ஒரு பக்காவான டிபன் பாக்ஸ் ரெசிபி பன்னீர் ப்ரைடு ரைஸ் இப்படி செஞ்சி பாருங்க!

தினமும் சாம்பார், ரசம், கூட்டு சாப்பிட்டு போர் அடிக்குதா? குழந்தைகள் வேறு ஏதாவது புதிதாக செய்து கொடுங்கள் என்று கேட்கிறார்களா? பிரைட் ரைஸ் செய்து கொடுங்களேன். இது சமைப்பதும் சுலபம், ருசியும் அதிகம். பிரைட் ரைஸ் என்பது சீனாவில் இருந்து பெறப்பட்ட ஒரு சுவையான இரவு உணவு வகை. சீனாவில்

By ·

தினமும் சாம்பார், ரசம், கூட்டு சாப்பிட்டு போர் அடிக்குதா? குழந்தைகள் வேறு ஏதாவது புதிதாக செய்து கொடுங்கள் என்று கேட்கிறார்களா? பிரைட் ரைஸ் செய்து கொடுங்களேன். இது சமைப்பதும் சுலபம், ருசியும் அதிகம். பிரைட் ரைஸ் என்பது சீனாவில் இருந்து பெறப்பட்ட ஒரு சுவையான இரவு உணவு வகை.

சீனாவில் காய்கறிகள் மற்றும் சிக்கன் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகை. இது இந்தியாவிற்கு வந்ததும் இந்திய மக்களின் சுவைக்கேற்ப பல வேறுபாடுகளை சந்தித்துள்ளது. மிளகாய்த்தூள், சீரகத்தூள், போன்ற மசாலாக்கள் சேர்ப்பது என பல்வேறு வகையான மாற்றங்களை கண்டுள்ளது. சிக்கன் ப்ரைடு ரைஸ், எக் ப்ரைடு ரைஸ் போன்றவை பலருக்கும் பிடித்தமானவை. உண்மையில் இந்த இரண்டையும் விட பன்னீர் பிரைட் ரைஸ் மிகவும் சுவையாக இருக்கும். வீட்டில் சமைப்பதும் மிகவும் எளிது.

ஒருமுறை செய்து சாப்பிட்டால், மீண்டும் மீண்டும் சமைக்க வைக்கும். குழந்தைகளுக்கும் அது மிகவும் பிடிக்கும். ப்ரைட் ரைசில் சேர்க்கப்படும் கேரட்டில் விட்டமின் ஏ, முட்டைக்கோசில் வைட்டமின் சி, குடைமிளகாயில் விட்டமின் இ, மற்றும் வெங்காயத்தில் நார்சத்தும் உள்ளது. இவை செய்வதற்கும் எளிமையானவை என்பதினால் வீட்டிலேயே சுலபமாக செய்து விடலாம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை