ருசியான காளான் பாஸ்தா சாஸ் இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி சுவை தான்!

- Advertisement -

தினமும் இட்லி, தோசை, பூரி,பொங்கல் என செய்து அலுத்து விட்டதா? உங்களுக்கும் உங்க குழந்தைகளுக்கும் டிஃபரென்ட்டா எதையாவது செய்யலாம்னு யோசித்தால் அப்போ உங்களுக்கான பதிவா தான் இது இருக்கும். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பாஸ்தா பிடிக்குமா?அப்படியென்றால் இன்று உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு காளான் பாஸ்தா சாஸ் செய்து கொடுங்கள்.

-விளம்பரம்-

இந்த பாஸ்தாவை எப்படி சுலபமாக மற்றும் சுவையாக செய்வது இன்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். பாஸ்தாவின் தாயகமான இத்தாலியில், மூன்று வகைகளில் இது பரிமாறப் பட்டாலும், உலக அளவில் நூற்றுக் கணக்கான வடிவங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெயர்களில் உலா வருகிறது.பொதுவாக அவசர நேரத்தில் உணவுகள் சமைக்க முடியாத பட்சத்தில் ஹோட்டல் சென்று சாப்பிடுவோம் இன்னும் சிலர் எதற்காக பணத்தை விரையமாக்குவது என சொல்லி சாப்பிடாமல் இருந்து விடுவார்கள். ஆனால் நீங்கள் இது போன்ற சமயங்களில் உங்கள் வீட்டில் பாஸ்தா வாங்கி வைத்திருந்தீர்கள் என்றால் அதை நீங்கள் சமைத்து சாப்பிடலாம்.

- Advertisement -

ஆம் இன்று அந்த பாஸ்தாவே இப்படி உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பிடித்த மாதிரி செய்வது என்று தான் பார்க்கபோகிறோம். இப்படி நீங்கள் பாஸ்தா செய்து கொடுத்தீர்கள் என்றால் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் அடிக்கடி செய்து தர சொல்லி அடம் பிடிப்பார்கள். மிகவும் சுவையான காளான் பாஸ்தா சாஸ் செய்வது சுலபம். பங்கை இதை எப்படி செய்வது என்று  பார்ப்போம்

Print
No ratings yet

காளான் பாஸ்தா சாஸ் | Mushroom Pasta Sauce In Tamil

பொதுவாக அவசர நேரத்தில் உணவுகள் சமைக்க முடியாத பட்சத்தில் ஹோட்டல்சென்று சாப்பிடுவோம் இன்னும் சிலர் எதற்காக பணத்தை விரையமாக்குவது என சொல்லி சாப்பிடாமல்இருந்து விடுவார்கள். ஆனால் நீங்கள் இது போன்ற சமயங்களில் உங்கள் வீட்டில் பாஸ்தா வாங்கி வைத்திருந்தீர்கள் என்றால் அதை நீங்கள் சமைத்து சாப்பிடலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Mushrrom Pasta Sauce
Yield: 4
Calories: 112kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ காளான்
  • 1/4 கிலோ பாஸ்தா
  • 2 குடை மிளகாய்
  • 2 பச்சை மிளகாய்
  • 1/4 கப் தக்காளி விழுது
  • 3 பூண்டு பல்
  • 2 வெங்காயம்
  • 1 டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள்
  • உப்பு தேவைக்கேற்ப
  • எண்ணெய் தேவைக்கேற்ப

செய்முறை

  • முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் கொஞ்சம் உப்பு, 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மக்ரோனியை போட்டு வேக வைக்கவும்.
  • வெந்ததும் அதனை  தண்ணீரில் நன்கு ஒன்றோடு ஒன்று ஒட்டாதவாறு அலசிக் கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • பொன்னிறம் வந்தவுடன் பச்சை மிளகாய், குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு காளான் சேர்க்கவும். பின் மிளகாய்தூள், தக்காளி விழுது மற்றும் உப்பு சேர்க்கவும்.
  •  பின் வேக வைத்த பாஸ்தா சேர்த்து பிரட்டி இறக்கவும். இப்போது சுவையான காளான் பாஸ்தா தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 112kcal | Carbohydrates: 48g | Protein: 21g | Fat: 1.2g | Potassium: 66mg | Fiber: 2g