பண வரவு அதிகரிக்க வீட்டில் வைக்க வேண்டிய ஐந்து பொருட்கள்
வீட்டில் செல்வம் செழிக்க வேண்டும் என்றால் நாம் கடுமையாக உழைக்க வேண்டும் ஆனால் என்னதான் கடுமையாக உழைத்தாலும் நம் வீட்டில் செல்வம் செழிக்காமல் பணவரவு அதிகரிக்காமல் இருந்தால் அதற்காக ஒரு சில வாஸ்து பரிகாரங்களை செய்வது நல்லது. நம் வீடுகளில் நமக்கு தேவையான பொருட்கள் நாம் நிறைய வைத்திர
வீட்டில் செல்வம் செழிக்க வேண்டும் என்றால் நாம் கடுமையாக உழைக்க வேண்டும் ஆனால் என்னதான் கடுமையாக உழைத்தாலும் நம் வீட்டில் செல்வம் செழிக்காமல் பணவரவு அதிகரிக்காமல் இருந்தால் அதற்காக ஒரு சில வாஸ்து பரிகாரங்களை செய்வது நல்லது. நம் வீடுகளில் நமக்கு தேவையான பொருட்கள் நாம் நிறைய வைத்திருப்போம். அப்படி நாம் வைத்திருக்கையில் அந்த பொருட்களை வாஸ்து சாஸ்திரப்படி வைத்திருக்க மாட்டோம். அதனால் கூட நம் வீட்டில் நிறைய பண பிரச்சினைகள் வரலாம். எனவே ஒரு சில வாஸ்து சாஸ்திரங்களை பின்பற்றி நம் வீட்டில் பொருட்களை சரியாக வைப்பதன் மூலம் கூட நம் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.
வீட்டில் வாஸ்து சாஸ்திரம்
வாஸ்து என்பது இந்துக்களின் ஒரு விதமான நம்பிக்கை என்றே சொல்லலாம். நாம் நினைத்த மாதிரியான ஒரு வீடு நமக்கு அமைய வேண்டும் என்றால் நாம் சில வாஸ்து சாஸ்திரங்களை பயன்படுத்தி தான் அனைத்து காரியங்களையும் செய்ய வேண்டும். வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை அழைத்து நேர்மறை ஆற்றலை பெறுவதற்கு வாஸ்து சாஸ்திரம் மிகவும் முக்கியம். எதிர்மறை ஆற்றல் மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவே வீட்டில் எதிர்மறை ஆற்றலை அளித்து நேர்மறை ஆற்றலை பெருக்குவதற்கு நாம் தான் முயற்சி செய்ய வேண்டும். பொருளாதார ரீதியாக சிக்கலில் இருப்பவர்கள் இந்த ஒரு சில விஷயங்களை செய்வதன் மூலம் வீட்டில் பண வரவு அதிகரிக்கும் பண பிரச்சினைகள் தீர்ந்து போகும்.
சங்குப்பூ
இந்த உலகில் இருக்கும் அனைவருமே பணத்திற்காக தான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கையில் வீட்டில் நிதி நிலைமை அதிகரிக்க மூன்று சங்கு பூக்களை எடுத்து வீட்டில் உள்ள பானைகளில் போடவும். இதனை திங்கள்கிழமை அல்லது சனிக்கிழமைகளில் செய்வது நல்லது. அப்படி செய்யும்போது வீட்டில் நிதிநிலைமை அதிகரிக்கும். பண கஷ்டங்கள் தீர்ந்து போகும்.
குதிரையின் கால் வளையம்
இந்துக்களின் மத நம்பிக்கையின் படி குதிரையின் கால் வளையம் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இந்த குதிரையின் கால் வளையத்தில் மஞ்சள் தடவி அதனை வீட்டில் கதவில் தொங்க விட்டாள் வீட்டில் பண வரவு அதிகரிக்கும் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து போகும் என்பது ஐதீகம்.
கிராசுலா மரம்
இந்த கிராசுலா மரம் பணமரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த செடியை வீட்டின் வடக்கு பகுதியில் வைத்தால் வீட்டில் பண கஷ்டங்கள் ஏற்படாது என்பது ஐதீகம். காந்தம் போல் பணத்தை ஈர்க்கும் சக்தி இந்த கிராசுலா மரத்திற்கு உள்ளது.
சீன நாணயம்
இந்துக்களின் மத நம்பிக்கையின் படி மூன்று சீன நாணயங்களை எடுத்து கயிற்று கட்டிலில் கட்டி வைத்தால் வீட்டில் எப்பொழுதும் பணம் நிலைக்கும் என்பது ஐதீகம். இந்துக்களின் மத நம்பிக்கையின்படி சீன நாணயம் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.
பணப்பையுடன் இருக்கும் குபேரர் சிலை
குபேரர் செல்வத்திற்கு அதிபதியானவர். எனவே குபேரர் சிலையை வீட்டில் வைப்பதும் மிகவும் நல்லது. அதிலும் பணப்பையுடன் இருக்கும் குபேரர் சிலையை வீட்டில் வைப்பது வீட்டிற்கு பணவரவை அதிகரித்துக் கொடுக்கும்.
இதனையும் படியுங்கள் : வீட்டில் பணம் அதிகரிக்க செய்ய வேண்டிய எளிமையான ஒரு விஷயம்