பஞ்ச தத்வ கிருஷ்ணன் மந்திரம்!!
இந்த பொல்லாத உலகத்தில் நிறைய மாயைகளும் போலிகளும் உள்ளது. இது அனைத்திலிருந்தும் விடுபட்டு தெய்வத்தை சரணாகதி அடைவதற்கு அவருடைய அருளை முழுவதுமாக பெறுவதற்கும் வறுமை இல்லாமல் செல்வ செழிப்போடு வாழ்வதற்கும் இந்த கீழ்க்கண்ட மந்திரங்களை கூறி வாழ்க்கையில் பல நற்பலன்களை பெறுங்கள். நல்வழியை
இந்த பொல்லாத உலகத்தில் நிறைய மாயைகளும் போலிகளும் உள்ளது. இது அனைத்திலிருந்தும் விடுபட்டு தெய்வத்தை சரணாகதி அடைவதற்கு அவருடைய அருளை முழுவதுமாக பெறுவதற்கும் வறுமை இல்லாமல் செல்வ செழிப்போடு வாழ்வதற்கும் இந்த கீழ்க்கண்ட மந்திரங்களை கூறி வாழ்க்கையில் பல நற்பலன்களை பெறுங்கள். நல்வழியை காண்பிக்க கூடிய இந்த கிருஷ்ணன் மந்திரத்தை உச்சரித்து வந்தால் நிச்சயமாக நல்லதே நடக்கும். அந்த மந்திரங்களை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.
1. பஞ்ச தத்வ மந்திரம்
“ஜெய ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய பிரபு நித்யானந்த ஸ்ரீ அத்வைத கதாதர ஸ்ரீவாஸாதி கௌர பக்த விருந்த”
2. ஹரே கிருஷ்ண மஹா மந்திரம்
“ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே”
ஜெயஸ்ரீ கிருஷ்ணன் சைதன்ய என்று தொடங்கக்கூடிய பஞ்சதத்வ மந்திரத்தை உச்சரிப்பது பஞ்ச தத்வ தெய்வங்களை வணங்குவதாக அர்த்தம். ஹரே கிருஷ்ண மந்திரத்தை அறிமுகப்படுத்தி அதன் மூலமாக கிருஷ்ண பக்தியை பரப்பியவர் தான் ஸ்ரீ சைதன்ய மகா பிரபு. அதனால் தான் இந்த மகா மந்திரத்தை உச்சரிப்பதற்கு முன்பாக ஸ்ரீ சைதன்ய மகா பிரபு மற்றும் அவர்களுடைய தோழர்களின் கருணையை பெறுவதற்காக, நம்முடைய குறைபாடுகளை நீக்குவதற்காகவும் இந்த ஜெபத்தின் மூலம் நிறைய பலன்கள் கிடைப்பதற்காகவும் இந்த பஞ்ச தத்வ மந்திரத்தை முதலில் உச்சரிக்க வேண்டும்.
ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தின் அர்த்தம்
“ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண” என்று தொடங்கக்கூடிய 16 வார்த்தைகள் கொண்ட மந்திரம் முக்தி மந்திரம் எனவும் மகாமந்திரம் எனவும் அழைக்கப்படும். இந்த கலியுகத்தில் ஆன்மீக விழிப்புணர்வை பெறுவதற்காக சக்தி வாய்ந்த முறையாக இந்த மந்திரத்தை உச்சரிப்பது கருதப்படுகிறது. கிருஷ்ணருடைய உன்னத சக்தியை பெறுவதற்காக இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். இந்த மந்திரம் கடவுளையும் அவருடைய சக்தியையும் நோக்கி வைக்கும் ஆன்மீக அழைப்பு. இறைவனுடைய சக்தியை பெறுவதற்காக மிகவும் மனம் உருகி அவரிடம் என்னை உங்களுடைய தெய்வீக அன்பான சேவையை ஈடுபடுத்துங்கள் என்று இந்த மந்திரத்தை கூறி விளக்கலாம்.
இதற்கான ஆன்மீக பலன்கள்
இந்த இரண்டு சக்தி வாய்ந்த மந்திரங்களையும் மாலை நேரத்தில் உச்சரிப்பதால் பதட்டம் மன அழுத்தம் அனைத்துமே குறையும். ஆன்மாவின் உண்மையான கிருஷ்ண உணர்வை மீண்டும் எழுப்ப உதவுகிறது. மாயையில் இருந்து விடுதலை பெறுவதற்கு தெய்வீகத்துடன் இணைவதற்கு இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். இந்த மந்திரத்தை குறைந்தபட்சம் 108 முறை ஜபமாலையை வைத்துக்கொண்டு உச்சரிப்பது அதிக பலனை கொடுக்கும். அனைத்து மதத்தினரும் இனத்தினரும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம்.
இதனையும் படியுங்கள் : தினமும் அரை மணி நேரம் இந்த மந்திரம் சொன்னால் மட்டும் போதும் பணம் தானாகவே வீடு தேடி வரும்!