சுட சுட சாதத்துடன் சாப்பிட ருசியான பச்சை பட்டாணி குழம்பு இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! ஒரு சொட்டு குழம்பு கூட மிஞ்சாது!

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டம் போட்டுள்ளீர்களா? என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தினமும் ஒரே மாதிரியான குழம்பு செய்து போர் அடித்து விட்டால் கொஞ்சம் வித்தியாசமாக செய்யுங்கள். அது தான் பட்டாணி குழம்பு. இந்த பட்டாணி குழம்பு சப்பாத்தி, பூ

By Prem Kumar · 6/9/2024

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டம் போட்டுள்ளீர்களா? என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தினமும் ஒரே மாதிரியான குழம்பு செய்து போர் அடித்து விட்டால் கொஞ்சம் வித்தியாசமாக செய்யுங்கள். அது தான் பட்டாணி குழம்பு. இந்த பட்டாணி குழம்பு சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் அற்புதமான சுவையுடன் இருக்கும். பட்டாணி என்றாலே அனைவருக்கும் மிகவும் விருப்பமான ஒரு காய்கறி வகை ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த பட்டாணி குழம்பு அசைவ சுவையில் இப்படி ஒருமுறை செய்து கொடுத்து பாருங்கள், அடிக்கடி கேட்டு அடம் பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள். அசைவ உணவான சிக்கன், முட்டை இவற்றில் இருக்கும் புரதச் சத்துக்களை விட காய்கறிகளில் அதிக அளவு புரதச்சத்து இருக்கிறது. அந்த வகையில் பச்சை பட்டாணியில் உடலுக்குத் தேவையான அதிக அளவு புரதச்சத்து இருக்கிறது.

வெறும் பட்டாணியை அவித்து கொடுத்தால் குழந்தைகள் அதனை தவிர்த்து விடுகின்றனர். எனவே காய்கறிகள் சேர்த்து குழம்பு வைக்கின்ற முறையில் இந்த பட்டாணியை சேர்த்து குக்கரில் 2 விசில் வைத்து குழம்பு செய்து பாருங்கள். இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அல்லது இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையான சுவையில் இருக்கும். இந்த பச்சை பட்டாணி குழம்பு எவ்வாறு செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பச்சை பட்டாணி குழம்பு தோசை, நாண், சப்பாத்தி, இட்லிக்கு பொருத்தமான ஒன்றாகும். ஒரு முறை சாப்பிட்டால் மீண்டும், மீண்டும் தாயார் செய்து சாப்பிட தோன்றும் ஒரு குழம்பு ஆகும். குறிப்பாக இந்த பச்சை பட்டாணி குழம்பு குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் பட்டாணி குருமா இப்படி செய்து பாருங்க! இட்லி, தோசை , பூரி,  சப்பாத்தி அனைத்திற்கும் பக்காவாக இருக்கும்!

Recipes AMP · Quick view
View full