நாம் வழக்கமாக காலை அல்லது இரவு உணவாக இட்லி சப்பாத்தி தோசை போன்ற டிபன் உணவுகளை அதிகமாக செய்து சாப்பிடவும். இதிலும் பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மற்றும் எளிதில் செய்யக்கூடியது தான் தோசை. ஆனால் இப்படி ஆண்டு கணக்கில் ஒரே மாதிரியான வகையில் தோசை செய்து சாப்பிட்டால் உங்களுக்கும் சலித்து போகும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் சலித்து போகும். இதனால் பெரும்பாலோனர் இரவு உணவுவை ஹோட்டல்களுக்கு சென்று விதவிதமான தோசைகளை சாப்பிடுகின்றனர்.
இதையும் படியுங்கள் : வாழை இலை ரவா தோசை செய்வது எப்படி ?
நம் வீட்டிலேயே இன்று ஒரு விதமான தோசையை செய்து பார்க்க போகிறோம் ஆம், இன்று தேங்காய் தோசை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இதற்கு வெள்ளை ஆப்பம் என்று வேறொரு பெயரும் இருக்கின்றது. இருந்தாலும் நாம் தேங்காய் பயன்படுத்தி இதை செய்வதால் தேங்காய் தோசை என்று சொல்லலாம். இது உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த தேங்காய் தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
தேங்காய் தோசை | Coconut Dosai Recipe in Tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 பெரிய பவுள்
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 2 டம்பளர் பச்சரிசி
- 1 tbsp வெந்தயம்
- 1 டம்பளர் அவல்
- 1 டம்பளர் துருவிய தேங்காய்
செய்முறை
- முதலில் இரண்டு டம்பளர் அளவிலான பச்சரிசி ஒரு பெரிய பவுளில் சேர்த்து அதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு வெந்தயமும் சேர்த்து மூன்று முறை தண்ணீர் சேர்த்து நன்கு அலசி எடுத்துக் கொள்ளுங்கள்.
- அதன் பின்பு அரசி முழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கிட்டத்தட்ட ஒரு 4 மணி நேரங்கள் நன்றாக ஊற வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு டம்ளர் அளவிலான அவலை எடுத்து ஒரு பவுளில் சேர்த்துக் கொண்டு இரண்டு முறை நன்கு அலசி ஒரு பத்து நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
- அதன் பின்பு அவல் நன்றாக ஊறியதும் ஒரு ஒரு மிக்ஸி ஜாரில் அதனுடன் ஒரு டம்ளர் அளவு துருவிய தேங்காய் சேர்த்து மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
- பின் அரைத்த மாவை ஒரு பெரிய பவுளில் சேர்த்து ஒரு எட்டு மணி நேரங்கள் ஊற வைத்து விடுங்கள். அன்பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் தோசை கல்லில் எண்னெயில் ஊற்றி பரப்பி விடவும்
- பின் ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றிக் கொள்ளவும் தோசையை எப்பொழுதும் போல் விரித்து விடாமல் அடை போல் ஊற்றி கொள்ளவும். பின் ஒரு மூடியை வைத்து தோசை முடி விடவும் தோசை நன்றாக வெந்ததும் எடுத்து விடுங்கள். அவ்வளவு தான் சுவையான தேங்காய் தோசை தயார்.