கடன் பிரச்சினைகள் தீர பிரியாணி இலை பரிகாரம்!
வாழ்க்கையில் கடன் வாங்காதவர்களும் கடன் கொடுக்காதவர்களும் இருக்க முடியாது கடன் வாங்கினால் அந்த கடனை ஒரே நாளில் அடைத்து விடுவது சாத்தியமே கிடையாது.அப்படி ஒரு அதிசயத்தை நிகழ்த்தக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம் உள்ளது இதனை இரவு தூங்கப்போகும் முன்பு செய்து பாருங்கள் நிச்சயமாக ஒரு நல்ல வழ
வாழ்க்கையில் கடன் வாங்காதவர்களும் கடன் கொடுக்காதவர்களும் இருக்க முடியாது கடன் வாங்கினால் அந்த கடனை ஒரே நாளில் அடைத்து விடுவது சாத்தியமே கிடையாது.அப்படி ஒரு அதிசயத்தை நிகழ்த்தக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம் உள்ளது இதனை இரவு தூங்கப்போகும் முன்பு செய்து பாருங்கள் நிச்சயமாக ஒரு நல்ல வழி கிடைக்கும்.
கடன் பிரச்சனை
எடுத்துக்காட்டாக ஒரு வாரத்திற்குள் நீங்கள் ஒரு கடனை திருப்பித் தர வேண்டும் என்றால் கடன் கொடுத்தவர்கள் உங்களுக்கு மிகவும் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தால் இந்த பரிகாரத்தை செய்து முடித்த பின்பு கடன் கொடுத்தவர்கள் வந்து ஒரு மாதம் கழித்து கடனை திருப்பிக் கொடுங்கள் என்று கூறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது அந்த மாதிரி ஒரு விஷயம் நடந்தாலே இந்த பரிகாரம் பழித்து விட்டது என்று அர்த்தம் கடன் சுமையால் மிகவும் பிரச்சினையில் இருக்கிறீர்கள் என்றால் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் நிச்சயமாக நல்லதே நடக்கும்
பிரியாணி இலை பரிகாரம்
இந்த பரிகாரத்திற்கு ஒரு பிரியாணி இலை எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் சிவப்பு நிற ஸ்கெட்ச் அல்லது பேனா கொண்டு 439764417 என்ற நம்பரை எழுத வேண்டும் பிரியாணி இலையின் மறுபக்கம் உங்களுக்கு எவ்வளவு கடன் தொகை இருக்கிறதோ அந்த கடன் தொகையை எழுதி கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு அந்த பிரியாணி இலையை நெருப்பில் எரித்து விட வேண்டும் இந்த பரிகாரத்தை இரவு 9 மணிக்கு மேல் 12 மணிக்குள் தான் செய்ய வேண்டும் மகாலட்சுமி தேவியாரையும் உங்களுடைய இஷ்ட தெய்வம், குலதெய்வத்தை நினைத்து அந்த பிரியாணி இலையை நெருப்பில் காட்டி எரித்து விடுங்கள் இந்த சாம்பல் போல கடனும் சீக்கிரமாக கரைந்து போகும்
பரிகாரத்தை செய்ய வேண்டிய நாட்கள்
மெழுகுவர்த்தி நெருப்பு அல்லது அகல் விளக்கு நெருப்பு ஏதாவது ஒன்றில் இந்த இலையை பொசுக்கி சாம்பலை தண்ணீரில் கரைத்து யாருடைய கால் தடமும் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும் இந்த பரிகாரத்தை தொடர்ந்து 11 நாட்கள் செய்ய வேண்டும். 11 நாட்கள் செய்து முடித்துவிட்டு பார்த்தால் உங்களுடைய கிரெடிட் கார்டு பிரச்சனை லோன் பிரச்சனை என அனைத்தும் கொஞ்சம் குறைந்திருக்கும் அந்த பிரச்சனையை சமாளிப்பதற்கான வழிகளும் உங்களுக்கு கிடைத்திருக்கும். கடன் பிரச்சினையால் மிகவும் அழுத்தமான சூழ்நிலைகள் இருந்தால் இந்த பரிகாரத்தை முழுமனதோடு நம்பிக்கையோடு செய்து பாருங்கள் உங்களுடைய பிரச்சனைகள் தீர்ந்த பிறகு குலதெய்வத்திற்கும் இஷ்ட தெய்வத்திற்கும் நன்றி கூறி விடுங்கள்.
இதனையும் படியுங்கள் : உங்களுக்கு இருக்கும் கடன் தொல்லையில் இருந்து விடுபட உங்களிடம் சிறிது கல் உப்பு இருந்தால் போதும்!