Advertisement
சைவம்

காலை உணவுக்கு ருசியான பாலக் கீரை பருப்பு சாதம் இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

Advertisement

குழந்தைகளுக்கு மதிய உணவு என்றாலே நாம் பெரும்பாலும் தேர்வு செய்வது சாதம்தான். சிறிதளவு சாதம் கொடுத்தாலே குழந்தைகளுக்கு வயிறு நிரம்பிய திருப்தி கொடுப்பதோடு விளையாடுவதற்கு தேவையான ஆற்றலையும் அளிக்கக்கூடியது. நாம் இதுவரை குழந்தைகளுக்கு கொடுப்பதற்கான பால் சாதம், தயிர் ஓட்ஸ் கிச்சடி, தயிர் சாதம், தயிர் கிச்சடி, கீரை சாதம் என்று பலவகையான மதிய உணவு வகைகளை பார்த்திருப்போம். அந்த வரிசையில் இன்று நாம் பார்க்க இருப்பது பாலை கீரை பருப்பு சாதம்.

பாலக் கீரையை பருப்புடன் சேர்க்கும்போது குழந்தைகளுக்கு தேவையான புரோட்டினுடன் சேர்ந்து குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின்களும் கிடைக்கும். அரசி மூலம் கார்போஹைட்ரேட் கிடைக்கும் என்பதால் அனைத்து சத்துக்களும் அடங்கிய ஆற்றல் நிறைந்த உணவாக பாலக் கீரை பருப்பு சாதம் அமையும். பொதுவாக குழந்தைகள் உணவில் கீரையை சேர்க்க மாட்டார்கள். எனவே அவர்களுக்கு பிடித்த வகையில் கீரையை சேர்க்க நினைத்தால் இந்த பாலக் கீரை பருப்பு சாதம் ஒரு நல்ல சாய்ஸ்.

Advertisement

சுவையான ஆரோக்கியமான உணவாக இருப்பதால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சாப்பிடலாம். உங்களுக்கு பிடித்த கீரையை கூட நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.பொதுவாக கீரைகளில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிலும் பாலக்கீரையில்,போலிக் அமிலம் அதிகளவில் உள்ளதால், கர்ப்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது. இன்று பாலக்கீரையை வைத்து சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பாலக் கீரை பருப்பு சாதம் | palak dal rice recipe in tamil

Print Recipe
குழந்தைகளுக்கு மதிய உணவு என்றாலே நாம் பெரும்பாலும் தேர்வு செய்வது சாதம்தான். சிறிதளவு சாதம் கொடுத்தாலே குழந்தைகளுக்கு வயிறு நிரம்பிய திருப்தி கொடுப்பதோடு விளையாடுவதற்கு தேவையான ஆற்றலையும் அளிக்கக்கூடியது. நாம் இதுவரை குழந்தைகளுக்கு கொடுப்பதற்கான பால் சாதம், தயிர் ஓட்ஸ் கிச்சடி, தயிர் சாதம், தயிர் கிச்சடி, கீரை சாதம் என்று பலவகையான மதிய உணவு வகைகளை
Advertisement
பார்த்திருப்போம். அந்த வரிசையில் இன்று நாம் பார்க்க இருப்பது பாலை கீரை பருப்பு சாதம். பாலக் கீரையை பருப்புடன் சேர்க்கும்போது குழந்தைகளுக்கு தேவையான புரோட்டினுடன் சேர்ந்து குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின்களும் கிடைக்கும். பாலக் கீரை பருப்பு சாதம் அமையும். பொதுவாக குழந்தைகள் உணவில் கீரையை சேர்க்க மாட்டார்கள். எனவே அவர்களுக்கு பிடித்த வகையில் கீரையை சேர்க்க நினைத்தால் இந்த பாலக் கீரை பருப்பு சாதம் ஒரு நல்ல சாய்ஸ். சுவையான
Advertisement
ஆரோக்கியமான உணவாக இருப்பதால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சாப்பிடலாம்.
Course LUNCH
Cuisine Indian
Keyword palak dal rice
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 4 People
Calories 27

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 குக்கர்
  • 1 பவுள்

Ingredients

  • 1 கட்டு பாலக் கீரை
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 15 சின்ன வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 டீஸ்பூன் சாம்பார் தூள்
  • 10 பல் பூண்டு
  • உப்பு தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 டம்ளர் அரிசி
  • 1/4 கப் துவரம் பருப்பு

Instructions

  • முதலில் பாலக் கீரையை நன்கு அலசி விட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • அரிசி மற்றும் பருப்பை நன்றாக கழுவி 30 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் அதில் பாலக் கீரை சேர்த்து வதக்கவும்.
  • அதன்பிறகு உப்பு மற்றும் சாம்பார் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
  • பின்னர் அதில் ஊற வைத்த அரிசி பருப்பு சேர்த்து 3 விசில் வரை விட்டு அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பாலக் கீரை பருப்பு சாதம் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 27kcal | Protein: 2.86g | Fat: 3.63g | Sodium: 79mg | Potassium: 558mg | Fiber: 2.2g | Vitamin A: 937IU | Vitamin C: 28.1mg | Calcium: 99mg | Iron: 2.71mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

7 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

17 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

23 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

1 நாள் ago