பணத்திற்காக அனைவரும் படாத பாடுபட்டு உழைத்துக் கொண்டிருப்போம் பணத்தை என்னதான் சம்பாதித்தே கொண்டு இருந்தாலும் அது வீட்டில் நிலையாக இருக்காது. அந்த சூழ்நிலை ஏற்படுவதற்கு காரணம் கண் திருஷ்டி வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் போன்றவையாக கூட இருக்கலாம் எனவே இவற்றை நீக்குவதற்கு வெள்ளிக்கிழமை என்று செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
எதிர்மறை ஆற்றல்கள்

நம் வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் இருந்தால் அந்த வீட்டில் பலவிதமான பிரச்சனைகள் இருக்கும் ஆனால் நேர்மறை ஆற்றல்கள் இருக்கும் பட்சத்தில் வீட்டில் தெய்வ நடமாட்டம் இருக்கும் அதனால் வீட்டில் பொன் பொருள் ஆடை கல்வி வீரம் ஆபரணங்கள் என எதற்குமே பஞ்சம் இருக்காது அப்படி அனைத்து செல்வங்களும் வீட்டில் நிறைந்திருக்க எதிர்மறை ஆற்றல்களை விலக்குவதற்கு ஒரு சூட்சமமான பரிகாரத்தைப் பற்றி பார்க்கலாம்.
செல்வ வளத்தை அதிகரிக்க செய்ய வேண்டிய பரிகாரம்
இந்த பரிகாரம் செய்வதற்கு ஒரு பித்தளையாலான தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ள வேண்டும் அதற்கு நடுவே குலதெய்வம் மற்றும் விநாயகர் பெருமானை இணைத்து ஐந்து பச்சை கற்பூரத்தை வைக்க வேண்டும் அதற்கு மேல் நெய் ஊற்றி பச்சை கற்பூரத்தில் தீ வைக்க வேண்டும். அது எரிய ஆரம்பிக்கும் பொழுது அதற்கு மேல் ஒரு நல்ல ஏலக்காயாக பார்த்து அதனை வைக்க வேண்டும் பிறகு எழுந்து முடித்த பிறகு இருக்கக்கூடிய சாம்பலை ஒரு சின்ன டப்பாவில் போட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும். நீங்கள் ஏதாவது முக்கியமான காரியங்களுக்கு செல்லும்போது பணம் தொடர்பான சில காரியங்களில் ஈடுபடும் போது அந்த சாம்பலை எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.

பரிகாரத்தின் நன்மைகள்
இப்படி செய்வதால் நீங்கள் செல்லும் காரியங்களில் தடைகள் ஏற்படாமல் இருக்கும் அதனால் உங்கள் வீட்டில் செல்வ வளமும் அதிகரிக்கும் ஒரு பச்சை கற்பூரத்தை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வீட்டில் ஏற்றினால் எந்தவித எதிர்மறை ஆற்றல்களும் வீட்டிற்குள் வராது தீபம் எரியும்போது பணத்த இவைகளை மகாலட்சுமி தாயாரை நினைத்து அவர்களிடம் கூறினால் மிகவும் நல்லது. குலதெய்வத்துடைய அருள் இருக்கக்கூடிய இந்த தீபத்தை வீட்டில் ஏற்றினால் உங்களுடைய பணத்தேவைகள் பூர்த்தியாகி செல்வ வளமும் அதிகரிக்கும்.
இதனையும் படியுங்கள் : கஷ்டங்கள் தொலைந்து போக செய்ய வேண்டிய பரிகாரம்!




