இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல் என விதவிதமான உணவுகளை காலை வேலைக்குச் சமைத்துக் கொடுக்கிறோம். ஆனால் இவற்றில் உடம்பிற்கு தேவையான ஆரோக்கிய சத்துக்கள் இருக்கின்றதா என்று நாம் யோசிப்பதே கிடையாது. வயிறு நிறைய வேண்டும் என்பதற்காக மட்டும் தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். இப்படி குழந்தைகளுக்கும் அவர்கள் பசியில்லாமல் இருக்க வேண்டும் வயிறு நிறைய வேண்டும் என்று தான் நாம் நினைக்கிறோமே தவிர, அவர்கள் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அதற்காக இந்த உணவை கொடுக்க வேண்டும் என்று பலரும் யோசிப்பதில்லை. ஆனால் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சில காய்கறிகள் மற்றும் கீரைகளை ஒரு வாரத்திற்கு இரண்டு, மூன்று முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் ஆலோசனையாகும். அப்படி உடம்பிற்கு ஆரோக்கியம் தரக்கூடிய பசலைக்கீரை தோசை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
பசலைக்கீரையில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இது ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும். ஆரோக்கியமான இதயம்: ஃபோலேட் அதிகம் உள்ள பசலைக்கீரையை தவறாமல் உணவில் சேர்த்து வந்தால், இதயத்தை நன்கு ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். பசலைக்கீரையில் உள்ள கரோட்டினாய்டு என்னும் லுடின், கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மைக் கொண்டவை.
காய்கறி கீரை வகைகளை நம்முடைய குழந்தைகள் எப்போதுமே விரும்பி சாப்பிட மாட்டார்கள் பசலைக்கீரை கூட்டு, பொரியல் என்றால் வீட்டில் இருக்கும் பெரியவர்களும் சரி, சிறியவர்களும் சரி, விருப்பமாக சாப்பிட பிடிக்காது. ஆனால் அதே பசலைக்கீரையை அரைத்து இப்படி தோசை வார்த்துக் கொடுத்து பாருங்கள். வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். க்ரீன் தோசை வேணும் வேணும் என்று சொல்லுமளவிற்கு இதன் ருசி அவ்வளவு அருமையாக இருக்கும். உடல் ஆரோக்கியத்திற்கு பசலைக்கீரை எவ்வளவு முக்கியம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயமே. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
பாலக்கீரை தோசை | Palak Dosai Recipe In Tamil
Equipment
- 1 பெரிய பவுள்
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 200 கிராம் இட்லி மாவு
- 1/2 கட்டு பாலக்கீரை
- 2 பச்சை மிளகாய்
- 1 பெரிய வெங்காயம்
- தேங்காய் எண்ணெய், தேவையானஅளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- வெங்காயம்,ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். பசலைக்கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- அடுத்து அதில் பொடியாக நறுக்கிய பசலைக் கீரை, சிறிது உப்பு(கீரைக்கு மட்டும்) சேர்த்து பாதியளவு வெந்ததும் இறக்கவும். இவை அனைத்தையும் இட்லி மாவுடன் சேர்த்து. உப்பு சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும்.
- தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை ஊற்றி, சுற்றி சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
- சுவையான சத்தான பசலைக்கீரை தோசை ரெடி