காரசாரமான ருசியில் பட்டாணி குருமா இப்படி செய்து பாருங்க! இட்லி, தோசை , பூரி,  சப்பாத்தி அனைத்திற்கும் பக்காவாக இருக்கும்!

- Advertisement -

பட்டாணியை வைத்து ரொம்ப சுவையான ஒரு ரெசிபி பண்ண இருக்கோம். இந்த ஹோட்டல் ஸ்டைல பட்டாணியை வைத்து இந்த பட்டாணி குருமா எப்படி பண்றது அப்படின்னு பார்க்க இருக்கோம். பட்டாணி வைத்து நாம் நிறைய உணவுகள் செய்து சாப்பிட்டு இருப்போம்.  பட்டாணியில் அந்த அளவுக்கு புரதமும், நார்ச்சத்து நிறையவே இருக்கு.

-விளம்பரம்-

பட்டாணி ரொம்பவே உடலுக்கு நல்லது கொடுக்கக்கூடிய ஒரு தானியமாகும்.   பட்டாணி உடலுக்கு அதிக அளவு புரதச்த்தை கொடுக்கும். இந்த பட்டாணியை ஊற வெச்சு நம்ம  சுண்டல் செய்து சாப்பிடும்போது கூட அப்படியே அதில் இருக்கிற புரதம் நமக்கு கிடைக்குது. அப்படி  பட்டாணியில் குழம்பு , சமோசா செய்து சாப்பிட்டிருப்போம்.

- Advertisement -

சுண்டல் செய்து சாப்பிட்டிருப்போம். ஏன் வடை கூட தட்டி சாப்பிட்டு இருப்போம் அதே மாதிரி ஒரு தோசைக்கு இட்லிக்கும் சட்னி செய்யறதுக்கு நேரத்துல சட்டுனு ஒரு பட்டாணி குருமா எப்படி செய்யறது அப்படின்னு தான் பார்க்க இருக்கோம். இந்த பட்டாணியை வச்சு ஈஸியா இப்படி பட்டாணி குருமா செய்து கொடுக்கும்போது குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். அதுவும் இது நம்ம ஹோட்டல் ஸ்டைல பண்ண போறோம் இந்த சூப்பரான பட்டாணி குருமா  எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

Print
3.67 from 3 votes

பட்டாணி குருமா | Peas Kuruma Recipe In Tamil

சுண்டல் செய்து சாப்பிட்டிருப்போம். ஏன் வடை கூட தட்டி சாப்பிட்டு இருப்போம் அதே மாதிரி ஒரு தோசைக்கு இட்லிக்கும் சட்னி செய்யறதுக்கு நேரத்துல சட்டுனு ஒரு பட்டாணி குருமா எப்படி செய்யறதுஅப்படின்னு தான் பார்க்க இருக்கோம். பட்டாணி ரொம்பவே உடலுக்கு நல்லது கொடுக்கக்கூடிய ஒருதானியமாகும்.   பட்டாணி உடலுக்கு அதிக அளவுபுரதச்த்தை கொடுக்கும். இந்த பட்டாணியை வச்சு ஈஸியா இப்படி பட்டாணி குருமா செய்து கொடுக்கும்போது குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். அதுவும் இது நம்ம ஹோட்டல் ஸ்டைல பண்ண போறோம் இந்த சூப்பரான பட்டாணி குருமா எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Peas Kuruma
Yield: 4
Calories: 643kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1 கப் பட்டாணி
  • 1 தக்காளி
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/2 ஸ்பூன் மல்லிதூள்
  • 1 ஸ்பூன் சீரகதூள்
  • 1/2 ஸ்பூன் கரமசாலா
  • 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 பச்சைமிளகாய்
  • 1 பிரியாணி இலை
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • கொத்தமல்லி சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பட்டாணியை ஊற வைத்து கழுவிட்டு வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  •  
    பின் ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளி பழத்தை சேர்த்து அதை விழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சீரகம்,கடுகு சேர்த்துதாளிக்கவும்.
  • பிறகு ஒரு சின்ன பாத்திரத்தில் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.இந்த மசாலா கலவையை  தாளித்து வைத்துள்ள கடாயில் சேர்த்து கலந்து விடவேண்டும்.
  • அப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு கலந்து கொள்ள வேண்டும். கலந்து விட்டு பச்சை வாசனை போகும்வரை நன்றாக கலந்து விட வேண்டும்.
  • பிறகு அதில் விழுதாக அரைத்து வைத்துள்ள தக்காளி பழத்தை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இப்பொழுதுபச்சை வாசனை சென்ற பிறகு அதில் வேக வைத்து எடுத்துள்ள பட்டாணியை சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.
  •  பிறகு அதில் பச்சை மிளகாய், பிரியாணி இலை, உப்புசேர்த்து கிளறி விட வேண்டும்.பின்பு நன்றாக கொதி வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான பட்டாணி குருமா தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 643kcal | Carbohydrates: 43g | Cholesterol: 32mg | Sodium: 342mg | Potassium: 543mg