- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- deserts
பால் கொழுக்கட்டை கேள்வி பட்டிருக்கோம் அது என்னடா பல்லு கொழுக்கட்டை அப்படின்னு பாக்குறீங்களா. இந்த பல்லு கொழுக்கட்டை அப்படிங்கறது பிறந்த குழந்தைகளுக்கு முதல் முதல்ல பல்லும் வந்ததுக்கு அப்புறமா செய்து கொடுக்கிற கொழுக்கட்டை. எங்க ஊரு கிராமங்கள்ல இந்த மாதிரி தான் பல்லு கொழுக்கட்டை செய்வாங்க அது எப்படி செய்வாங்க அப்படின்னு தெரிஞ்சுக்கறதுக்காக இந்த பதிவை பார்த்துக்கோங்க.
எப்போதும் செய்ற கொழுக்கட்டையே கொஞ்சம் டிஃபரண்டா டேஸ்ட்டா இரண்டு வெரைட்டியா செய்வாங்க இது குழந்தை எடுத்து கடிச்சு சாப்பிட்டு நமக்கு கொடுக்க வேண்டும் அப்படிங்கறதுக்காக. இந்த கொழுக்கட்டை எதுக்கு பண்றாங்கன்னா குழந்தைகள் கடிக்கும்போது அவங்களுக்கு பல்லுக்கு ஒரு வலிமையா இருக்கணும் அப்படிங்கிறதுக்காக இதை செஞ்சு கொடுப்பாங்க. அது மட்டும் இல்லாம குழந்தைகளுக்கு பல்லு வளரும் போது ஒரு மாதிரி பீலிங் இருக்குமே ஏதாவது எடுத்து கடிக்கணும் அப்படின்னு தோண்னிட்டு இருக்கும்.
அது மாதிரி இருக்கு அதனால இந்த மாதிரி கொழுக்கட்டை செய்து கொடுக்கிறது வழக்கமா வச்சிருக்காங்க. இந்த டைம்ல சின்னதா ஒரு செலிப்ரேஷன் மாதிரி கூட பண்ணுவாங்க அதாவது பணம், படிக்கிற சம்பந்தமான பொருட்கள், கொழுக்கட்டை இந்த மாதிரி வச்சிட்டு இதுல எது குழந்தை முதல்ல எடுக்கிறாங்க அப்படிங்கிறதையும் பார்ப்பாங்க. இந்த மாதிரி பல்லு கொழுக்கட்டை எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ள இருக்கோம் வாங்க தெரிஞ்சுக்கலாம். இந்த சுவையான குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய பல்லு கொழுக்கட்டை எப்படி செய்வது அப்படின்னு பார்க்கலாம் வாங்க.
Ingredients
Method
முதலில் பச்சரிசியை ஊறவைத்து கொள்ள வேண்டும். ஒரு அரை மணி நேரம் பச்சரிசி ஊறிய பிறகு தண்ணீரை முழுவதுமாக வடித்து விட்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து இடித்து சலித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு தேங்காய் உடைத்து விட்டு தேங்காய் சிலீலுகளை நீக்கி விட்டு தேங்காய் துண்டுகளை பொடிசாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் அதில் அரிசி மாவை சேர்த்து லேசாக வதக்கி எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் வெல்லம், சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ள வேண்டும். பிறகு வதக்கி வைத்துள்ள பச்சரிசி மாவில் தேங்காய் நறுக்கி வைத்த தேங்காயை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இரண்டையும் நன்றாக கலந்து விட்ட பிறகு ஏலக்காய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு காய்ச்சிய பாகை சூடாக இருக்கும் பொழுதே கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக கலந்து கொழுக்கட்டை பிடிக்கும் அளவிற்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அவைகளை சிறுசிறு கொழுக்கட்டைகளாக குழந்தை கையால் எடுத்து வாயில் வைக்கும் அளவிற்கு சிறு சிறுகொழுக்கட்டைகளாக செய்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுத்தால் சுவையான பல்லுகொழுக்கட்டை தயார்.






