கடன் பிரச்சினைகள் தீர செய்ய வேண்டிய பரிகாரம்!
முருகப்பெருமானுக்கு கிருத்திகை மிகவும் உகந்த தினம். அன்றைய நாளில் முருகன் கோவில்களில் விசேஷமான விஷயங்கள் ஆராதனைகள் இருக்கும் அதில் கலந்துகொண்டு முருகப்பெருமானுடைய அருளை நாம் பெற வேண்டும் என்று ஆசைப்படுவோம். முருகப்பெருமானுடைய அருளால் கடன் பிரச்சினைகள் நீங்கி கடன் இல்லாத வாழ்க்கைய
முருகப்பெருமானுக்கு கிருத்திகை மிகவும் உகந்த தினம். அன்றைய நாளில் முருகன் கோவில்களில் விசேஷமான விஷயங்கள் ஆராதனைகள் இருக்கும் அதில் கலந்துகொண்டு முருகப்பெருமானுடைய அருளை நாம் பெற வேண்டும் என்று ஆசைப்படுவோம். முருகப்பெருமானுடைய அருளால் கடன் பிரச்சினைகள் நீங்கி கடன் இல்லாத வாழ்க்கையை வாழலாம். அன்றைய தினத்தில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவதால் அந்த ஒரு வருடம் முழுவதும் நாம் விரதம் இருந்த பலன்களை பெற முடியும். மாதாமாதம் வரக்கூடிய கிருத்திகை நாளன்று வழிபட முடியாதவர்கள் முக்கியமான தை கிருத்திகை ஆடி கிருத்திகை நாட்களில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடலாம்.
கிருத்திகை
கிருத்திகை என்று வீட்டிலேயே முருகப்பெருமானுக்கு எளிமையான வழிபாடுகளை செய்யலாம். மேலும் கோவிலுக்கு சென்றும் வழிபாடு செய்யலாம். கோவிலில் முருகப்பெருமானுக்கு அபிஷேகங்கள் நடைபெறுகின்ற அந்த நேரத்தில் நாமும் கோவிலுக்கு சென்று நம்மால் இயன்ற அபிஷேக பொருட்களை வாங்கி கொடுக்கலாம்.
முருகப்பெருமான் அபிஷேகம்
நிச்சயமாக அந்த நாளன்று முருகப்பெருமானுக்கு பாலபிஷேகம் நடக்கும் அபிஷேக பிரியரான முருகப் பெருமானுக்கு நடைபெறும் பாலபிஷேகத்தை பார்த்து அபிஷேகம் செய்த பாலை வீட்டிற்கு எடுத்து வந்து தண்ணீரில் கலந்து விடுவதும் தெளிக்க வேண்டும்.
கடன் பிரச்சினைகள் தீரும்
இந்த தண்ணீரை வீட்டில் தெளிப்பதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் நீங்கி கடன் பிரச்சினைகளும் நீங்கி ஒரு நல்ல வாழ்க்கை அமையும். முருகப்பெருமானுடைய அருளால் சீக்கிரத்திலேயே நமக்கு அனைத்து நல்லதும் நடக்கும். இந்த எளிமையான வழிபாட்டை கிருத்திகை நாளன்று செய்து நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழுங்கள்.
இதனையும் படியுங்கள் : கடன் பிரச்சினைகள் அதிகமாக சில காரணங்கள்!