Advertisement
ஸ்வீட்ஸ்

வாயில் வைத்தால் கரையும் பால் கொழுக்கட்டை செய்வது எப்படி ?

Advertisement

விநாயகருக்கு பிடித்த பிரசித்தி பெற்ற உணவுகளில் கொழுக்கட்டையும் ஒன்று என்று சொல்வார்கள். அதனால் தான் கொழுக்கட்டையை இன்று வரை விநாயகருக்கு படைத்து வருகிறோம். அது மட்டும் விநாயகருக்கு நாம் பாரம்பரிய உணவில் எப்பொழுதும் கொழுக்கட்டை இடம்பெற்று வருகிறது. மேலும் கொழுக்கட்டையில் நம் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கும் உடலில் அதிகப்படியான சத்துக்கள் சேர்க்கும் என்றும் சொல்வார்கள்.

இதையுப் படியுங்கள் : குழந்தைகள் விரும்பி சாப்பிடும் புரோட்டின் லட்டு செய்வது எப்படி ?

Advertisement

இப்படி விநாயகருக்கு பிடித்த உணவும் அதிக சத்துக்கள் நிறைந்த உணவான கொழுக்கட்டைகள் இந்தியா முழுவதும் 21 வகைகளில் செய்யபட்டு வருகின்றனர். அதில் பால் கொழுக்கட்டையும் ஒன்றாகும். இன்று நாவிற்கு ருசியான பால் கொழுக்கட்டை எப்படி செய்வது, தேவையான பொருட்கள் மற்றும் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

பால் கொழுக்கட்டை | Paal Kolukattai Recipe in Tamil

Print Recipe
நாம் பாரம்பரிய உணவில் எப்பொழுதும் கொழுக்கட்டை இடம்பெற்று வருகிறது. மேலும் கொழுக்கட்டையில் நம் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கும் உடலில் அதிகப்படியான சத்துக்கள் சேர்க்கும் என்றும் சொல்வார்கள். இப்படி விநாயகருக்கு பிடித்த உணவும் அதிக சத்துக்கள் நிறைந்த உணவான கொழுக்கட்டைகள் இந்தியா முழுவதும் 21 வகைகளில் செய்யபட்டு வருகின்றனர். அதில் பால் கொழுக்கட்டையும் ஒன்றாகும். இன்று நாவிற்கு ருசியான பால் கொழுக்கட்டை எப்படி செய்வது, தேவையான பொருட்கள் மற்றும் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course sweets
Cuisine Indian, TAMIL
Keyword Kolukattai, கொழுக்கட்டை
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 4 Person
Calories 160

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 2 பவுள்
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

Ingredients

மாவு தயார் செய்ய

  • 1 கப் அரிசி மாவு
  • ¼ கப் துருவிய தேங்காய்
  • 1 tbsp சர்க்கரை
  • 1 சிட்டிகை உப்பு
  • சூடான தண்ணீர் தேவையான அளவு

கொழுக்கட்டைக்கு

  • 3 கப் தேங்காய் பால்
  • ½ கப் சாதாரண பால்
  • 1 tbsp கொழுக்கட்டை மாவு
  • ¾ கப் சர்க்கரை
  • ¼ tbsp ஏலக்காய் தூள்

Instructions

  • முதலில் ஒரு கப் அரிசி மாவு பெரிய பவுளில் சேர்த்துக் கொள்ளுங்கள், அதன் பிறகு அதனுடன் கால் கப் துருவிய
    Advertisement
    தேங்காய், ஒரு டீஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் நாம் கலந்த இந்த மாவு கலவையில் ஒரு டீஸ்பூன் அளவு மாவை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள், அதன் பின்பு தண்ணீர் நன்கு கொதித்து வந்ததும் சிறிது சிறிதாக தண்ணீரை பவுளில் சேர்த்து கரண்டியை வைத்து மாவை நன்றாக பிசைந்து கொள்ளுங்கள் மாவு உருண்டை பிடிக்கும் பதத்தில் இருக்க வேண்டும்.
    Advertisement
  • மாவு உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வந்ததும் பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள். அப்போதுதான் கொழுக்கட்டை நன்றாக உள்ளே வேகும். அதன் பின்பு தேங்காய் அரைத்து எடுக்கும் முதல் கப் பாலை தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பிறகு இரண்டு கப் தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் பின்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு கப் தேங்காய் பாலும் மற்றும் அரை கப் சாதாரண பால் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் நாம் உருண்டை பிடித்து வைத்த கொழுக்கட்டைகளையும் சேர்க்கவும்.பின் இதனுடன் நாம் வைத்திருக்கும் முக்கால் கப் சர்க்கரையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
  • பின்பு ஒரு 15 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்துக் கொண்டு பால் நன்றாக கொதித்து வந்ததும் நாம் வைத்திருக்கும் கெட்டியான ஒரு கப் தேங்காய் பாளையம் ஒரு டீஸ்பூன் கொழுக்கட்டை மாவையும் மற்றும் கடைசியாக சிறிது ஏலக்காய் தூள் தூவி இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி விடவும் சுவையான பால் கொழுக்கட்டை தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 4person | Calories: 160kcal | Carbohydrates: 24g | Protein: 13g | Fat: 2.1g | Saturated Fat: 0.2g | Sodium: 36mg | Potassium: 220mg | Sugar: 42g

English Overview: paal kolukattai is one of the most important dishes in south india. pal kolukattai recipe or paal kolukattai seivathu eppadi or paal kolukattai recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.

Advertisement
Prem Kumar

Recent Posts

மட்டன் மிளகு பிரட்டல் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க ரெண்டு தட்டு சோறு சாப்பிடுவாங்க!

மட்டன் எடுத்தா என்ன மட்டன் குழம்பு மட்டன் பிரியாணி மட்டன் கிரேவி மட்டன் சுக்கா அப்படின்னு நிறைய செஞ்சு சாப்பிட்டு…

4 மணி நேரங்கள் ago

ஒவ்வொரு சூழலிலும் ஒரு தெய்வத்தை எத்தனை முறை வளம் வந்து வழிபட்டால் முழு பலன் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்

நாம் பொதுவாக ஒரு கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலில் உள்ள தெய்வத்தை வழிபட்டு விட்டு தெய்வத்துடைய நாமத்தையோ அல்லது ஏதாவது…

4 மணி நேரங்கள் ago

வெறும் மூணு பொருள் மட்டும் வச்சி சுவையான வெள்ளரிப்பழ ஜூஸ் எப்படி செஞ்சு குடிச்சு பாருங்க!

பொதுவாவே வெள்ளரிக்காய் நம்ம உடம்புக்கு ரொம்ப நல்லது. உடம்புல இருக்க சூட்ட தனிச்சு உடம்புக்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடியது தான்…

4 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு ருசியான புதினா பூரி இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!

பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட…

11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 08 மே 2024!

மேஷம் நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றியும் அவர்களுடைய நோக்கங்கள் பற்றியும்…

14 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!

எல்லாருக்குமே சிக்கன் என்றாலும் புடிக்கும் சப்பாத்தி என்றாலும் ரொம்ப பிடிக்கும். இப்படி சிக்கனையும் சப்பாத்தியும் தனித்தனியா சாப்பிட்டு கவலைப்படாம சிக்கன்…

1 நாள் ago