உங்களுக்கு இருக்கும் கடன் தொல்லையில் இருந்து விடுபட உங்களிடம் சிறிது கல் உப்பு இருந்தால் போதும்!

- Advertisement -

இந்த உலகில் மிகப்பெரிய கஷ்டமாக இருப்பது பண கஷ்டம் தான் அதிலும் மற்றவர்களிடமிருந்து வாங்கிய கடனை திருப்பித் தர முடியாமல் மக்கள் படும் பாட்டிற்கு அளவே கிடையாது அந்த அளவிற்கு மிகவும் கஷ்டமான சூழல் அது அத்தகைய கடன் பிரச்சினையிலிருந்து விடுபட மகாலட்சுமி தேவியின் அம்சமாக விளங்கக்கூடிய கல்லுப்பை வைத்து ஒரு எளிமையான பரிகாரம் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

மகாலட்சுமி தேவி பாற்கடலில் தோன்றியதால் கடலில் இருக்கும் கல் உப்பு மகாலட்சுமி தேவியாரின் அம்சமாக கருதப்படுகிறது எனவே அதை வைத்து நாம் செய்யும் அனைத்து பரிகாரங்களும் மிகவும் சிறந்தது. இந்த கார்த்திகை அமாவாசை என்று நாம் மகாலட்சுமி தேவியாரை வழிபட்டு இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை செய்தால் நமக்கு நன்மை உண்டாகி கடன் பிரச்சனைகள் தீரும். இந்த வருடம் கார்த்திகை அமாவாசை செவ்வாய்க்கிழமை வருவதால் இன்னும் சிறப்பாக கருதப்படுகிறது ஏனென்றால் செவ்வாய்க்கிழமைகளில் நாம் செய்யும் அனைத்து பரிகாரங்களுக்கும் விரைவில் பலன் கிடைக்கும் அந்த வகையில் இந்த கார்த்திகை அமாவாசை அன்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு மேல் இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து பாருங்கள்.

- Advertisement -

பரிகாரம் செய்யும் முறை

ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள் எந்த விதமான துணியாக இருந்தாலும் நல்லது. உங்களிடம் மஞ்சள் நிற துணையே இல்லை என்றால் ஒரு வெள்ளை துணியை எடுத்து அதை மஞ்சளில் நினைத்து காயவைத்து எடுத்துக் கொள்ளுங்கள் அதில் மகாலட்சுமி தேவியாரை நாம் சுமாக விளங்க கூடிய கல் உப்பு, மஞ்சள் குங்குமம், வசம்பு என்று அழைக்கப்படக்கூடிய மூலிகை மருந்து, ஒரு ரூபாய் நாணயம் சிறிதளவு பச்சை கற்பூரம் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள் பிறகு இதனை ஒரு பூஜை தட்டல் வைத்துவிட்டு வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய ஒரு நல்ல பிரியாணி இலையை எடுத்துக் கொள்ளுங்கள்‌. அந்த இலையில் உங்களுக்கு எவ்வளவு கடன் இருக்கிறதோ அந்த தொகையை எழுதிவிட்டு கடன் பிரச்சனை தீர வேண்டும் என்றும் எழுதுங்கள் பிறகு அந்த மஞ்சள் நிற துணியில் வைக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் ஒரு முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள்.

பூஜைக்கு ஏற்பாடு செய்துவிட்டு மகாலட்சுமி தேவியாரின் போற்றிகள் மற்றும் அர்ச்சனைகளை செய்து முடித்துவிட்டு நாம் கட்டி வைத்துள்ள அந்த முடிச்சை நிலை வாசலில் கட்டி வைக்க வேண்டும். ஒரு மாதத்திற்கு பிறகு அந்த மஞ்சள் நிற துணியில் உள்ள பொருட்கள் சேதம் ஆகிவிட்டால் அதிலிருந்து ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றொரு பொருட்களை ஓடும் தண்ணீரில் விட்டு விடுங்கள். ஒருவேளை பொருட்கள் நன்றாக இருந்தால் அடுத்த அமாவாசை அன்று மறுபடியும் அனைத்து பொருட்களையும் வைத்து முடிச்சாக கட்டி நிலை வாசலில் கட்டி வைக்க வேண்டும். பழைய ஒரு ரூபாய் நாணயத்தை மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை நம்பிக்கையுடன் கார்த்திகை அமாவாசை அன்று செய்து பாருங்கள் உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சினைகள் அனைத்தும் ஒரு வருடத்திற்குள் சரியாகிவிடும்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : ஒருவருக்கு கடன் கொடுக்கும் போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்! பணம் திரும்ப கிடைக்காது!!