பிறருக்கு கடனாக கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்கு செய்ய வேண்டிய பரிகாரம்!!

இன்றைய காலகட்டத்தில் பணத்தின் தேவை அதிகமாக உள்ளது. படத்தை வாங்கி வைத்துக்கொண்டு ஒரு சிலர் அலைகழிப்பார்கள். சில சமயங்களில் யாராவது நம்மிடம் வந்து மிகவும் அவசரம் என்று அவசர தேவைக்காக பணம் கேட்பார்கள் நாமும் நம்பி கொடுத்து விடுவோம் ஆனால் இந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்துக் கொ

By Prem Kumar · 14/12/2024

இன்றைய காலகட்டத்தில் பணத்தின் தேவை அதிகமாக உள்ளது. படத்தை வாங்கி வைத்துக்கொண்டு ஒரு சிலர் அலைகழிப்பார்கள். சில சமயங்களில் யாராவது நம்மிடம் வந்து மிகவும் அவசரம் என்று அவசர தேவைக்காக பணம் கேட்பார்கள் நாமும் நம்பி கொடுத்து விடுவோம் ஆனால் இந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்துக் கொண்டே இருப்பார்கள். அந்த பணத்தை திரும்ப பெறுவதற்கு வெந்தயம் வைத்து ஒரு தாந்திரீக பரிகாரம் செய்து பயனை பெறலாம். இந்த ஆன்மீகம் குறித்த தகவல் அந்த பரிகாரத்தை பற்றி பார்க்கலாம்.

எளிமையான பரிகாரம்

வராத பணம் திரும்ப வருவதற்கு கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்கு இழந்த பணத்தை மீட்டெடுப்பதற்கு இந்த பரிகாரத்தை செய்வார்கள் தாந்திரீக பரிகாரங்களில் மிகவும் எளிமையான பரிகாரம் சக்தி வாய்ந்த பரிகாரம் என்று கூட சொல்லலாம். இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையோடு செய்தால் அதற்கான முழு பலன்களும் நம்மை தேடி வரும் இப்படி செய்தால் நடக்குமா நடக்காதா என்று யோசிக்காமல் முழுவதுமாக இறைவனை நம்பி செய்து பாருங்கள்.

பரிகாரம் செய்ய வேண்டிய முறை

இந்த பரிகாரத்தை செய்வதற்கு நாம் வடகிழக்கு திசையை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த திசை இழந்த சொத்துக்களையும் இழந்த பணத்தையும் மீட்டெடுக்கக்கூடிய திசை. எனவே இந்த திசையில் முகப்பார்க்கும் ஒரு சிறிய அளவிலான கண்ணாடியை வைத்து அதன் பின்னர் கொஞ்சமாக கண்ணாடி பவுலில் வெந்தயத்தை போட்டு வைக்க வேண்டும். சிறிதளவு வெந்தயத்தை சேர்த்தாலே போதுமானது.

பரிகாரத்தை செய்ய வேண்டிய தினம்

அந்த கண்ணாடிக்கு மஞ்சள் குங்குமம் வைத்து ஒரு வாரம் வரையில் அந்த கண்ணாடி முன்பே வெந்தயத்தை வைக்க வேண்டும் வெந்தயம் பணத்தை திரும்ப கொடுக்கக்கூடிய ஒன்று. பிறகு கொடுத்த பணம் திரும்ப வர வேண்டும் என்று மனதார யாரிடம் பணத்தை கொடுத்தீர்களோ அவர்களுடைய பெயரை உச்சரிக்க வேண்டும் இதே போல் தினமும் செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை செவ்வாய் பகவானுக்கு உகந்த தினம்.கடனுக்கு அதிபதி செவ்வாய் பகவான் என்பதால் செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில் இதனை செய்ய வேண்டும் தொடர்ந்து ஒரு வாரம் செவ்வாய்க்கிழமையிலிருந்து செய்ய வேண்டும். பாத்திரம் கழுவக்கூடிய சிங்கில் ஒரு வாரம் கழித்து வெந்தயத்தை போட வேண்டும் வெந்தயத்தை போடுவதற்கு சிங்க் வசதி இல்லை என்றால் ஓடும் தண்ணீரில் போட்டு விட வேண்டும். இதே போல் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு செய்து முடித்து விட்டால் நிச்சயமாக உங்களுடைய பணம் வீடு தேடி வரும் முழு மனதோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

இதனையும் படியுங்கள் : 3 விரலி மஞ்சள் இருந்தாலே போதும் பணம் அதிகம் சேர்ந்துக் கொண்டே இருக்கும்!

Recipes AMP · Quick view
View full