வெரைட்டி ரைஸ் க்கு பலாக்கொட்டை சுக்கா செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

- Advertisement -

பொதுவான பலாப்பழம் வாங்கி சாப்பிட்டு அதில் இருக்கிற கொட்டையை கீழே போடாமல் அதை வைத்து குருமா இல்லன்னா சாம்பார் பலாக்கொட்டையில குருமா மற்றும் சாம்பார் வச்சா டேஸ்ட்டு அட்டகாசமா இருக்கும். ஆனா இன்னைக்கு நம்ம பலாக்கொட்டையை வச்சு செய்ய கூடிய சூப்பரான சுக்கா தான் பாக்க போறோம்.

-விளம்பரம்-

இந்த பலாக்கொட்டை தக்காளி சாதம் தயிர் சாதம் புளி சாதம் லெமன் சாதம் வெஜிடபிள் பிரியாணி தேங்காய் சாதம் புலாவ் அப்படி என்று எல்லாத்துக்குமே சைட் டிஷ்ஷா வைத்து சாப்பிடலாம். டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும். நம்ம இதுவரைக்கும் மட்டன் சுக்கா சிக்கன் சுக்கா முட்டை சுக்கா அப்டின்னு நிறைய சுக்கா வகைகள் செஞ்சு சாப்பிட்டு இருப்போம்.

- Advertisement -

ஆனா இந்த பலாக்கொட்டை சுக்கா உன் வாழ்க்கைல நீங்க ஒரு தடவை கூட செஞ்சு சாப்பிட்டு இருக்க மாட்டீங்க இப்ப நம்ம சொல்ற மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் நீங்க எப்ப பலாப்பழம் வாங்குனாலும் அதுல இருக்க பலாக்கொட்டையை வைத்து நீங்கள் தான் செஞ்சு சாப்பிடுவீங்க. இப்ப வாங்க இந்த பலாக்கொட்டையை வச்சு எப்படி சூப்பரான சுக்கா செய்வது என பார்க்கலாம்.

Print
No ratings yet

பலாக்கொட்டை சுக்கா | Palakottai Chukka Recipe In Tamil

பொதுவான பலாப்பழம் வாங்கி சாப்பிட்டு அதில் இருக்கிற கொட்டையை கீழே போடாமல் அதை வைத்து குருமா இல்லன்னா சாம்பார் பலாக்கொட்டையில குருமா மற்றும் சாம்பார் வச்சா டேஸ்ட்டு அட்டகாசமா இருக்கும். ஆனா இன்னைக்கு நம்ம பலாக்கொட்டையை வச்சு செய்ய கூடிய சூப்பரான சுக்கா தான் பாக்க போறோம். நம்ம இதுவரைக்கும் மட்டன் சுக்கா சிக்கன் சுக்கா முட்டை சுக்கா அப்டின்னு நிறைய சுக்கா வகைகள் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். இந்த பலாக்கொட்டையை வச்சு எப்படி சூப்பரான சுக்கா செய்வது என பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Palakotai Chukka
Yield: 4
Calories: 94kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பலாக்கொட்டை
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 4 காய்ந்த மிளகாய்
  • 1 டீஸ்பூன் மல்லி விதைகள்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 1 துண்டு தேங்காய்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 4 முந்திரி
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பலாக்கொட்டையை தோல் உரித்து குக்கரில் சேர்த்து உப்பு போட்டு இரண்டு விசில் விட்டு எடுக்கவும்
  • ஒரு கடாய் சீரகம் சோம்பு மல்லி விதைகள் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்
  • பட்டை கிராம்பு ஏலக்காய் மிளகு அனைத்தையும் சேர்த்து வறுத்து அனைத்தையும் ஆற வைக்கும் மிக்ஸிஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம்பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளிக்க அதனுடன் பெரிய வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்
  • இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போன பிறகு தக்காளியும் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்
  • வேக வைத்துள்ள பலாக்கொட்டையை சேர்த்து தேவையான அளவு உப்பு அரைத்து வைத்துள்ள பொடி சேர்த்து நன்றாக கிளறவும்
  • பத்து நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான பலாக்கொட்டை சுக்கா தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 94kcal | Carbohydrates: 29g | Protein: 7.6g | Sodium: 84mg | Potassium: 84mg | Fiber: 4g | Iron: 1mg