நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நினைத்த படி நடக்க இதை வழிபாட்டை மட்டும் செய்யுங்கள்!

ஒவ்வொருவரின் வாழ்விலும் பலவிதமான ஆசைகள் இருக்கும். ஆசைப்பட்ட அனைத்தும் கிடைத்து விடுவதில்லை. அதற்காக நாம் பல வழிகளில் போராடித் தான் பெற வேண்டி இருக்கிறது. அப்படி போராடினாலும் கூட எல்லா ஆசைகளும் நிறைவேறுமா என்பது சந்தேகம் தான். நம்முடைய முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகிறது எ

By Prem Kumar · 18/10/2024

ஒவ்வொருவரின் வாழ்விலும் பலவிதமான ஆசைகள் இருக்கும். ஆசைப்பட்ட அனைத்தும் கிடைத்து விடுவதில்லை. அதற்காக நாம் பல வழிகளில் போராடித் தான் பெற வேண்டி இருக்கிறது. அப்படி போராடினாலும் கூட எல்லா ஆசைகளும் நிறைவேறுமா என்பது சந்தேகம் தான். நம்முடைய முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகிறது என நினைப்பவர்கள் எளிமையான ஆன்மிக பரிகாரத்தை செய்து வந்தாலே நன்மைகள் பலவற்றையும் நம்மால் பெற முடியும். பிரபஞ்ச சக்திகளின் அருளுடனும், இறை அருளுடனும் நாம் நினைத்தது நடக்கும். இது போன்ற சூழ்நிலைகளை எளிதில் கையாள செய்ய வேண்டிய பரிகாரத்தை இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.‌ சிறிய விஷயம் முதல் பெரிய காரியம் வரை நினைத்தப்படி நடப்பதற்கு இதை செய்து பார்க்கலாம்.

நினைத்த காரியம் நிறைவேற முதலில் செய்ய வேண்டியது

அனைவருடைய வாழ்விலும் சரி ஏதாவது ஒரு பிரச்சனை இருந்துகொண்டு தான் இருக்கும். பிரச்சனை இல்லாத வாழ்கை யாருக்குமே கிடையாது. காலத்திற்கு அனைத்தையும் மாற்றக் கூடிய சக்தி உண்டு என்பார்கள். அப்படி நடக்காத நம்முடைய விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள, தெய்வ சக்தியை முழுவதுமாக பெறுவதற்கும், தெய்வத்தின் அருள் நமக்கு முழுவதுமாக கிடைப்பதற்கும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

வாழ்க்கையில் தொடர்ந்து கஷ்டத்தை மட்டுமே அனுபவித்து எதிர் நீச்சல் போட்டுக்கொண்டே இருபவர்கள் காலையில் எழுந்ததும் குளித்து விட்டு, நெற்றியில் திருநீறு வைத்து விநாயகரை வணங்கிய பின் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும். காலையில் வெளியில் செல்லும் போது சாப்பிடாமல் செல்ல கூடாது, சிறிதளவு நீர் ஆதாரத்தையாவது எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது சிறிதளவு தயிரில் சர்க்கரை கலந்து உண்ண வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் எது நினைத்து வெளியில் சென்றாலும் அந்த காரியம் வெற்றிகரமாக நடக்கும்.

நினைத்த காரியம் நடக்க பரிகாரம்

நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேற உங்கள் வீட்டின் அருகில் உள்ள அரசமரம் உள்ள கோவிலுக்குச் சென்று அங்கு கீழே விழுந்து கிடக்கும் அரசமர இலையில் நல்லதாக உள்ள‌ இலையை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த இலையின் மையப் பகுதியை பார்த்து, உங்களுக்கு என்ன காரியம் நடக்க வேண்டுமோ அந்த காரியம் நல்ல படியாக முடிய வேண்டும் என அந்த மரத்திடம் சொல்லி வேண்டி விட்டு, அந்த இலையை சட்டை பையில் வைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விடுங்கள். இந்த வேண்டுதலை காலை 6 மணிக்கு செய்தால் மிகவும் சிறப்பு.

நினைத்தது நிறைவேற சொல்ல வேண்டிய மந்திரம்

பின் அந்த வேண்டுதலை முடித்து விட்டு, வீட்டை விட்டு வெளியே செல்லும் போது ” ஓம் ஹரயே ஓம்” என்ற மந்திரத்தை 10 முறை அல்லது 11 முறை சொல்ல வேண்டும். உங்களுடைய வேண்டுதல் அல்லது நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த காரியங்கள் அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று மனதார நினைத்து இந்த மந்திரத்தை சொல்ல‌ வேண்டும்.

யாரெல்லாம் இந்த பரிகாரத்தை செய்யலாம்?

எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அந்த காரியம் சிறப்பாக செயல்பட வேண்டும், அதில் எந்தவித தடைகளும் ஏற்படக்கூடாது என்று நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். குறிப்பாக பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்திலும் இந்த மந்திரத்தை சொல்லி வேண்டிக் கொள்ளலாம். உங்கள் வாழ்வில் எப்போது எது நடக்க வேண்டும் என்று மனதார நீங்கள் நினைத்து இந்த மந்திரத்தை சொன்னால் நீங்கள் நினைத்தது நிச்சயம் நடக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகாரத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் இதை செய்து பலன் அடையலாம்.

இதனையும் படியுங்கள் : வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீர பரிகாரம்!

Recipes AMP · Quick view
View full