- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 3
- Cuisine
- Chinese
- Course
- dinner
தினமும் சாம்பார், ரசம், கூட்டு சாப்பிட்டு போர் அடிக்குதா? குழந்தைகள் வேறு ஏதாவது புதிதாக செய்து கொடுங்கள் என்று கேட்கிறார்களா? பிரைட் ரைஸ் செய்து கொடுங்களேன். இது சமைப்பதும் சுலபம், ருசியும் அதிகம். பிரைட் ரைஸ் என்பது சீனாவில் இருந்து பெறப்பட்ட ஒரு சுவையான இரவு உணவு வகை.
சீனாவில் காய்கறிகள் மற்றும் சிக்கன் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகை. இது இந்தியாவிற்கு வந்ததும் இந்திய மக்களின் சுவைக்கேற்ப பல வேறுபாடுகளை சந்தித்துள்ளது. மிளகாய்த்தூள், சீரகத்தூள், போன்ற மசாலாக்கள் சேர்ப்பது என பல்வேறு வகையான மாற்றங்களை கண்டுள்ளது. சிக்கன் ப்ரைடு ரைஸ், எக் ப்ரைடு ரைஸ் போன்றவை பலருக்கும் பிடித்தமானவை. உண்மையில் இந்த இரண்டையும் விட பன்னீர் பிரைட் ரைஸ் மிகவும் சுவையாக இருக்கும். வீட்டில் சமைப்பதும் மிகவும் எளிது.
ஒருமுறை செய்து சாப்பிட்டால், மீண்டும் மீண்டும் சமைக்க வைக்கும். குழந்தைகளுக்கும் அது மிகவும் பிடிக்கும். ப்ரைட் ரைசில் சேர்க்கப்படும் கேரட்டில் விட்டமின் ஏ, முட்டைக்கோசில் வைட்டமின் சி, குடைமிளகாயில் விட்டமின் இ, மற்றும் வெங்காயத்தில் நார்சத்தும் உள்ளது. இவை செய்வதற்கும் எளிமையானவை என்பதினால் வீட்டிலேயே சுலபமாக செய்து விடலாம்.
Ingredients
Method
முதலில் பன்னீரை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதில் மிளகாய் தூள், மிளகு தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கலந்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்த பன்னீரை பொரித்து எடுக்கவும்.
அதன்பிறகு முட்டைக்கோஸ், வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய், பீன்ஸ், கேரட் போன்ற காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய் சேர்த்து, பின் நறுக்கிய கேரட், முட்டைகோஸ், பீன்ஸ், குடைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
காய்கறிகள் சிறிது வதங்கியதும் பின்னர் வேகவைத்த சாதத்தை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
அதில் மிளகு தூள், கரம்மசாலா தூள் சேர்த்து கிளறி விடவும். பின் வறுத்த பன்னீரை சேர்த்து கலந்து விட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
விருப்பப்பட்டால் வெங்காயத்தாள் மேல் தூவி நன்கு கலந்து விட்டு, வேறொரு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.
அவ்வளவுதான் சுவையான பன்னீர் பிரைடு ரைஸ் தயார்.






