பன்னீர் வைத்து சைவ மயோனைஸ் இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!

மயோனைஸ், டொமேட்டோ சாஸ் இதெல்லாம் நிறைய மெயின் டிஷ்க்கு சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடுற பழக்கம் நிறைய பேருக்கு இருக்கும். பிரட் ஆம்லெட், சாண்ட்விச், பீட்சா, பர்கர், சிக்கன் நக்கட்ஸ் இது எல்லாத்துக்கும் மயோனைஸ் தக்காளி சாஸ் வெச்சி சாப்பிடுற பழக்கம் நிறைய பேருக்கு இருக்கும். முக்கியமா த

By Prem Kumar · 1/8/2025

மயோனைஸ், டொமேட்டோ சாஸ் இதெல்லாம் நிறைய மெயின் டிஷ்க்கு சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடுற பழக்கம் நிறைய பேருக்கு இருக்கும். பிரட் ஆம்லெட், சாண்ட்விச், பீட்சா, பர்கர், சிக்கன் நக்கட்ஸ் இது எல்லாத்துக்கும் மயோனைஸ் தக்காளி சாஸ் வெச்சி சாப்பிடுற பழக்கம் நிறைய பேருக்கு இருக்கும். முக்கியமா தந்தூரி சிக்கன் கிரில் சிக்கன் இது எல்லாத்துக்குமே மயோனைஸ் வச்சு சாப்பிடும் போது அவ்வளவு ருசியா இருக்கும். முட்டை வச்சு மயோனைஸ் சில பேர் செஞ்சு சாப்பிடுவாங்க. ஒரு சிலருக்கு அசைவம் பிடிக்காது அசைவம் பிடிக்காதவங்க சைவத்தில் ஏதாவது ரெசிப்பிஸ் சாப்பிடும் போது அதுக்கு அசைவ மயோனைஸ் வெச்சி சாப்பிட முடியாத சூழ்நிலையில இந்த மாதிரி ஒரு சைவ மயோனைஸ் வைத்து சாப்பிட்டு பாருங்கள்.

சைவ மயோனைஸில் பன்னீர் வைத்து செய்யலாம். டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும். வீட்ல ஏதாவது பிரட் ஆம்லெட் செய்யும் போது முட்டை இல்ல அப்படின்னா பன்னீர் வைத்து இந்த மாதிரி ஒரு சூப்பரான மயோனைஸ் செஞ்சு சாப்பிடலாம். ஏதாவது பிரெஞ்ச் ப்ரைஸ், நக்கட்ஸ் இந்த மாதிரி ரெசிபிஸ் செய்யும்போது வீட்டிலேயே குழந்தைகளுக்கு ஆரோக்கியமான முறையில் பன்னீர் வைத்து மயோனைஸ் செஞ்சு கொடுக்கலாம். ஒரு சொட்டு எண்ணெய் கூட இல்லாமல் செய்யப்போற இந்த ரெசிபி கண்டிப்பா ஆரோக்கியமானதாக இருக்கும்.

முட்டை சேர்த்து மயோனைஸ் செய்யும் போது நிறைய எண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியம் இருக்கும் ஆனால் இந்த பன்னீர் வச்சு செய்யப்போற ரெசிபில கண்டிப்பா ஒரு சொட்டு எண்ணெய் கூட தேவையில்லை. பன்னீர் சேர்த்து பால் சேர்த்து செய்யப் போறோம். பன்னீரில் நிறைய புரோட்டின் சத்துக்கள் இருக்கு. அதனால உடம்புக்கு தேவையான புரதச்சத்துக்கள் கிடைக்கும். சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே இந்த ரெசிபியை கொடுக்கலாம். இப்ப வாங்க இந்த சிம்பிளான ரெசிபிய டக்குனு அஞ்சு நிமிஷத்துல எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : ருசியான காளான் பாஸ்தா சாஸ் இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி சுவை தான்!

Recipes AMP · Quick view
View full