கேரளா ஸ்டைல் நேந்திரம்பழம் அப்பம் இப்படி ஈசியாக வீட்டிலே செய்து பாருங்க! ஒரு அப்பம் கூட மிச்சமாகாது!

- Advertisement -

மாலை வேளையில் டீ யுடன் சாப்பிடுவதற்கு ஒரு இனிப்பு சேர்ந்த அப்பத்தை எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் . இந்த அப்பம் செய்ய நம் வீட்டில் இருக்கும் பொருட்களே போதும். பெரும்பாலும் கோதுமை மாவு, ரவை, அரிசி மாவில் அப்பம் செய்வார்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக நேந்திரம்பழம் சேர்த்து ஒரு ஆப்பம் ரெசிபியை தான் இன்னைக்கு  தெரிஞ்சுக்க போறோம். இந்த அப்பத்தை சுட்டு கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிச்சயமாக விரும்பி சாப்பிடுவார்கள். பண்டிகை நாட்களில் கூட பிரசாதமாக இந்த அப்பத்தை நாம் செய்து கொள்ளலாம். பத்தே நிமிடத்தில் நேந்திரம்பழம் அப்பம், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்து விடலாம்.

-விளம்பரம்-

வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு ஆரோக்கியமான உணவினை சமைத்து தர வேண்டும். அப்போதுதான் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். கோதுமை மாவு வைத்து மிக மிக சுலபமான சுவையாக பஞ்சு போல அப்பம் எப்படி செய்வது என்று தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம் நேந்திரம்பழம் அப்பம் தோசை கல்லில் சாஃப்ட் ஆக கல்தோசை போல வார்த்து இதை சாப்பிடும் போது அவ்வளவு சுவை இருக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

- Advertisement -
Print
5 from 1 vote

நேந்திரம்பழம் அப்பம் | Nendram pazha Appam in Tamil

மாலை வேளையில் டீ யுடன் சாப்பிடுவதற்கு ஒரு இனிப்பு சேர்ந்த அப்பத்தை எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான்இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் . இந்த அப்பம் செய்ய நம் வீட்டில் இருக்கும் பொருட்களே போதும்.பெரும்பாலும் கோதுமை மாவு, ரவை, அரிசி மாவில் அப்பம் செய்வார்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாகநேந்திரம்பழம் சேர்த்து ஒரு ஆப்பம் ரெசிபியை தான் இன்னைக்கு  தெரிஞ்சுக்கபோறோம். இந்த அப்பத்தை சுட்டு கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிச்சயமாகவிரும்பி சாப்பிடுவார்கள். பண்டிகை நாட்களில் கூட பிரசாதமாக இந்த அப்பத்தை நாம் செய்துகொள்ளலாம். பத்தே நிமிடத்தில் நேந்திரம்பழம் அப்பம், வீட்டில் இருக்கும் பொருட்களைவைத்தே செய்து விடலாம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner, snacks
Cuisine: Kerala
Keyword: Banana Appam
Yield: 4
Calories: 87kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 நன்கு பழுத்த நேந்திரம் பழம்
  • 1/2 கப் கோதுமை மாவு
  • 2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு
  • 3 டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  • 1/4 டீஸ்பூன் சமையல்சோடா
  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய்த் தூள்
  • 1/2 டீஸ்பூன் சுக்குத் தூள்
  • 200 மில்லி எண்ணெய்

செய்முறை

  • நேந்திரம் பழத்தின் தோலை உரித்து வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.  ஒர் அகலமான பாத்திரத்தில் சர்க்கரை. கால் கப் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்துக் கொள்ளவும்.
  • சர்க்கரை நன்கு கரைந்ததும் அதில் கோதுமை மாவு, மைதா மாவு, அரிசி மாவு, சமையல் சோடா சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும்.
  • அதில் ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள் சேர்த்து கவந்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெயை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, காயவைக்கவும்.
  • பின்னர் நறுக்கிய நேந்திரம்பழத் துண்டுகளை மாவில் இரு பக்கங்களிலும் நன்கு தோய்த்து எண்ணெயில் போட்டு, குறைந்த சூட்டில் வைத்து வேகவிடவும். பிறகு மெதுவாகத் திருப்பிப் போட்டு நன்கு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சுவையான நேந்திரம்பழம் அப்பம் தயார்

Nutrition

Serving: 100g | Calories: 87kcal | Carbohydrates: 11.5g | Protein: 1.2g | Fat: 4g | Vitamin A: 5.4IU | Vitamin C: 0.3mg | Calcium: 2.1mg | Iron: 0.2mg