தங்கத்தை வசியம் செய்யும் பரிகாரம்!

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் தாங்கள் செய்யும் வேலைக்கு கிடைக்கும் பணத்தை ஏதாவது ஒரு முறையில் சேமிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். பொதுவாக பெரியவர்கள் நிலத்தின் மீதும் தங்கத்தின் மீதும் சேமிப்பை வைப்பது மிகவும் சிறப்பானது அது உயர்ந்து கொண்டே இருக்கும் என்று கூறுவார்கள். அந்த வகை

By Prem Kumar · 7/9/2024

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் தாங்கள் செய்யும் வேலைக்கு கிடைக்கும் பணத்தை ஏதாவது ஒரு முறையில் சேமிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். பொதுவாக பெரியவர்கள் நிலத்தின் மீதும் தங்கத்தின் மீதும் சேமிப்பை வைப்பது மிகவும் சிறப்பானது அது உயர்ந்து கொண்டே இருக்கும் என்று கூறுவார்கள். அந்த வகையில் தங்கத்தை சேர்ப்பது எதிர்காலத்தில் மிகவும் நல்லது பெண் குழந்தைகளுக்கு திருமணத்திற்காக தங்கத்தை வாங்கி சேமிக்க வேண்டும் என்று பலரும் நினைப்பார்கள் ஆனால் தங்கத்தை நாம் வாங்கினாலும் அதை அனுபவிக்க முடியாமல் ஏதாவது ஒரு விதத்தில் அதை அடகு வைப்பது இல்லை மற்றவர்களுக்கு கொடுத்து காசு வாங்குவது என்று பல பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கும் அதனை தடுக்க தங்கத்தை நம்முடனே நிலைத்து வைக்க செய்ய வேண்டிய ஒரு ஆன்மீக பரிகாரத்தை பற்றி பார்க்கலாம்.

ஈர்ப்பு விசை

பொதுவாக ஒரு பொருள் நம்மிடம் இருக்க வேண்டும் என்றால் அந்த பொருளுக்கும் நமக்கும் ஒரு ஈர்ப்பு சக்தி இருக்க வேண்டும் அது ஒரு சிலருக்கு இயற்கையாகவே அமைந்து விடும் ஆனால் ஒரு சிலருக்கு அது இயற்கையாக அமையாது அதனால் அந்த ஈர்ப்பு சக்தியை நாம் உருவாக்குவதற்கு ஒரு சில விஷயத்தை செய்ய வேண்டி இருக்கும் குலதெய்வத்தை நம் வீட்டிற்குள் வர வைப்பதற்கு நாம் குலதெய்வம் வசியம் செய்திருப்போம் அதே வகையில் இப்பொழுது தங்கத்தை இருப்பதற்கு ஒரு வசிய முறையை பார்க்க போகிறோம்.

இந்த வசியத்தை செய்ய வேண்டிய நேரம்

இந்த வசியத்தை நாம் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செய்தால் மிகவும் சிறப்பானது அன்று செய்வது தங்க நகை நம்மிடம் சேர்வதற்கான சிறந்த நாட்கள். செவ்வாய்க்கிழமையாக இருந்தால் காலை 8 மணியிலிருந்து 9:00 மணிக்குள் செய்ய வேண்டும் வெள்ளிக்கிழமையாக இருந்தால் மதியம் ஒரு மணியிலிருந்து 2 மணிக்குள் இதனை செய்ய வேண்டும் ஏனென்றால் சுக்கிர ஹோறையில் இந்த பரிகாரத்தை செய்தால் தான் மிகவும் நல்லது.

பரிகாரத்தை செய்ய நமக்கு தேவையான பொருட்கள்

இந்த வசியத்திற்கு நமக்கு தேவையான ஒரு சில பொருட்கள் உள்ளது அதற்கு ஜவ்வாது பன்னீர் அரகஜா பச்சை கற்பூரம் இவற்றில் ஏதாவது ஒரு பொருளை மட்டும் எடுத்துக் கொள்ளவும். எடுத்த பொருளை நன்கு கல்வி சுத்தம் செய்து அதனை உங்கள் கைகள் நன்றாக வாசனை வரும்வரை தடவிக்கொள்ள வேண்டும். அடுத்ததாக வீட்டில் இருக்கக்கூடிய தங்க நகையில் மல்லிகை பூ இல்லையென்றால் துளசி இலை ஏதாவது ஒன்றை போட்டு மகாலட்சுமி தயாரிக்க அருகே ஒரு நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமி தாயார் இடம் தங்கம் சேர வேண்டும் என்று முழுமையாக வழிபாடு செய்ய வேண்டும் இதனை செய்து முடித்துவிட்டு தங்கத்தை நீங்கள் எங்கே வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இப்படி நாம் ஒவ்வொரு வாரமும் செய்து வந்தால் தங்கம் நம்மிடம் தங்கும். வசியம் உண்டாகி நம்மிடம் தங்கம் அதிக அளவில் சேரும் இந்த எளிமையான வழிமுறையை பின்பற்றி பாருங்கள் நிச்சயமாக நல்லதே நடக்கும்.

இதனையும் படியுங்கள் : செல்வ வளம் அதிகரிக்க செய்ய வேண்டிய பரிகாரம்!

Recipes AMP · Quick view
View full