ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பன்னீர் சில்லி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள்!!!
சீன உணவுக்கு என்று இந்தியாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதனாலேயே தற்போது ஒவ்வொரு தெருக்களிலும் சீன உணவுத் தயாரிப்புக் கூடங்கள் முளைக்கத் தொடங்கிவிட்டன. பொதுவாக சீன உணவுகளை நாம் ஆரோக்கியமற்றதாக கருதுவதால் அதை பெரும்பாலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதில்லை. அப்ப
சீன உணவுக்கு என்று இந்தியாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதனாலேயே தற்போது ஒவ்வொரு தெருக்களிலும் சீன உணவுத் தயாரிப்புக் கூடங்கள் முளைக்கத் தொடங்கிவிட்டன. பொதுவாக சீன உணவுகளை நாம் ஆரோக்கியமற்றதாக கருதுவதால் அதை பெரும்பாலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு தான் இந்த பதிவு.
எதையுமே ஆரோக்கியமான முறையில் சமைக்கும்போது அதுதானாகவே உடலையும் பாதுகாக்கத் தொடங்குகிறது. அந்த வகையில் ஆரோக்கியமான முறையில் பன்னீர் சில்லி எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். பால் பொருட்களுள் ஒன்றான பன்னீரில் கால்சியம் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது.
இதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் ஆரோக்கியமாகவும் எலும்புகள் வலிமையுடனும் இருக்கும். அதற்கு பன்னீரை பலவாறு சமைத்து சாப்பிடலாம். உங்களுக்கு மாலை வேளையில் மழைப் பெய்யும் போது, நன்கு சூடாக, காரமாக அதே சமயம் சுவையான ஒரு ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட நினைத்தால், சில்லி பன்னீர் செய்து சுவையுங்கள். இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு அற்புதமான ஸ்நாக்ஸ் ரெசிபி. ஒரு முறை இந்த ரெசிபியை நீங்கள் செய்து விட்டால் போதும் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் அடுத்த முறையும் இதையே செய்யுங்கள் என்று விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
இதனையும் படியுங்கள் : சுவையான பன்னீர் நாண் இனி ஹோட்டல் சென்று சாப்பிடாமல் வீட்டிலேயே எளிய முறையில் உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்!!