Advertisement
சைவம்

நாவில் எச்சி ஊறும் பன்னீர் பெப்பர் ப்ரை செய்வது எப்படி ?

Advertisement

பொதுவாக வீட்டில் இருப்பவர்கள் சாமியை வேண்டி மாலை போட்டுக் கொண்டிருந்தாலும் இல்லை யாரேனும் விரதம் கடைபிடிப்பதாக இருந்தாலும் இந்த ஞாயிறு கிழமையிலும் அசைவ உணவுகளை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து விடுவார்கள். ஆனால் சாமிக்காக மாலை போட்டு இருப்பவர்கள் மாதம் கணக்கில் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டி இருக்கும். அவர்களும் முடிந்த அளவுக்கு சாம்பார் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருக்கும்.

இதையும் படியுங்கள் : சுவையான உருளைக்கிழங்கு பெப்பர் ப்ரை செய்வது எப்படி ?

Advertisement

இது போன்ற சமயங்களில் நீங்கள் சாம்பாருக்கு பதிலாக பன்னீர் மிளகு வறுவல் செய்து சாப்பிட்டு பாருங்கள் ரூசியாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் அடுத்த முறையும் இதையே செய்யுங்கள் என்று விரும்பி கேட்க்கும் வகையில் அற்புதமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த சுவையான பன்னீர் மிளகு வறுவல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

பன்னீர் பெப்பர் ப்ரை | Paneer Pepper Fry Recipe in Tamil

Print Recipe
சாமிக்காக மாலை போட்டு இருப்பவர்கள் மாதம் கணக்கில் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டி இருக்கும். அவர்களும் முடிந்த அளவுக்கு சாம்பார் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருக்கும் இது போன்ற சமயங்களில் நீங்கள் சாம்பாருக்கு பதிலாக பன்னீர் மிளகு வறுவல் செய்து சாப்பிட்டு பாருங்கள் ரூசியாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் அடுத்த முறையும் இதையே செய்யுங்கள் என்று விரும்பி கேட்க்கும் வகையில் அற்புதமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த சுவையான பன்னீர் மிளகு வறுவல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course Fry
Cuisine Indian, TAMIL
Keyword Paneer, பன்னீர்
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 130

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Ingredients

வறுத்து பொடி அரைக்க

  • 1 tbsp மிளகு
  • ½ tbsp சோம்பு
  • ½ tbsp சீரகம்
  • ¾ tbsp மல்லி
  • 1 துண்டு பட்டை
  • 2 கிராம்பு
  • 3 வர மிளகாய்
  • 2 கொத்து கருவேப்பிலை

பன்னீர் பெப்பர் ப்ரைக்கு

  • 200 கிராம் பன்னீர்
  • 3 tbsp எண்ணெய்
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 குடை மிளகாய் பொடியாக நறுக்கியது
  • வறுத்து அரைத்த மசாலா
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் நாம் வைத்திருக்கும் பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பவுளில் வைத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைத்து மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவில் மிளகு, சோம்பு, சீரகம், மல்லி, பட்டை, கிராம்பு மற்றும் வர மிளகாய் போன்ற பொருள்களை சேர்த்து எண்ணெய் இல்லாமல் நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  • அனைத்து பொருட்களும் நன்கு வறுப்பட்டு மணம்
    Advertisement
    வர தொடங்கியதும் நாம் வைத்திருக்கும் இரண்டு கொத்து கருவேப்பிலையை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். கருவேப்பிலை ஈரப்பதம் போய் மொறு மொறுப்பு தன்மையுடன் வரும்போது கடாயை இறக்கி குளிர வைத்துக் கொள்ளுங்கள்.
  • அனைத்து பொருட்களும் நன்றாக குளிர்ந்த உடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து முழுமையாக பொடியாக அரைத்து விடாமல் திருதிருவன அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
  • பின்பு இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு குடை மிளகாய் சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் வதக்கி கொள்ளவும்.
  • பின் இதனுடன் தேவையான அளவு உப்பு, சிறு துண்டுகளாக நறுக்கிய பன்னீர் மற்றும் நம் மிக்ஸியில் அரைத்த பொடி சேர்த்து நன்கு கிளறி விட்டு வதக்கிக் கொள்ளவும். பின் கடாயை இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் சுவையான பன்னீர் மிளகு வறுவல் தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 200gram | Calories: 130kcal | Carbohydrates: 22g | Protein: 4g | Fat: 2g | Saturated Fat: 0.89g | Cholesterol: 21mg | Sodium: 14mg | Potassium: 89mg | Fiber: 11g | Sugar: 4.67g | Calcium: 7.8mg

English Overview: paneer pepper fry is one of the most important dishes in south india. paneer pepper fry recipe or paneer pepper fry seivathu eppadi or paneer pepper fry recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil

Advertisement
Prem Kumar

Recent Posts

வீட்டிலயே செய்யாலம் சுவையான மேங்கோ கஸ்டர்ட் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்கள்!

மாம்பழ சீசன் என்பதால் எங்கும் மாம்பழங்கள் சற்று விலை குறைவில் கிடைக்கும். மாம்பழ சீசன் ஆரம்பித்தாலே மாம்பழ பிரியர்கள் தினமும்…

46 நிமிடங்கள் ago

சூரியனின் அருளைப் பெற அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்ய வேண்டும்?

கிரகங்களில் முதன்மையான கிரகமாக சூரிய பகவான் கருதப்படுகிறார். எனவே, அனைத்து வழிபாடுகளிலும் சூரிய பகவானை வழிபடும் முறையை பின்பற்றுகிறோம். அதுமட்டுமின்றி…

2 மணி நேரங்கள் ago

கோதுமை ரவை வெண்பொங்கல் ஒருமுறை இப்படி செய்து பாருங்க! காலை டிபனுக்கு பக்காவாக இருக்கும்!

தென்னிந்திய சமையலில் காலை உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இட்லி, தோசை, பூரி, கிச்சடி, பொங்கல், வடை, சாம்பார் போன்ற…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 04 மே 2024!

மேஷம் இன்று அதிகம் சாப்பிடாதீர்கள். பொருளாதாரப் பக்கம் வலுப்பெற வாய்ப்புள்ளது. இன்று வீடு பராமரிப்பு அல்லது மாற்றம் தொடர்பான திட்டங்களை…

6 மணி நேரங்கள் ago

கிவி தர்பூசணி வாங்கி சூப்பரான கிவி தர்பூசணி மாக்டெயில் இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!

கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம்.…

16 மணி நேரங்கள் ago

குருபகவான் மற்றும் சூரிய பகவானின் சேர்க்கை நடைபெறும் மே மாதத்திற்கான ராசி பலன்கள்

மே மாதத்தில் குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் மே மாதத்தில்…

17 மணி நேரங்கள் ago