வித்தியாசமான ஆரஞ்சு பழ தோல் தொக்கு சாதத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்!!!
ஆரஞ்சு பழத்தோல் தொக்கு என்று பார்த்தவுடனே உங்களில் நிறைய பேருக்கு என்ன இது என்ற சந்தேகம் எழுந்திருக்கும். நாம் எலுமிச்சம் பழத்தில் தொக்கு செய்து சாப்பிட்டு இருப்போம். தொக்கு என்று சொல்வதை விட ஊறுகாய் என்று சொல்லலாம். அதே சுவையில் இருக்கும் இந்த ஆரஞ்சு பழத்தோல் தொக்கு சாப்பிடுவதற்
ஆரஞ்சு பழத்தோல் தொக்கு என்று பார்த்தவுடனே உங்களில் நிறைய பேருக்கு என்ன இது என்ற சந்தேகம் எழுந்திருக்கும். நாம் எலுமிச்சம் பழத்தில் தொக்கு செய்து சாப்பிட்டு இருப்போம். தொக்கு என்று சொல்வதை விட ஊறுகாய் என்று சொல்லலாம். அதே சுவையில் இருக்கும் இந்த ஆரஞ்சு பழத்தோல் தொக்கு சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இதை வெறும் சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம் அல்லது ஊறுகாய் மாதிரி சாதத்திற்கு தொட்டும் சாப்பிடலாம்.
இதனுடைய சுவையை நீங்கள் ஒரு முறை சாப்பிட்டு பார்த்தால் உங்களுக்கு மிகவும் பிடித்து விடும். இந்த தொக்கை நீங்க இரண்டு மூன்று நாட்களுக்கு வெளியிலும் ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜிலும் வைத்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு இதனை கொடுக்க நினைத்தால் காரம் மட்டும் குறைவாக சேர்த்து கொடுக்கலாம். அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.
நாம் பல வகையான தொக்குகள் செய்து சாப்பிட்டிருப்போம் ஆனால் சற்று வித்தியாசமான இந்த ஆரஞ்சு பழ தோலில் தொக்கு செய்து சாப்பிட்டு பாருங்கள். இந்த ஆரஞ்சு பழத்திலேயே கமலா ஆரஞ்சு பழத் தோலில் இந்த தொக்கு செய்தால் சுவை அட்டகாசமாக இருக்கும். மிகவும் எளிமையான முறையில் சுலபமாக செய்யக்கூடிய இந்த ஆரஞ்சு பழத்தோல் தொக்கு எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.