நம் வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் சங்கடங்கள் துன்பங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்றால் தெய்வ வழிபாடு செய்கின்றோம். மன நிம்மதி வேண்டி கோவிலுக்கு போய் கடவுளை வேண்டுகிறோம் அதே போல் நம்முடைய அனைத்து வேண்டுதல்களும் ஒன்றாக நிறைவேறி விடாது ஒருவருடைய வேண்டுதல் சீக்கிரமாக படித்தால் மற்றவருடைய வேண்டுதல் கொஞ்சம் காலம் எடுத்து தான் பலிக்கும்.

அதற்காக கடவுள் சக்தி இல்லை என்று சொல்ல முடியாது நம்முடைய கஷ்டங்கள் தீருவதற்கு கர்மவினையால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீருவதற்கு ஒரு எளிமையான பரிகாரத்தை மட்டும் செய்தால் போதும்.
கஷ்டங்கள் தீர வழிபாடு
நம்முடைய கர்ம வினைகள் தீருவதற்கு கோவிலுக்கு செல்லும்போது இரண்டு எலுமிச்சம் பழம் எடுத்துச் செல்ல வேண்டும். முதலில் தெய்வத்தை வணங்கி விட்டு கர்ம வினைகள் தீர வேண்டும் என்று நம்மை நாமே வருத்திக் கொண்டு ஏதாவது ஒரு விஷயத்தை செய்ய வேண்டும், மிகவும் கடுமையான வேண்டுதலாக தான் இருக்க வேண்டும் என்கின்ற அவசியம் கிடையாது. கால்கள் வலிக்கின்ற அளவுக்கு பொது பிரகாரத்தை சுற்றி வலம் வரலாம். கோவிலை சுற்றி சோர்ந்து போன பிறகு உங்களுடைய பிரார்த்தனையை கடவுளிடம் வைக்கலாம். உடம்பு சரி இல்லாதவர்கள் இதனை செய்ய வேண்டாம்.

கையில் கொண்டு போகும் எலுமிச்சம் பழத்தில் ஒன்றை சாமியிடம் கொடுத்த அவர் பாதங்களில் வைத்தார் செய்ய வேண்டும் மற்றொரு எலுமிச்சம் பழத்தில் விளக்கு போட வேண்டும். எலுமிச்சம் பழ விளக்கு செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமையில் துர்க்கைக்கு எலுமிச்சம்பழம் விளக்கு போடுவது மிகவும் சிறப்பானது. ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மன் உடைய சன்னதியில் எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி சாற்றைப் பிழிந்து அதன் மஞ்சள் தடவி கோலம் போட்டு எலுமிச்சை பழத்தை தலைகீழாக திருப்பி அதிலும் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்ட விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். ராகு காலத்தில் செய்ய முடியாதவர்கள் உங்களுக்கு ஏற்ற நேரத்திலும் செய்யலாம். மற்றும் சுவாமியின் பாதத்தில் வைத்து வாங்கி வந்த எலுமிச்சம் பழத்தை பிழிந்து வீட்டில் இருக்க அனைவரும் பிரசாதமாக குடிக்கலாம் இதனை மட்டும் செய்து பாருங்கள் சீக்கிரத்திலேயே உங்களுடைய மன கஷ்டங்கள் தீரும்.
இதனையும் படியுங்கள் : பணக்கஷ்டத்தில் இருப்பவர்கள் வீட்டில் செய்ய கூடாதவைகள்




