Advertisement
சைவம்

வெரைட்டி ரைஸ் க்கு பலாக்கொட்டை சுக்கா செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

Advertisement

பொதுவான பலாப்பழம் வாங்கி சாப்பிட்டு அதில் இருக்கிற கொட்டையை கீழே போடாமல் அதை வைத்து குருமா இல்லன்னா சாம்பார் பலாக்கொட்டையில குருமா மற்றும் சாம்பார் வச்சா டேஸ்ட்டு அட்டகாசமா இருக்கும். ஆனா இன்னைக்கு நம்ம பலாக்கொட்டையை வச்சு செய்ய கூடிய சூப்பரான சுக்கா தான் பாக்க போறோம்.

இந்த பலாக்கொட்டை தக்காளி சாதம் தயிர் சாதம் புளி சாதம் லெமன் சாதம் வெஜிடபிள் பிரியாணி தேங்காய் சாதம் புலாவ் அப்படி என்று எல்லாத்துக்குமே சைட் டிஷ்ஷா வைத்து சாப்பிடலாம். டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும். நம்ம இதுவரைக்கும் மட்டன் சுக்கா சிக்கன் சுக்கா முட்டை சுக்கா அப்டின்னு நிறைய சுக்கா வகைகள் செஞ்சு சாப்பிட்டு இருப்போம்.

Advertisement
Advertisement

ஆனா இந்த பலாக்கொட்டை சுக்கா உன் வாழ்க்கைல நீங்க ஒரு தடவை கூட செஞ்சு சாப்பிட்டு இருக்க மாட்டீங்க இப்ப நம்ம சொல்ற மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் நீங்க எப்ப பலாப்பழம் வாங்குனாலும் அதுல இருக்க பலாக்கொட்டையை வைத்து நீங்கள் தான் செஞ்சு சாப்பிடுவீங்க. இப்ப வாங்க இந்த பலாக்கொட்டையை வச்சு எப்படி சூப்பரான சுக்கா செய்வது என பார்க்கலாம்.

பலாக்கொட்டை சுக்கா | Palakottai Chukka Recipe In Tamil

Print Recipe
பொதுவான பலாப்பழம் வாங்கி சாப்பிட்டு அதில் இருக்கிற கொட்டையை கீழே போடாமல் அதை வைத்து குருமா இல்லன்னா சாம்பார் பலாக்கொட்டையில குருமா மற்றும் சாம்பார் வச்சா டேஸ்ட்டு அட்டகாசமா இருக்கும். ஆனா இன்னைக்கு நம்ம பலாக்கொட்டையை வச்சு செய்ய
Advertisement
கூடிய சூப்பரான சுக்கா தான் பாக்க போறோம். நம்ம இதுவரைக்கும் மட்டன் சுக்கா சிக்கன் சுக்கா முட்டை சுக்கா அப்டின்னு நிறைய சுக்கா வகைகள் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். இந்த பலாக்கொட்டையை வச்சு எப்படி சூப்பரான சுக்கா செய்வது என பார்க்கலாம்.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Palakotai Chukka
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 94

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் பலாக்கொட்டை
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 4 காய்ந்த மிளகாய்
  • 1 டீஸ்பூன் மல்லி விதைகள்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 1 துண்டு தேங்காய்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 4 முந்திரி
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் பலாக்கொட்டையை தோல் உரித்து குக்கரில் சேர்த்து உப்பு போட்டு இரண்டு விசில் விட்டு எடுக்கவும்
  • ஒரு கடாய் சீரகம் சோம்பு மல்லி விதைகள் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்
  • பட்டை கிராம்பு ஏலக்காய் மிளகு அனைத்தையும் சேர்த்து வறுத்து அனைத்தையும் ஆற வைக்கும் மிக்ஸிஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம்பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளிக்க அதனுடன் பெரிய வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்
  • இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போன பிறகு தக்காளியும் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்
  • வேக வைத்துள்ள பலாக்கொட்டையை சேர்த்து தேவையான அளவு உப்பு அரைத்து வைத்துள்ள பொடி சேர்த்து நன்றாக கிளறவும்
  • பத்து நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான பலாக்கொட்டை சுக்கா தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 94kcal | Carbohydrates: 29g | Protein: 7.6g | Sodium: 84mg | Potassium: 84mg | Fiber: 4g | Iron: 1mg
Advertisement
Ramya

Recent Posts

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

59 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

5 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

15 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

17 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 நாள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

2 நாட்கள் ago