வித்தியாசமான ஆரஞ்சு பழ தோல் தொக்கு சாதத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்!!!

- Advertisement -

ஆரஞ்சு பழத்தோல் தொக்கு என்று பார்த்தவுடனே உங்களில் நிறைய பேருக்கு என்ன இது என்ற சந்தேகம் எழுந்திருக்கும். நாம் எலுமிச்சம் பழத்தில் தொக்கு செய்து சாப்பிட்டு இருப்போம். தொக்கு என்று சொல்வதை விட ஊறுகாய் என்று சொல்லலாம். அதே சுவையில் இருக்கும் இந்த ஆரஞ்சு பழத்தோல் தொக்கு சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இதை வெறும் சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம் அல்லது ஊறுகாய் மாதிரி சாதத்திற்கு தொட்டும் சாப்பிடலாம்.

-விளம்பரம்-

இதனுடைய சுவையை நீங்கள் ஒரு முறை சாப்பிட்டு பார்த்தால் உங்களுக்கு மிகவும் பிடித்து விடும். இந்த தொக்கை நீங்க இரண்டு மூன்று நாட்களுக்கு வெளியிலும் ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜிலும் வைத்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு இதனை கொடுக்க நினைத்தால் காரம் மட்டும் குறைவாக சேர்த்து கொடுக்கலாம். அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -

நாம் பல வகையான தொக்குகள் செய்து சாப்பிட்டிருப்போம் ஆனால் சற்று வித்தியாசமான இந்த ஆரஞ்சு பழ தோலில் தொக்கு செய்து சாப்பிட்டு பாருங்கள். இந்த ஆரஞ்சு பழத்திலேயே கமலா ஆரஞ்சு பழத் தோலில் இந்த தொக்கு செய்தால் சுவை அட்டகாசமாக இருக்கும். மிகவும் எளிமையான முறையில் சுலபமாக செய்யக்கூடிய இந்த ஆரஞ்சு பழத்தோல் தொக்கு எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.

Print
5 from 1 vote

ஆரஞ்சு பழ தோல் தொக்கு | Orange Skin Thokku In Tamil

சுவையை நீங்கள் ஒரு முறை சாப்பிட்டு பார்த்தால் உங்களுக்கு மிகவும் பிடித்து விடும். இந்த தொக்கை நீங்க இரண்டு மூன்று நாட்களுக்கு வெளியிலும் ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜிலும் வைத்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு இதனை கொடுக்க நினைத்தால் காரம் மட்டும் குறைவாக சேர்த்து கொடுக்கலாம். அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். நாம் பல வகையான தொக்குகள்செய்து சாப்பிட்டிருப்போம் ஆனால் சற்று வித்தியாசமான இந்த ஆரஞ்சு பழ தோலில் தொக்குசெய்து சாப்பிட்டு பாருங்கள்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Yield: 3
Calories: 105kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் ஆரஞ்சு பழ தோல்
  • புளி எலுமிச்சை பழ அளவு
  • 4 ஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 4 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • சின்ன வெல்லம்
  • உப்பு தேவையான அளவு
  • 1 கொத்து கறிவேப்பிலை

செய்முறை

  • முதலில் ஆரஞ்சு பல தோள்களை சிறியதாகவெட்டி அதனை ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும். வெந்தவுடன் அதனை ஆற விட்டு அதனுடன்உப்பு மற்றும் புளி சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும். அதன் பிறகு அதில் பெருங்காயத்தூள் மற்றும் மிளகாய் தூள் போட்டு கிளற வேண்டும்.
  • மிளகாய் தூள் மற்றும் பெருங்காயத்தூள் சேர்க்கும் பொழுது அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அரைத்து வைத்துள்ள ஆரஞ்சு பழத்தோல் புளி கலவையை அதில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
  • ஒரு பத்து நிமிடங்கள் நன்றாக அனைத்துடனும் சேர்ந்து வெந்தவுடன் வெல்லத்தை சேர்க்க வேண்டும்.
  • அனைத்தும் சேர்த்து பிறகு 10 நிமிடங்கள் அனைத்தும் நன்றாக வெந்தவுடன் என்னை பிரிந்து வரும் நிலையில் அடுப்பை அணைத்து விட்டால் ஒரு சுவையான ஆரஞ்சு பழத்தோல் தொக்கு தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 105kcal | Carbohydrates: 12g | Protein: 4g | Fat: 0.33g | Calcium: 3.1mg | Iron: 0.26mg