தித்திக்கும் சுவையில் பால் பணியாரம் இப்படி ஒரு தரம் வீட்டிலே செய்து பாருங்க!
சதா இட்லி, தோசை ஒரே மாதிரி யான உணவை சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு பணியாரம் போல விதவிதமான உணவுகளை செய்து கொடுத்தால் காலை அல்லது மாலை உணவு திருப்திகரமாக இருக்கும். அந்த வகையில் ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த பால் பணியாரம் வித்தியாசமான சுவையில் இருக்கும். உளுந்த மாவிலும் இந்
சதா இட்லி, தோசை ஒரே மாதிரி யான உணவை சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு பணியாரம் போல விதவிதமான உணவுகளை செய்து கொடுத்தால் காலை அல்லது மாலை உணவு திருப்திகரமாக இருக்கும். அந்த வகையில் ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த பால் பணியாரம் வித்தியாசமான சுவையில் இருக்கும். உளுந்த மாவிலும் இந்த பணியாரத்தை பலர் செய்வதுண்டு. இந்த பால் பணியாரத்திற்கு மாப்பிள்ளை பணியாரம் என்றும் சில இடங்களில் கூறுவதுண்டு.
வீட்டில் மாவை அரைத்து, அந்த மாவு புளிக்க கூட தேவையில்லை. கெட்டிப் பதத்தில் இருக்கும், மாவை எடுத்து ஒரு சூப்பரான பால் பணியாரத்தை எப்படி செய்வது, என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எந்த கஷ்டமும் வேண்டாம். ஆரோக்கியமான, நிறைவான உணவு இது. இப்பவே இத செஞ்சுதான் பாருங்களேன்! எப்படி இருக்குதுன்னு. திரும்பத்திரும்ப கட்டாயம் இந்த பால் பணியாரத்தை செஞ்சிட்டே இருப்பீங்க.