Advertisement
சைவம்

சுவையான பச்சை பட்டாணி தோசை செய்வது எப்படி ?

Advertisement

நீங்கள் வழக்கமாக எப்போதும் போல் தோசை சுடாமல் வேறு ஒரு நிறத்தில் சுவையான தோசை செய்ய விரும்பினீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த பச்சை பட்டாணி தோசை செய்து பாருங்கள் இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். நீங்கள் எப்பொழுதும் போல் ஒரே மாதிரியான தோசை சுடுவதற்கு இந்த பச்சை பட்டாணி தோசை உங்களுக்கு ஒரு மாறுதலாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த தோசை இருக்கும்.

இதையும் படியுங்கள் : பஞ்சு போன்று சுவையான தேங்காய் தோசை செய்வது எப்படி ?

Advertisement

குறிப்பாக குழந்தைகள் என்றால் இன்னும் இரண்டு தோசை கூட கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இந்த பச்சை பட்டாணி தோசை வண்ணமயமாக, சுவைக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கும் இந்த பச்சை பட்டாணி தோசை. ஆகையால் இன்று இந்த பச்சை பட்டாணி தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

பச்சை பட்டாணி தோசை | Pachai Pattani Dosai Recipe in Tamil

Print Recipe
நீங்கள் வழக்கமாக எப்போதும் போல் தோசை சுடாமல் வேறு ஒரு நிறத்தில் சுவையான தோசை செய்ய விரும்பினீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த பச்சை பட்டாணி தோசை செய்து பாருங்கள் இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். நீங்கள் எப்பொழுதும் போல் ஒரே மாதிரியான தோசை சுடுவதற்கு இந்த பச்சை பட்டாணி தோசை உங்களுக்கு ஒரு மாறுதலாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த தோசை இருக்கும். குறிப்பாக குழந்தைகள் என்றால் இன்னும் இரண்டு தோசை கூட
Advertisement
கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இந்த பச்சை பட்டாணி தோசை வண்ணமயமாக, சுவைக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கும் இந்த பச்சை பட்டாணி தோசை.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword Dosai, தோசை
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 58

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்

Ingredients

  • 4 கப் இட்லி மாவு
  • 1 கப் பட்டாணி
  • 3  பச்சை மிளகாய்
  • 3 துண்டு இஞ்சி
  • 1 கைப்பிடி கொத்த மல்லி
  • 1 tbsp சீரகம்
  • 2 tbsp தண்ணீர்
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் அளவிலான பச்சை பட்டாணி சேர்த்து அதனுடன் மூன்று பச்சை மிளகாய், 3 துண்டு இஞ்சி, ஒரு கைப்பிடி கொத்த மல்லி இலை, ஒரு டீஸ்பூன் சீரகம், 2 டீஸ்பூன் அளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு ஒரு பெரிய பவுலில் நான்கு கப் அளவில் ஆன இட்லி மாவு எடுத்து அதனுடன் நாம் மிக்ஸியில் அரைத்த விழுதை சேர்த்துக் கொள்ளுங்கள். பின் தோசை மாவு பதத்திற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள்.
  • பின் வழக்கம் போல் தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி ஒரு கரண்டி மாவை எடுத்து வட்டமாக ஊற்றி விடுங்கள் பின் அதன் மேல் துருவிய கேரட், சிறிது வெங்காயம் தூவி ஒரு மூடியை வைத்து மூடி விடுங்கள்.
  • பின் இருபுறமும் தோசையை நன்றாக வேக வைத்து விடுங்கள். இவ்வாறாக மீதம் இருக்கும் மாவை தோசை சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான பச்சை பட்டாணி தோசை இனிதே தயாராகி விட்டது.

Nutrition

Serving: 200gram | Calories: 58kcal | Carbohydrates: 38g | Protein: 10g | Fat: 1g | Sodium: 2mg | Potassium: 43mg | Fiber: 2g | Sugar: 0.8g | Vitamin A: 3IU | Calcium: 1mg
Advertisement
Prem Kumar

Recent Posts

சுவையான அத்திப்பழம் கீர் இனி சுலபமாக வீட்டிலயே செய்யலாம்! அவசியம் வீட்டில் ஒரு தரம் செய்து பாருங்க!

எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…

5 மணி நேரங்கள் ago

மாலை நேரம் டீ & காபியுடன் ஸ்நாக்ஸாக சாப்பிட ஈஸி பிரெட் ரோல் ரெசிபி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

ரொம்பவே சுலபமா நம்ம வீட்ல இருக்கிற பிரெடை வைத்து ரொம்ப ரொம்ப ஈஸியா நம்ம செய்ய போறது தான் இந்த…

5 மணி நேரங்கள் ago

வீட்டில் இருக்கும் சகல பண பிரச்சனையை சரி செய்ய இந்த ஒரு பொருள் உங்கள் கையில் இருந்தால் போதும்!

சிலரது வீட்டிற்குள் எப்போதும் சண்டையும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும். மனித வாழ்க்கை என்றாலே பிரச்சனை இல்லாமல் இருக்க முடியாது, வாழ்க்கையில்…

5 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு இதமா மாம்பழ குச்சி ஐஸ் இப்படி வீட்டிலே செய்து பாருங்க! மாம்பழ சீசன் வந்துவிட்டது!

இந்த கொளுத்தும் வெயில் காலத்தில் மாம்பழ குச்சி ஐஸ் செய்தால், அதன் வரவேற்பு தனி தனி தான்.. வாங்க அப்படி…

5 மணி நேரங்கள் ago

அபார திறமையினால் வாழ்க்கையில் உச்சம் தொடும் இந்த சில ராசிகளில் பிறந்த பெண்கள்!!

பொதுவாக அனைவரும் வெற்றிபெறத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இது அனைவருக்கும் இலகுவாக நடந்துவிடுவது கிடையாது. பன்னிரெண்டு ராசிகளில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு…

8 மணி நேரங்கள் ago

10 நிமிடத்தில் சுவையான மற்றும் ஆரோக்கியமான துளசி பிரைட் ரைஸை வீட்டிலேயே செய்து பாருங்கள் ருசி மிகவும் அபாரமாக இருக்கும்!!

பிரைட் ரைஸ் பிரியர்கள் பிரியாணி பிரியர்களை விட அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர். பிரியாணிக்கு இணையான ஒரு டிஷ்…

9 மணி நேரங்கள் ago