நம் குழந்தைகள் வளரும் காலங்களில் அவர்களுக்கு அதிகம் தேவைப்படும் சத்து புரோட்டின் அதற்காக முக்கியமாக நாம் புரோட்டின் உள்ள உணவுகளாக தேர்வு செய்து கொடுப்பது அவசியம். இதற்காக நாம் குழந்தைகளுக்கு புரோட்டின் உள்ள காய்கறிகள் போன்றவற்றை அவர்களுக்கு உணவாக கொடுக்கும் பொழுது அவர்கள் முதலில் அந்த உணவுகளை தவிர்க்க தான் பார்ப்பார்கள். ஆனால் புரோட்டின் சத்தை அவர்களுக்கு விரும்பிய படி நாம் கொடுக்கலாம்.
இதையும் படியுங்கள் : தேவாமிர்தம் போல் லட்டு செய்வது எப்படி ?
ஆம் இன்று புரோட்டின் லட்டு செய்வது பற்றி தான் பார்க்க இருக்கிறோம். சில பருப்பு வகைகளில் புரோட்டின் சத்துக்கள் அதிகப்படியாக இருக்கும் அந்த பருப்புகளை எல்லாம் அரைத்து அதிலிருந்து நாம் லட்டு தயாரித்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் போது அவர்கள் அந்த இனிப்பு லட்டை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று புரோட்டின் லட்டு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
புரோட்டின் லட்டு | Protein Laddu Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 தாம்பூல தட்டு
- 1 மிக்ஸி
- 1 பெரிய பவுள்
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 4 tbsp நெய்
- 1 கப் நிலக்கடலை
- 100 கிராம் உலர் திராட்சை
- 50 கிராம் முந்திரி
- 50 கிராம் பாதம்
- 50 கிராம் பிஸ்தா
- 50 கிராம் பூசனி விதை
- 6 ஏலக்காய்
- 150 கிராம் பேரிச்சம் பழம்
செய்முறை
- முதலில் கடாயை அடுப்பில் வைத்து நாம் எடுத்து வைத்திருக்கும் நிலக்கடலையை காடாயில் போட்டு எண்ணெய் இல்லாமல் வறுத்துக் கொள்ளுங்கள். கடலை வறுபட்டு பொன்னிறமாக வந்ததும் அதை ஒரு தாம்பூல தட்டில் ஓரமாக கொட்டிக் கொள்ளுங்கள்.
- அதன் பின்பு கடாயில் கால் டீஸ்பூன் அளவு நெய் ஊற்றி அதில் நாம் எடுத்து வைத்திருக்கும் உலர் திராட்சை பழங்களை சேர்த்து நன்றாக வறுத்து எடுங்கள். ஒரு நிமிடம் நன்றாக வறுத்து எடுத்த பின்பு உலர் திராட்சையும் தாம்பூல தட்டில் ஒரமாக கொட்டி விடுங்கள்.
- அதன் பின்பு மறுபடியும் கால் டீஸ்பூன் நெய் ஊற்றி அதனுடன் நாம வைத்திருக்கும் முந்திரி பரப்புகளையும் சேர்த்து, முந்திரி பருப்பு பொன்னிறமாக வரும் வரை வறுத்து அதையும் ஏற்கனவே வறுத்த பொருட்கள் உடன் சேர்த்து கொட்டிக் கொள்ளவும்.
- அதன் பின்பு மறுபடியும் கால் டீஸ்பூன் நெய் ஊற்றி நாம் வைத்து இருக்கும் பாதாம் பருப்பு சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும், பாதாம் பருப்பு நன்கு வறுபட்டதும் அதையும் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் சேர்த்து வைத்து விடுங்கள்.
- பின்பு பிஸ்தா பருப்பை கடாயில் சேர்த்து நன்கு வறுத்து விடுங்கள். பிஸ்தா பருப்பு வறுத்தெடுத்தபின், உங்களிடம் பூசணி விதை இருந்தால் பூசணி விதையம் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் விட்டு விடுங்கள்.
- அதன் பின் கடாயில் ஏலக்காய் சேர்த்து ஒரு 10 வினாடிகள் வறுத்து, அதையும் மீத பொருட்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்பு இப்போது நாம் வருத்த பொருட்களை குளிர வைத்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும்.
- நாம் வறுத்த பொருட்களில் உலர் திராட்சை மற்றும் நிலக்கடலை தவிர மீத பொருட்களை எல்லாம் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக கொர கொரவன அரைத்துக் கொள்ளுங்கள், அதன் பின்பு நிலக்கடலையின் மேற்புறத்தோலை நீக்கிவிட்டு அதையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
- பின் இந்த அரைத்த பொடியை தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொண்டு, அதன் பின் மிக்ஸி ஜாரில் பேரிச்சம்பழம் பழத்தின் கொட்டைகளை நீக்கிவிட்டு சேர்த்துக் கொள்ளுங்கள், இதனுடன் நாம் மறுத்து வைத்துள்ள உலர் திராட்சையையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
- பின் நாம் அரைத்த பேரிச்சம் பழத்தை நாம் அரைத்து வைத்துள்ள பொருட்களுடன் சேர்த்து கொள்ளுங்கள் பின்பு கைகளில் சிறிது நெய் தடவிக் கொண்டு இப்போது நாம் அரைத்த பொருட்களை நன்றாக பிசைந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
- அனைத்து பொருட்களையும் நன்றாக பிசைந்ததும் முடித்ததும் பின் லட்டு போன்று உருண்டை பிடித்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான புரோட்டின் லட்டு இனிதே தயாராகிவிட்டது.
English Overview: The easiest way to make the tastiest sweet. It is a protin Laddu Recipe in Tamil or protin Laddu seivathu eppadie or protin laddu recipe.