இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் பிரச்சனைகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. பிரச்சினைகளை வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் சிலர் இருக்கிறார்கள். பிரச்சனைகள் வருவதும் பிறகு அது தீர்ந்து போவதும் அதன் பிறகு மற்றொரு பிரச்சினை வருவதும் மிகவும் இயல்பானது தான் ஆனால் இந்த மாதிரி பிரச்சினையாக வந்து கொண்டே இருந்தால் வாழ்க்கையில் நிம்மதி போய்விடும். அதே சமயத்தில் கடன் பிரச்சினையால் நிம்மதியை இழந்து நாம் வாழ்கிறோம் என்றால் அதற்கு ஒரு எளிமையான ஆன்மீக பரிகாரத்தை மேற்கொள்ளலாம்.
கர்ம வினைகள்

வாழ்க்கையில் ஏற்படக்கூடிய ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் அவரவர்களுடைய கர்ம வினைகள் தான் காரணம். எப்பேர்ப்பட்ட கர்மவினையாக இருந்தாலும் அதனை நீக்குவதற்கு ஒரு சில வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றினால் கர்ம வினைகள் நீங்கி பிரச்சனைகளும் குறையும். கர்மவினைகள் தீர்வு வேண்டும் என்பவர்கள் ஏதாவது ஒரு பொருளை மிகவும் ஏழ்மையில் நிலையில் இருப்பவர்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும் என்று கூறுவார்கள். தங்களால் இயன்ற தானத்தை பிறருக்கு அல்லது பிற உயிர்களுக்கும் நாம் கொடுக்கும் போது அதனுடைய பலன் நம்முடைய கர்ம வினைகளை குறைக்கும். உணவை மாற்ற அவருக்கு தானமாக வழங்கினால் அது நமக்கு பலவிதமான நன்மைகளை கொடுக்கும். அந்த வகையில் கர்ம வினைகள் தீர இந்த ஒரு பரிகாரத்தை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கலாம். பிரச்சினைகள் அதிகமாக இருப்பவர்கள் வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம் பிரச்சனைகள் குறைவாக இருந்தால் மாதத்திற்கு ஒருமுறை செய்தாலே போதுமானது
பரிகாரம் செய்யும் முறை

இந்த பரிகாரத்திற்கு நாம் கோதுமை மாவை எடுத்து அதை சப்பாத்தி மாவு போல் பிணைந்து சிறு உருண்டைகளாக 108 உருண்டைகளை உருட்டிக் கொள்ள வேண்டும். இதனை கோவிலுக்கு எடுத்துக் கொண்டு போய் அங்குள்ள குளத்தில் உங்களுடைய பிரச்சினைகள் தீர வேண்டும் என்று ஒவ்வொன்றாக போட வேண்டும். இந்த கோதுமை உருண்டைகளை குளத்தில் உள்ள மீன்கள் சாப்பிடும்போது உங்களுடைய கர்ம வினைகள் குறையும். அனைவருடைய வீட்டிலும் இருக்கக்கூடிய கோதுமை மாவை பயன்படுத்தி இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்.
இதனையும் படியுங்கள் : பணம் அதிகமாக சேருவதற்கு செய்ய வேண்டிய நாணய பரிகாரம்





