ஒருவருக்கு கடன் கொடுக்கும் போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்! பணம் திரும்ப கிடைக்காது!!

- Advertisement -

என்னதான் நாம் பணத்தை சம்பாதித்தாலும் அது நமது வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை. அதனால் நாம் கடன் வாங்கி தான் செலவு செய்கிறோம், கடன் வாங்குபவரை விட கடன் கொடுப்பவர்கள் தான் அந்த பணத்தை திரும்ப பெறுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் பணம் கொடுக்கும் பொழுது சில விஷயங்களை மறந்து விடுகிறார்கள், அந்த தவறுதான் அவர்கள் பணத்தை திரும்ப பெற முடியாமல் போய்விடுகிறது என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

-விளம்பரம்-

ஆம், வாஸ்து சாஸ்திரத்தில் பண பரிவர்த்தனை குறித்த சில விதிகள் கூறப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றாமல் இருந்தால், கடனாக கொடுத்த பணத்தை பெற முடியாமல் போகும். அதுவே அந்த விதிகளைப் பின்பற்றினால், கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். இப்போது ஒருவருக்கு கடன் கொடுக்கும் போது வாஸ்துப்படி எந்த மாதிரியான தவறுகளை செய்யக்கூடாது என்பதைக் காண்போம்.

- Advertisement -

கடனை வழங்கும் திசை

வாஸ்து படி பொதுவாக பணத்தை கடனாக கொடுக்கும் பொழுது தெற்கு திசை பார்த்து கொடுக்கக் கூடாது. அப்படி கொடுத்தால் கடன் கொடுப்பவர் திரும்ப இந்த பணத்தை பெற முடியாமல் போய்விடும். பணத்தை கடனாக கொடுக்க வேண்டுமே ஆனால் அதை வடக்கு திசையை நோக்கி தான் கொடுக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் பலன் பெறுபவர் மேற்கு திசை பார்த்து கடனை பெற்றால் அந்த கடன் அனைத்தும் மருத்துவ செலவிற்கே சரியாகிவிடும். எனவே இந்த தவறு செய்யக்கூடாது.

எச்சில் தொட்டு பணம் எண்ணுவது

பொதுவாக அதிக பணம் இருந்தால் அதனை எச்சில் தொட்டு என்னும் வழக்கம் இன்றளவும் நமது வழக்கத்தில் உள்ளது. ஆனால் அப்படி செய்தால் மகாலட்சுமி தாயாரின் கோபத்திற்கு நாம் ஆளாகி விட நேரிடும். எச்சிலைத் தொட்டு பணம் எண்ணுவது என்பது மகாலட்சுமி தாயாரை அவமானப்படுத்துவதற்கு சமமாகும். எனவே நாம் பண பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

கஷ்டத்தில் ஒருவர் இருக்கும் பொழுது அவர்களுக்கு பணம் கொடுத்து உதவி செய்தீர்களானால் அந்த பணத்தை திரும்ப பெற முடியவில்லை என்றால் அதனை வடக்கு திசையில் இருந்து பரிவர்த்தனை செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் உங்கள் பணத்தை திரும்ப பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. பொதுவாக இப்படி பணம் கொடுக்கும் பொழுது உங்களது இடது கையில் இருந்து பணம் கொடுத்தால் நல்லது.

-விளம்பரம்-

செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் கடனை அடைக்க முயலுங்கள்

பொதுவாக நமது வீட்டில் வெள்ளி அல்லது செவ்வாய் கிழமைகளில் பணத்தை யாரிடமும் கொடுக்க மாட்டோம். ஆனால் கடன் என்று வரும் பொழுது நாம் இதனை யோசிக்க கூடாது, கடன் வாங்கும் பலரும் தங்களால் கடனை அடைக்க முடியவில்லை மேலும் கடனை வாங்கிக் கொண்டுதான் செல்கிறோம் என புலம்புவதை நாம் கேட்டிருப்போம். அந்தக் கடன் வேகமாக அடைய வேண்டுமென்றால் நாம் செவ்வாய்க்கிழமைகளில் கடனை செலுத்த வேண்டும் அப்படி செய்கையில் அடைக்க முடியாத கடனும் வேகமாக அடைவதை நம்மால் உணர முடியும்.