Home சைவம் காலை டிபனுக்கு பாலக் பூரி இப்படி செய்து பாருங்க! இதை விட ஒரு ஹெல்தியான பூரி...

காலை டிபனுக்கு பாலக் பூரி இப்படி செய்து பாருங்க! இதை விட ஒரு ஹெல்தியான பூரி இருக்கவே முடியாது!

இரும்புச்சத்து அதிகம் நிறைந்த இந்த பாலக் கீரையை வாரத்தில் ஒரு நாளாவது நம்முடைய உணர்வோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் குழந்தைகள் கீரையை கடைந்து கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள். இப்படி பூரியோடு சேர்த்து பச்சை நிறத்தில் பாலக்கீரை பூரி சுட்டுக்கொடுத்து பாருங்கள். ஈவினிங் ஸ்நாக்ஸாக கொடுத்தால் கூட இரண்டு பூரியை வெறுமனே சாப்பிட்டு கொள்வார்கள். ஸ்னாக்ஸ் சாப்பிட்டது போலவும் இருக்கும். அதே சமயம் உடலுக்கு ஆரோக்கியம் சென்றது போலவும் இருக்கும்.

-விளம்பரம்-

பூரி எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடித்த உணவு. நாம கோதுமை மாவு, மைதா மாவில் தான் பூரி செய்வோம். ஆனால் இந்த பாலக் கீரையை சேர்த்து பூரியை செய்யப் போகின்றோம். கூடவே சில மசாலா பொருட்களை சேர்த்து போட்டு செய்ய போவதால் இதை சாப்பிட மிக மிக மனமாக இருக்கும். எளிமையான சூப்பரான இந்த சமையல் குறிப்பை யாருமே மிஸ் பண்ணாதீங்க.

இந்தப் பாலக்கீரையில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இது ரத்தத்தில் சிவப்பணுக்களின் அளவை அதிகரிக்க செய்வதில் இந்த கீரை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கீரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும். கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகளுக்கு இந்த கீரை ஒரு நல்ல மருந்து.  இதிலும் வைட்டமின் ஏ, சி, எண்ணற்ற போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதோடு, இரும்புச் சத்து, நார்ச்சத்து போன்ற சத்துக்களும் நிறைந்து இருப்பதோடு உடலுக்கு நல்ல குளுமையை தரும். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த பாலக்பூரி எப்படி சுடுவது என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

Print
No ratings yet

பாலக் பூரி | Palak Poori Recipe In Tamil

பாலக்கீரையில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.இது ரத்தத்தில் சிவப்பணுக்களின் அளவை அதிகரிக்க செய்வதில் இந்த கீரை முக்கிய பங்குவகிக்கிறது. இந்த கீரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும். கர்ப்பப்பைசார்ந்த பிரச்சினைகளுக்கு இந்த கீரை ஒரு நல்ல மருந்து.  இதிலும் வைட்டமின் ஏ, சி, எண்ணற்ற போன்ற ஊட்டச்சத்துக்கள்இருப்பதோடு, இரும்புச் சத்து, நார்ச்சத்து போன்ற சத்துக்களும் நிறைந்து இருப்பதோடுஉடலுக்கு நல்ல குளுமையை தரும். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த பாலக்பூரி எப்படி சுடுவதுஎன்று நாமும் தெரிந்து கொள்வோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Palak Poori
Yield: 4
Calories: 240kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 2 கப் கோதுமை மாவு
  • 1/2 கட்டு பாலக் கீரை
  • எண்ணெய் பொரிக்க
  • 1 தேக்கரண்டி ரவை
  • உப்பு தேவையானஅளவு

செய்முறை

  • பாலக் கீரையை சுத்தம் செய்து கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • கோதுமை மாவில் ரவை மற்றும் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.அரைத்த கீரையை மாவுடன் ஊற்றி பிசைந்துக் கொள்ளவும்.
     
  • தேவையெனில் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.
  • சிறிய எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து சிறு வட்ட பூரிகளாக தேய்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும்.
  • சுவையான பாலக் பூரி ரெடி.

Nutrition

Serving: 100g | Calories: 240kcal | Carbohydrates: 36g | Protein: 5.5g | Fat: 4.1g | Cholesterol: 25mg | Potassium: 104mg | Calcium: 16mg | Iron: 0.9mg