சாதம் சப்பாத்தியுடன் சாப்பிட ருசியான பாலக் சென்னா மசாலா மிஸ் பண்ணாம இப்படி செஞ்சி பாருங்கள்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவு வகைகளில் பூரி, சப்பாத்தி என்றாலே பிடித்தமான ஒன்றாகும். அந்த பூரி சப்பாத்திக்கு கொண்டைக்கடலையை மற்றும் பாலக் கீரை வைத்து பாலக் சென்னா மசாலா எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். இந்த கிரேவிய சப்பாத்தி பூரி இவற்றுக்கெல்லாம் சைடிஷ் ஆக வைத

By Prem Kumar · 24/12/2023

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவு வகைகளில் பூரி, சப்பாத்தி என்றாலே பிடித்தமான ஒன்றாகும். அந்த பூரி சப்பாத்திக்கு கொண்டைக்கடலையை மற்றும் பாலக் கீரை வைத்து பாலக் சென்னா மசாலா எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். இந்த கிரேவிய சப்பாத்தி பூரி இவற்றுக்கெல்லாம் சைடிஷ் ஆக வைத்து சாப்பிட ரொம்பவே அருமையாக இருக்கும். இதனால் 2 சப்பாத்தி சாப்பிடுபவர்கள் 4 சப்பாத்தி சாப்பிடுவார்கள். மேலும் சன்னா மசாலாவை செய்வது மிகவும் ஈஸி. அதுமட்டுமின்றி இதில் பாலக் கீரை சேர்ப்பதால் அசைவ சுவையே மிஞ்சிவிடக் கூடிய அளவிற்கு பிரமாதமாக இருக்கும். பாலக் கீரை சுவையும் ஆரோக்கியமும் நிறைந்தது. பாலக்கீரையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுப் பொருட்களுள் ஒன்று தான் கீரை.

வாரம் ஒருமுறை உணவில் கீரையை சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்துடன் பிற சத்துக்களும் கிடைக்கும். வைட்டமின் ஏ அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது. இதில் மெக்னீசியம், ஜிங்க், காப்பர் மற்றும் விட்டமின் – கே அதிகம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக இருப்பதற்கு உதவுகிறது. பாலக் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து கொண்டால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம். இதில் பொதுவான பருப்புக்கூட்டு மசியல் என செய்வோம். ஆனால் பாலக் கீரையில் சுவையான சென்னா மசாலாவும் செய்ய முடியும். இந்த பாலக் சென்னா மசாலா மிகவும் ருசியாக இருக்கும். அதோடு தோசை, சப்பாத்தி, இட்லி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

இதனையும் படியுங்கள் : அடிக்கடி சாம்பார் வைத்தாலும் பாலக் கீரை சேர்த்து இப்படி சாம்பார் செய்து பாருங்க சலிக்காம சாப்பிடுவாங்க!

Recipes AMP · Quick view
View full