கிராமங்களில் பல் முளைத்த குழந்தைகளுக்கு செய்து கொடுக்கு ருசியான பல்லு கொழுக்கட்டை இப்படி செய்து பாருங்க!

பால் கொழுக்கட்டை கேள்வி பட்டிருக்கோம் அது என்னடா பல்லு கொழுக்கட்டை அப்படின்னு பாக்குறீங்களா. இந்த பல்லு கொழுக்கட்டை அப்படிங்கறது பிறந்த குழந்தைகளுக்கு முதல் முதல்ல பல்லும் வந்ததுக்கு அப்புறமா செய்து கொடுக்கிற கொழுக்கட்டை. எங்க ஊரு கிராமங்கள்ல இந்த மாதிரி தான் பல்லு கொழுக்கட்டை செ

By ·

பால் கொழுக்கட்டை கேள்வி பட்டிருக்கோம் அது என்னடா பல்லு கொழுக்கட்டை அப்படின்னு பாக்குறீங்களா. இந்த பல்லு கொழுக்கட்டை அப்படிங்கறது பிறந்த குழந்தைகளுக்கு முதல் முதல்ல பல்லும் வந்ததுக்கு அப்புறமா செய்து கொடுக்கிற கொழுக்கட்டை. எங்க ஊரு கிராமங்கள்ல இந்த மாதிரி தான் பல்லு கொழுக்கட்டை செய்வாங்க அது எப்படி செய்வாங்க அப்படின்னு தெரிஞ்சுக்கறதுக்காக இந்த பதிவை பார்த்துக்கோங்க.

எப்போதும் செய்ற கொழுக்கட்டையே கொஞ்சம் டிஃபரண்டா டேஸ்ட்டா இரண்டு வெரைட்டியா செய்வாங்க இது குழந்தை எடுத்து கடிச்சு சாப்பிட்டு நமக்கு கொடுக்க வேண்டும் அப்படிங்கறதுக்காக. இந்த கொழுக்கட்டை எதுக்கு பண்றாங்கன்னா குழந்தைகள் கடிக்கும்போது அவங்களுக்கு பல்லுக்கு ஒரு வலிமையா இருக்கணும் அப்படிங்கிறதுக்காக இதை செஞ்சு கொடுப்பாங்க. அது மட்டும் இல்லாம குழந்தைகளுக்கு பல்லு வளரும் போது ஒரு மாதிரி பீலிங் இருக்குமே ஏதாவது எடுத்து கடிக்கணும் அப்படின்னு தோண்னிட்டு இருக்கும்.

அது மாதிரி இருக்கு அதனால இந்த மாதிரி கொழுக்கட்டை செய்து கொடுக்கிறது வழக்கமா வச்சிருக்காங்க. இந்த டைம்ல சின்னதா ஒரு செலிப்ரேஷன் மாதிரி கூட பண்ணுவாங்க அதாவது பணம், படிக்கிற சம்பந்தமான பொருட்கள், கொழுக்கட்டை இந்த மாதிரி வச்சிட்டு இதுல எது குழந்தை முதல்ல எடுக்கிறாங்க அப்படிங்கிறதையும் பார்ப்பாங்க. இந்த மாதிரி பல்லு கொழுக்கட்டை எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ள இருக்கோம் வாங்க தெரிஞ்சுக்கலாம். இந்த சுவையான குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய பல்லு கொழுக்கட்டை எப்படி செய்வது அப்படின்னு பார்க்கலாம் வாங்க.

Recipes AMP · Quick view
View full