ஒரு சிலர் நம்மிடம் சொல்வார்கள் இந்த உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு பணம் அவசியம் இல்லை அதையும் தாண்டி இந்த உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு குடும்பமும் வேண்டும் என்பார்கள். அதிக பணம் இருந்தால் நம்முடைய நிம்மதி பறிபோகும் மனதளவில் நம்மிடம் நிம்மதி இருக்காது என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால் இவர்களெல்லாம் இவ்வாறு கூறுவது வெறும் வாய் வார்த்தையாக தான் இருக்கும். நிஜம் என்னவென்று தெரியுமா இந்த உலகில் ஒரு குழந்தை ஜனனிக்கும்போதில் இருந்து அந்த குழந்தை வளர்ந்து முதுமை பருவம் அடைந்து மறைந்து போகும் வரை உள்ள இந்த இடைப்பட்ட காலத்தில் பணம் இல்லை என்றால் இந்த உலகில் ஒன்றும் செய்ய இயலாது.
உயிர் பிறக்கவே பணம் தேவை
ஆம் இப்போது ஒரு உயிர் புதிதாக பிறப்பதற்காகவே மருத்துவமனையில் இலட்ச கணக்கில் பணம் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை எல்லாம் உருவாகிவிட்டது. இதே உயிர் வளர்ந்து பெரியவனாகி இறக்கும் தருவாயில் இருக்கும்போது கூட ஏன் அந்த உயிர் இறந்த பின்னும் கூட நாம் பணம் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த உலகில் பணம் இல்லால ஒன்றுமே செய்ய முடியாது. பணத்தைவிட குடும்பம் முக்கியம், நண்பர்கள் முக்கியம், உறவினர்கள் எல்லாம் முக்கியம் என அனைவரும் கூறுவார்கள் ஆனால் அதே பணம் நம்மிடம் இல்லை என்றால் இந்த அத்தனை உறவுகளுமே சற்று தள்ளியே நிற்பார்கள். நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இது தான் உண்மை.

லட்சுமி தேவி அருள்
அப்படியே நாம் பணம் சம்பாதித்தாலும் நமக்கு வரும் பணத்தை விட நாம் செலவு செய்யும் பணம் அதிகமாக இருக்கிறது காரணம் விலைவாசி உயர்வு ஆனால் நம் சம்பளம் மட்டும் என்றுமே உயர்வது போல் இல்லை. இப்படி இந்த பணத்தினால் நம் மறந்த மகிழ்ச்சிகள் எவ்வளவோ, நமக்கு கிடைக்காத மகிழ்ச்சிகள் எவ்வளவோ, நாம் தொலைத்த மகிழ்ச்சிகள் எவ்வளவோ, இந்த பணத்தை நாம் வீட்டிற்கு கொண்டு வருவது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதற்கு லட்சுமி தேவியின் அருள் நமக்கு வேண்டும் அதற்காக லட்சுமி தேவிக்கு உரிய மந்திரத்தை நீங்கள் தினமும் அரை மணி நேரம் சொல்லிக் கொண்டிருந்தால் போதும் நீங்கள் வேண்டிய பணம் உங்களின் வீடு தேடி வரும்.

மந்திரத்தை எப்பாழுது சொல்லலாம்
இந்த மந்திரத்தின் பெயர் லட்சுமி கணபதி மந்திரம் ஆகும் இந்த மந்திரத்தை நீங்கள் தினசரி அரை மணி நேரம் சொல்லி வந்தாலே போதும் உங்களுக்கு இருக்கும் பண பிரச்சனை, பண கஷ்டங்கள், பொருளாதார ரீதியாக இருக்கும் அனைத்து கஷ்டங்களும் அடியோடு நீங்கி உங்கள் வீட்டில் இருக்கும் பணமாக இருந்தாலும் செல்வ வளங்கள் என அனைத்தும் பெருகிக்கொண்டே இருக்கும். இந்த மந்திரத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம் நீங்கள் உங்கள் வேலைகளை முடித்துவிட்டு வீட்டில் ஓய்வு எடுக்கும் பொழுது, தூங்குவதற்கு முன்பாக, தூங்கி எழுந்தவுடன் இப்படி உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இந்த மந்திரத்தை சொன்னால் போதும் பணம் உங்கள் வீடு தேடி வரும். நம்பிக்கையோடு செய்து பாருங்கள்.
மந்திரம்
“சதுர்புஜம் பாசதரம் கணேசம்”
“ததாங்குச தந்தயுக்தம் த்ரிநேத்ரம்
லம்போதரம் சர்பயக்ஞோபவீதம் கஜகர்ணம்
ரமயாசிஷ்ட பார்ஸ்வ பத்மமாலா”




