கீரை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பாலக் கீரையில் சுவையான பாலக் ரவை அப்பம் செய்து கொடுங்கள்!!

அப்பம் ஒரு பாரம்பரிய உணவாகும். இது தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமானது. அப்பம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்த ரெசிபியாகும். அப்பத்தில் பல வகைகள் இருக்கின்றன. ஆனால் வீடுகளில் பொதுவான நான்கு வகையில் தயாரிக்கப்படுகிறது. அவை பாலாப்பம், வெள்ளையாப்பம், முட்டையாப்பம், இனிப்பு அப்ப

By Prem Kumar · 1/4/2026

அப்பம் ஒரு பாரம்பரிய உணவாகும். இது தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமானது. அப்பம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்த ரெசிபியாகும். அப்பத்தில் பல வகைகள் இருக்கின்றன. ஆனால் வீடுகளில் பொதுவான நான்கு வகையில் தயாரிக்கப்படுகிறது. அவை பாலாப்பம், வெள்ளையாப்பம், முட்டையாப்பம், இனிப்பு அப்பம் என நான்கு வகைகளில் தயாரிக்கபடுகிறது. வழக்கமாக ஆப்பத்தை பச்சரிசியை வைத்து தான் செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் பார்க்க போகும் ரெசிபியில் பாலக் கீரை, ரவை மற்றும் கோதுமை மாவு சேர்த்து சத்தான பாலக் ரவை ஆப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பாலக் கீரையில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இரத்த சோகை ஏற்படாமல் இருப்பதோடு, உடலும் நன்கு வலுவுடன் இருக்கும். சிலருக்கு இந்த கீரையை கடைந்து சாப்பிட பிடிக்காது. ஆனால் அந்த கீரையை அப்பம் போல் செய்து சாப்பிட்டால், அதன் சுவை அருமையாக இருக்கும். உங்களுக்கு மாலை நேரத்தில் டீ காபியுடன் ஏதேனும் சாப்பிட விரும்பினால் இந்த அப்பம் செய்து சாப்பிடுங்கள் நன்றாக இருக்கும்.

குழந்தைகளும் மாலை வேளையில் ஸ்நாக்ஸ் கேட்டால் அவர்களுக்கு இந்த அப்பம் செய்து கொடுங்கள் விரும்பி சாப்பிடுவார்கள். எப்பவுமே எண்ணெயில் பொரித்த சிப்ஸ் அந்த மாதிரி கொடுக்காமல் கொஞ்சம் பாரம்பரியமா ஏதாவது அவர்களுக்கு செய்து கொடுத்தால் அவங்களும் விரும்பி சாப்பிடுவார்கள் அதோடு நம்முடைய பாரம்பரியமான சில உணவுகளை மறக்காமல் இருப்பார்கள். இதை செய்வதற்கு வீட்டில் உள்ள பொருட்கள் மட்டுமே தேவைப்படும்.

இந்த அப்பத்தை யாருடைய உதவியும் இல்லாமல் நீங்களே தயார் செய்யலாம். இந்த ரெசிபியை ஒரு முறை காலை உணவாக உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து பாருங்கள் தினமும் உங்களை அப்பம் செய்து தர சொல்லி தொந்தரவு செய்வார்கள். இதனை நீங்கள் நாட்டு சர்க்கரை, ஏதேனும் கிரேவி அல்லது சட்னியுடன் தொட்டு சாப்பிடலாம் மிகவும் ருசியாக இருக்கும். இப்போது சுவையான பாலக் ரவை அப்பம் எப்படி செய்வதென்று பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : கேரளா ஸ்டைல் நேந்திரம்பழம் அப்பம் இப்படி ஈசியாக வீட்டிலே செய்து பாருங்க! ஒரு அப்பம் கூட மிச்சமாகாது!

Recipes AMP · Quick view
View full