- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Fry
நாம் சாப்பிடும் உணவுகளுடன் கூட்டுப் பொரியல் என்று ஏதாவது ஒன்றை வைத்து சாப்பிட்டால் தான் நாம் சாப்பிடும் உணவை முழுமையாக சாப்பிட்டு முடிப்போம். அப்படி கூட்டு, பொரியல் மற்றும் அவியல் என நாம் செய்யும் அனைத்திலும் பெரும்பாலும் இடம் பிடிப்பதும், நிறைய நபர்களுக்கு பிடித்த காய்கறி என்று சொன்னால் அது உருளைக்கிழங்கு தான். அந்த அளவிற்கு உருளைக்கிழங்குகளை பயன்படுத்தி நாம் செய்யும் உணவுகள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.
இதையும் படியுங்கள் : கல்யாண வீட்டு காரசாரமான உருளைக்கிழங்கு பொரியல் செய்வது எப்படி ?
ஆகையால் இன்றும் நாம் உருளைக்கிழக்கில் பயன்படுத்தி செய்யும் ஒரு பொரியல் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் பெரும்பாலும் உருளைக்கிழங்கை காரசாரமான சுவையில் சாப்பிட்டால் தான் அனைவருக்கும் பிடிக்கும் ஆகையால் இன்று உருளைக்கிழங்கு பெப்பர் ப்ரை எப்படி செய்வது என்று தான் பார்க்க போகிறோம். இதே போல் ஒரு முறை செய்து உங்கள் வீட்டில் உள்ள நபர்களுக்கு பரிமாறினால் அவர்கள் அடிக்கடி செய்ய சொல்லி உங்களிடம் கேட்பார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும். அதனால் இன்று உருளைக்கிழங்கு பெப்பர் ப்ரை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
English Overview : potato pepper fry is one of the most important dishes in india. potato pepper fry recipe or potato pepper fry seivathu eppadi or potato pepper fry in Tamil are a few important terms to describe this recipe in the tamil language
Ingredients
Method
முதலில் நாம் எடுத்துக் கொண்ட நான்கு உருளைக்கிழங்கை தண்ணீரில் நன்கு கழுவி சுத்தபடுத்தி பின் ஒரு குக்கரில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்பு வேக வைத்த உருளைக்கிழங்கின் தோல் பகுதிகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் மூன்று டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி கெிள்ளவும்.
பின் எண்ணெய் நன்கு காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் அளவுகளான கடுகு உளுந்தம் பருப்பு சேர்த்து அதனுடன் இரண்டு வர மிளகாய் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.
பின்பு இதனுடன் நாம் வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி விட்டுக் கொள்ளுங்கள். பின் இதனுடன் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள்.
பின்பு உருளைக்கிழங்கு நன்றாக வெந்து நாம் சேர்த்த மசாலாவாசசை போன பின் இதனுடன் இரண்டு டீஸ்பூன் அளவு மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறிவிட்டு இறக்கிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான உருளைக்கிழங்கு பெப்பர் ப்ரை இனிதே தயாராகிவிட்டது






