Advertisement
சைவம்

ருசியான மொறு மொறு பன்னீர் 65 இப்படி வீட்டில் இருக்கும் பொருளை வைத்தே ஒரு தரம் செய்து பாருங்க அட்டகாசமான ருசியில் இருக்கும்!

Advertisement

பன்னீர் எல்லாராலயும் விரும்பி சாப்பிடக் கூடிய உணவு..என்ன தா நம்ம பன்னீர் கிரேவி, பன்னீர் பிரியாணி, பன்னீர் புலாவ் செய்து எல்லாத்தையும் விரும்பி சாப்பிட்டாலும் பன்னீர் 65 டேஸ்ட் அவ்வளவு சுவையாக இருக்கும். அந்த அளவுக்கு பன்னீர் 65 டேஸ்ட் சூப்பரா இருக்கும்.. காரசாரமா மொறு மொறுன்னு சிவப்பு கலர்ல அந்த பன்னீர் 65 பாக்கும்போது எல்லாருக்கும் நாக்குல எச்சில் ஊறும்.

மோர் குழம்பு, சாம்பார், வெஜ் பிரியாணி, ரசம் , தயிர் சாதம்னு எல்லா உணவுகள் கூடவே சைடு டிஷ்ஷா வைத்து சாப்பிடும் போது இன்னும் கொஞ்சம் சாதம் அதிகமாகவே சாப்பிடுவோம் அந்த அளவுக்கு பன்னீர் 65 ருசியை சொல்லலாம். பன்னீர் சுவையானது மட்டுமே கிடையாது ரொம்ப ஆரோக்கியமானது கூட.

Advertisement

இது பாலில் தயாரிக்கப்படுகிற ஒரு பொருள் அதை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது உடலுக்கு அவ்வளவு நன்மையை கொடுக்கக்கூடியது. இந்த எப்பவுமே பன்னீர் புலாவ், பன்னீர் ப்ரைடு ரைஸ் இல்ல ஏதோ ஒரு கிரேவி, பன்னீர் பட்டர் மசாலா இப்படி தான் நம்ம செய்திருப்போம்.

ஆனால் இந்த மாதிரி பன்னீர் 65 கடைகளில் வாங்கி சாப்பிடும்போது ரொம்பவே சுவையா இருக்கும். நம்ம வீட்ல செய்தால் எல்லாம் பன்னீர் 65 மசாலாக்கள் உதர்ந்து போயிடும் . ஆனால் வீட்ல பன்னீர் 65 செய்யும்போது மசாலா எல்லாம்   உதிர்ந்து போகாமல் வீட்டிலேயே ஒரு சூப்பர் அருமையான பன்னீர் 65 எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்..

பன்னீர் 65 | Paneer 65 Recipe In Tamil

Print Recipe
பன்னீர் எல்லாராலயும் விரும்பி சாப்பிடக் கூடிய உணவு..என்ன தா நம்ம பன்னீர் கிரேவி, பன்னீர் பிரியாணி, பன்னீர்புலாவ் செய்து எல்லாத்தையும் விரும்பி சாப்பிட்டாலும் பன்னீர் 65 டேஸ்ட் அவ்வளவு சுவையாகஇருக்கும். அந்த அளவுக்கு
Advertisement
பன்னீர் 65 டேஸ்ட் சூப்பரா இருக்கும்.. காரசாரமா மொறு மொறுன்னுசிவப்பு கலர்ல அந்த பன்னீர் 65 பாக்கும்போது எல்லாருக்கும் நாக்குல எச்சில் ஊறும். ஆனால் வீட்ல பன்னீர் 65 செய்யும்போது மசாலா எல்லாம்   உதிர்ந்துபோகாமல் வீட்டிலேயே ஒரு சூப்பர் அருமையான பன்னீர் 65 எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்..
Course snacks
Cuisine tamil nadu
Keyword paneer 65
Prep Time 5 minutes
Advertisement
Cook Time 10 minutes
Servings 4
Calories 321

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 2 கப் பன்னீர்
  • 3 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 ஸ்பூன் உப்பு
  • 1 ஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1 ஸ்பூன் மல்லி தூள்
  • 1 ஸ்பூன் சீரகத் தூள்
  • 1/2 ஸ்பூன் மிளகு தூள்
  • 1/2 ஸ்பூன் கரமசாலா
  • 1 ஸ்பூன் அரிசி மாவு
  • 2 ஸ்பூன் சோள மாவு
  • 1 ஸ்பூன் மைதா மாவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 4 பச்சை மிளகாய்
  • இஞ்சி சிறிதளவு
  • பூண்டு சிறிதளவு
  • கறிவேப்பிலை சிறிதளவு

Instructions

  • ஒரு பாத்திரத்தில் பன்னீரை மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  • பின் அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள், மல்லிதூள், சீரகத்தூள், கரமசாலா மிளகு தூள் எனஅனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • பிறகு அதில் மைதா மாவு, அரிசி மாவு மற்றும் சோளமாவை சேர்த்துக்கொள்ளவும்.இப்பொழுது அதில் பன்னீரை கால் மணி நேரம் வரையில் நன்றாக ஊற வைக்க வேண்டும்.
  • பன்னீர் நன்றாக ஊறிய பிறகு ஒரு கடாயில் தேவையான அளவிற்கு எண்ணெயை ஊற்றி அதில் பன்னீரை போட்டு பன்னீர்பொன்னிறமாகும் வரை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை அனைத்தையும் தாளித்து அதை பொரித்த பன்னீரில் சேர்த்தால் வாசமாக இருக்கும்.. சூடாக பரிமாறினால் சுவையான பன்னீர் 65 தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 321kcal | Carbohydrates: 3.9g | Protein: 25g | Sodium: 18mg | Potassium: 71mg | Fiber: 1.4g | Vitamin A: 505IU | Vitamin C: 25mg | Calcium: 40mg | Iron: 4.1mg
Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

9 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

12 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

19 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

22 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 நாட்கள் ago