்படின்னு தோன கூடிய வகையில் இருக்கும். இந்த வெங்காயம் ரிங்க்ஸ நம்ம அழகா செஞ்சு குழந்தைகளுக்கு கொடுத்தோம் அப்படின்னா அதை பார்த்த உடனே குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.

அந்த அளவுக்கு அதோட டேஸ்ட் ரொம்பவே அருமையா இருக்கும். வெங்காயம் மட்டும் நம்ம அழகான வடிவத்தில் வெட்டி வச்சுட்டோம் அப்படின்னா இத நொடியில் நம்ம செஞ்சு முடிச்சிடலாம். மாலை நேர ஸ்நேக்ஸ்க்கு இதை செஞ்சு சாப்பிடலாம் இல்லனா நம்ம ஏதாவது புளி குழம்பு காரக்குழம்பு வைக்கிறோம் அப்படின்னா அதுக்கான சைட் டிஷ்ஷாவும் கூட இந்த வெங்காயம் நம்ம செய்யலாம். அந்த மாதிரியான புளி குழம்பு கார குழம்பு போடலாம் வெச்சு வெங்காயம் சாப்பிடும்போது டேஸ்ட் சூப்பரா அல்டிமேட்டா இருக்கும். இப்ப வாங்க இந்த அருமையான மொறு மொறுப்பான வெங்காய ரிங்ஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
No ratings yet

வெங்காயம் ரிங்ஸ் | Onion Rings Recipe In Tamil

வெங்காயம் மட்டும் நம்ம அழகான வடிவத்தில் வெட்டி வச்சுட்டோம் அப்படின்னா இத நொடியில் நம்மசெஞ்சு முடிச்சிடலாம். மாலை நேர ஸ்நேக்ஸ்க்கு இதை செஞ்சு சாப்பிடலாம் இல்லனா நம்ம ஏதாவது புளி குழம்பு காரக்குழம்பு வைக்கிறோம் அப்படின்னா அதுக்கான சைட் டிஷ்ஷாவும் கூட இந்த வெங்காயம் நம்ம செய்யலாம். அந்த மாதிரியான புளி குழம்பு கார குழம்பு போடலாம் வெச்சு வெங்காயம் சாப்பிடும்போது டேஸ்ட் சூப்பரா அல்டிமேட்டா இருக்கும். இப்ப வாங்க இந்த அருமையான மொறு மொறுப்பான வெங்காய ரிங்ஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: onion rings
Yield: 4
Calories: 112kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 வெங்காயம்
  • 1/2 கப் மைதா
  • 1/2 கப் சோள மாவு
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/4 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/4 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 3/4 டேபிள் ஸ்பூன் பிரட் தூள்
  • 1/2 டீஸ்பூன் சாட் மசாலா
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் வெங்காயத்தை கொஞ்சம் தடிமனான வளையங்களாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் மைதா மாவு ,சோள மாவு ,மிளகுத்தூள், உப்பு , பேக்கிங் பவுடர், இஞ்சி பூண்டு விழுது அனைத்தும் சேர்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி கெட்டியான பதத்தில் கலந்து வைக்கவும்.
  • இப்போது ஒரு கடாயில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.
  • வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை கலந்து வைத்துள்ள மாவில் நன்றாக பிரட்டி எடுத்து பிரட் தூளில் இரு பக்கமும் பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு நன்றாக பொன்னிறமாக பொருத்தி எடுத்தால் சுவையான வெங்காய ரிங்ஸ் தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 112kcal | Carbohydrates: 12g | Protein: 2.3g | Fat: 1g | Sugar: 1g

இதையும் படியுங்கள் : மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட பரங்கிக்காய் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இவ்வளவு டேஸ்டா இருக்குமான்னு நீங்களே ஆச்சரியப்படுவீங்க!!!