- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Fry
பொதுவாக நாம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருமோ அந்த உணவுகளை மட்டும் தவிர்த்து விட்டு. நாவிற்கு ருசியான அனைத்து உணவுகளையும் நாம் சாப்பிடுவோம். இதனால் நாம் ஆயுட்காலம் படிப்படியாக குறைந்து கொண்டு தான் போகுமே தவிர நம் வாழ்நாள் ஒரு பொழுதும் நீடிக்காது. ஆகையால் அனைவரும் வெறுத்து ஒதுக்கும் ஒரு சில சத்து நிறைந்த உணவு பொருட்களை எப்படி அனைவருக்கும் பிடித்த உணவாக மாற்றுவது என்று பார்க்கப் போகிறோம். அதில் இன்று நாம் பார்க்க இருக்கிறது பாகற்க்காய்.
இதையும் படியுங்கள் : காரசாரமான வெண்டைக்காய் ப்ரை செய்வது எப்படி ?
பொதுவாக பாகற்க்காயில் கசப்பு தன்மை அதிகமாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை பெரும்பாலும் உணவில் அதை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இன்று நாம் அதே பாகற்க்காயை கசப்பு தன்மை இல்லாமல் வறுவல் செய்து பார்க்க போகிறோம். இதை நீங்கள் உணவுடன் எடுத்துக் கொள்ளலாம் அல்லது மாலை நேரம் ஸ்நாக்ஸ் ஆகவும் நீங்கள் சாப்பிடலாம். அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும் ஆகையால் என்று பாகற்க்காய் வறுவல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
English Overview: pakarkai fry is one of the most important dishes in south india. pakarkai fry recipe or pakarkai fry seivathu eppadi or pakarkai fry recipe in Tamil are a few important terms to describe this recipe in tamil
Ingredients
Method
முதலில் ஒரு இரண்டு நீளமான பெரிய பாகற்காயை எடுத்துக்கொண்டு தண்ணீரில் நன்றாக கழுவி கொள்ளுங்கள். பின்பு ஈரப்பதம் இல்லாமல் துடைத்துக் கொண்டு வட்டமான துண்டுகளாக நறுக்கி ஒரு பவுளில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பின்பு நாம் நறுக்கி வைத்திருக்கும் பாகற்காய் உடன் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் கரம் மசாலா, இரண்டு டீஸ்பூன் மிளகாய் தூள் மூன்றையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு மசாலா பொருட்கள் பாகற்காயுடன் ஒட்டிக்கொள்வதற்காக.
இதனுடன் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு, ஒரு டீஸ்பூன் கடலை மாவு, இரண்டு டீஸ்பூன் கெட்டியான தயிர், அரை எலுமிச்சை பழம் சாறு மற்றும் கடைசியாக தேவையான அளவு உப்பு சேர்த்து இதனுடன் பாகற்காய் நன்கு பிரட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்பு மசாலா கலந்த பாகற்காயை ஒரு 15 நிமிடங்கள் நன்கு ஊற வைத்துவிட்டு பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.
பின்பு என்னை நன்கு காய்ந்ததும் நாம் ஊற வைத்த பாகற்காயை சேர்த்து நான்கு பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் கசப்பு தன்மை இல்லாத மொறு மொறு என்று சுவையான பாகற்காய் வறுவல் தயாராகிவிட்டது.






