Advertisement
சைவம்

காலை டிபனுக்கு பாலக் பூரி இப்படி செய்து பாருங்க! இதை விட ஒரு ஹெல்தியான பூரி இருக்கவே முடியாது!

Advertisement

இரும்புச்சத்து அதிகம் நிறைந்த இந்த பாலக் கீரையை வாரத்தில் ஒரு நாளாவது நம்முடைய உணர்வோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் குழந்தைகள் கீரையை கடைந்து கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள். இப்படி பூரியோடு சேர்த்து பச்சை நிறத்தில் பாலக்கீரை பூரி சுட்டுக்கொடுத்து பாருங்கள். ஈவினிங் ஸ்நாக்ஸாக கொடுத்தால் கூட இரண்டு பூரியை வெறுமனே சாப்பிட்டு கொள்வார்கள். ஸ்னாக்ஸ் சாப்பிட்டது போலவும் இருக்கும். அதே சமயம் உடலுக்கு ஆரோக்கியம் சென்றது போலவும் இருக்கும்.

பூரி எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடித்த உணவு. நாம கோதுமை மாவு, மைதா மாவில் தான் பூரி செய்வோம். ஆனால் இந்த பாலக் கீரையை சேர்த்து பூரியை செய்யப் போகின்றோம். கூடவே சில மசாலா பொருட்களை சேர்த்து போட்டு செய்ய போவதால் இதை சாப்பிட மிக மிக மனமாக இருக்கும். எளிமையான சூப்பரான இந்த சமையல் குறிப்பை யாருமே மிஸ் பண்ணாதீங்க.

Advertisement

இந்தப் பாலக்கீரையில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இது ரத்தத்தில் சிவப்பணுக்களின் அளவை அதிகரிக்க செய்வதில் இந்த கீரை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கீரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும். கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகளுக்கு இந்த கீரை ஒரு நல்ல மருந்து.  இதிலும் வைட்டமின் ஏ, சி, எண்ணற்ற போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதோடு, இரும்புச் சத்து, நார்ச்சத்து போன்ற சத்துக்களும் நிறைந்து இருப்பதோடு உடலுக்கு நல்ல குளுமையை தரும். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த பாலக்பூரி எப்படி சுடுவது என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

பாலக் பூரி | Palak Poori Recipe In Tamil

Advertisement
Print Recipe
பாலக்கீரையில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.இது ரத்தத்தில் சிவப்பணுக்களின் அளவை அதிகரிக்க செய்வதில் இந்த கீரை முக்கிய பங்குவகிக்கிறது. இந்த கீரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும். கர்ப்பப்பைசார்ந்த பிரச்சினைகளுக்கு இந்த கீரை ஒரு நல்ல
Advertisement
மருந்து.  இதிலும் வைட்டமின் ஏ, சி, எண்ணற்ற போன்ற ஊட்டச்சத்துக்கள்இருப்பதோடு, இரும்புச் சத்து, நார்ச்சத்து போன்ற சத்துக்களும் நிறைந்து இருப்பதோடுஉடலுக்கு நல்ல குளுமையை தரும். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த பாலக்பூரி எப்படி சுடுவதுஎன்று நாமும் தெரிந்து கொள்வோம்.
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword Palak Poori
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 240

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 2 கப் கோதுமை மாவு
  • 1/2 கட்டு பாலக் கீரை
  • எண்ணெய் பொரிக்க
  • 1 தேக்கரண்டி ரவை
  • உப்பு தேவையானஅளவு

Instructions

  • பாலக் கீரையை சுத்தம் செய்து கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • கோதுமை மாவில் ரவை மற்றும் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.அரைத்த கீரையை மாவுடன் ஊற்றி பிசைந்துக் கொள்ளவும்.
     
  • தேவையெனில் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.
  • சிறிய எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து சிறு வட்ட பூரிகளாக தேய்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும்.
  • சுவையான பாலக் பூரி ரெடி.

Nutrition

Serving: 100g | Calories: 240kcal | Carbohydrates: 36g | Protein: 5.5g | Fat: 4.1g | Cholesterol: 25mg | Potassium: 104mg | Calcium: 16mg | Iron: 0.9mg
Advertisement
Prem Kumar

Recent Posts

பலாக்காய் கிடைத்தால் ஒரு முறை ருசியான இந்த பலாக்காய் பட்டாணி வறுவல் செய்து பாருங்கள் ருசியில் இதை அடித்துக்கவே முடியாது!!

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…

1 மணி நேரம் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

1 மணி நேரம் ago

ஒரு முறை சுவையான இந்த சிக்கன் சாம்பார் வைத்து அதனுடன் சிக்கன் வறுவல் வைத்து சாப்பிட்டு பாருங்கள் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

3 மணி நேரங்கள் ago

இதுவரை மோர், ரசம் என தனித்தனியாக சாப்பிட்ருப்பிங்க ஆனால் மோர் ரசம் சாப்பிட்டது உண்டா? இல்லை என்றால் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

ரசம் சாப்பிட்டு இருப்பீங்க, மோர் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இது இரண்டையும் சேர்த்து மோர் ரசம் செய்வது எப்படி என்று…

4 மணி நேரங்கள் ago

வளர்பிறை சதுர்த்தி வழிபாடு செய்து விநாயகர் பெருமான் அருளை முழுமையாக பெறுங்கள்!

பொதுவாக இருக்கின்ற 16 விதிகளில் நான்காவது ரீதியாக வரக்கூடியது சதுர்த்தி திதி. பொதுவாக ஒவ்வொரு தெய்வத்திற்கும் நட்சத்திரம் திதி கிழமை…

5 மணி நேரங்கள் ago

இந்த வெயிலுக்கு இளநீர் சர்பத் செஞ்சு குடித்து பாருங்க!!!

அடிக்கிற வெயிலுக்கு நமக்கு சோறு கூட தேவையில்லை ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தான் தோணும் அந்த வகையில இயற்கையாகவே…

6 மணி நேரங்கள் ago