Advertisement
சைவம்

காரசாரமான மொறு மொறு பாகற்காய் வறுவல் செய்வது எப்படி ?

Advertisement

பொதுவாக நாம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருமோ அந்த உணவுகளை மட்டும் தவிர்த்து விட்டு. நாவிற்கு ருசியான அனைத்து உணவுகளையும் நாம் சாப்பிடுவோம். இதனால் நாம் ஆயுட்காலம் படிப்படியாக குறைந்து கொண்டு தான் போகுமே தவிர நம் வாழ்நாள் ஒரு பொழுதும் நீடிக்காது. ஆகையால் அனைவரும் வெறுத்து ஒதுக்கும் ஒரு சில சத்து நிறைந்த உணவு பொருட்களை எப்படி அனைவருக்கும் பிடித்த உணவாக மாற்றுவது என்று பார்க்கப் போகிறோம். அதில் இன்று நாம் பார்க்க இருக்கிறது பாகற்க்காய்.

இதையும் படியுங்கள் : காரசாரமான வெண்டைக்காய் ப்ரை செய்வது எப்படி ?

Advertisement

பொதுவாக பாகற்க்காயில் கசப்பு தன்மை அதிகமாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை பெரும்பாலும் உணவில் அதை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இன்று நாம் அதே பாகற்க்காயை கசப்பு தன்மை இல்லாமல் வறுவல் செய்து பார்க்க போகிறோம். இதை நீங்கள் உணவுடன் எடுத்துக் கொள்ளலாம் அல்லது மாலை நேரம் ஸ்நாக்ஸ் ஆகவும் நீங்கள் சாப்பிடலாம். அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும் ஆகையால் என்று பாகற்க்காய் வறுவல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

பாகற்காய் வறுவல் | Pakarkai Fry Recipes in Tamil

Print Recipe
அனைவரும் வெறுத்து ஒதுக்கும் ஒரு சில சத்து நிறைந்த உணவு பொருட்களை எப்படி அனைவருக்கும் பிடித்த உணவாக மாற்றுவது என்று பார்க்கப் போகிறோம். அதில் இன்று நாம் பார்க்க இருக்கிறது பாகற்க்காய். பொதுவாக பாகற்க்காயில் கசப்பு தன்மை அதிகமாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை பெரும்பாலும் உணவில் அதை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இன்று நாம் அதே பாகற்க்காயை கசப்பு தன்மை இல்லாமல் வறுவல் செய்து பார்க்க போகிறோம். இதை நீங்கள் உணவுடன் எடுத்துக் கொள்ளலாம் அல்லது மாலை நேரம் ஸ்நாக்ஸ் ஆகவும் நீங்கள் சாப்பிடலாம். அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.
Course Fry
Cuisine Indian, TAMIL
Advertisement
Keyword Pakarkai, பாகற்காய்
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 peple
Calories 123

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 2 பெரிய பாகற்காய் வட்டமாக நறுக்கியது
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 1 tbsp கரம் மசாலா
  • 2 tbsp மிளகாய் தூள்
  • 1 tbsp அரிசி மாவு
  • 1 tbsp கடலை மாவு
  • 2 tbsp கெட்டியான தயிர்
  • ½ பழம் எலுமிச்சை சாறு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு இரண்டு நீளமான பெரிய பாகற்காயை எடுத்துக்கொண்டு தண்ணீரில் நன்றாக கழுவி கொள்ளுங்கள். பின்பு ஈரப்பதம் இல்லாமல் துடைத்துக் கொண்டு வட்டமான துண்டுகளாக நறுக்கி ஒரு பவுளில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
    Advertisement
  • பின்பு நாம் நறுக்கி வைத்திருக்கும் பாகற்காய் உடன் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் கரம் மசாலா, இரண்டு டீஸ்பூன் மிளகாய் தூள் மூன்றையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு மசாலா பொருட்கள் பாகற்காயுடன் ஒட்டிக்கொள்வதற்காக.
  • இதனுடன் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு, ஒரு டீஸ்பூன் கடலை மாவு, இரண்டு டீஸ்பூன் கெட்டியான தயிர், அரை எலுமிச்சை பழம் சாறு மற்றும் கடைசியாக தேவையான அளவு உப்பு சேர்த்து இதனுடன் பாகற்காய் நன்கு பிரட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு மசாலா கலந்த பாகற்காயை ஒரு 15 நிமிடங்கள் நன்கு ஊற வைத்துவிட்டு பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.
  • பின்பு என்னை நன்கு காய்ந்ததும் நாம் ஊற வைத்த பாகற்காயை சேர்த்து நான்கு பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் கசப்பு தன்மை இல்லாத மொறு மொறு என்று சுவையான பாகற்காய் வறுவல் தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 200கிராம் | Calories: 123kcal | Carbohydrates: 9.8g | Protein: 24g | Saturated Fat: 3.8g | Sodium: 35mg | Potassium: 387mg | Fiber: 1.9g | Sugar: 2.1g

English Overview: pakarkai fry is one of the most important dishes in south india. pakarkai fry recipe or pakarkai fry seivathu eppadi or pakarkai fry recipe in Tamil are a few important terms to describe this recipe in tamil

Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

4 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

7 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

17 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago