பணப்பற்றாக்குறை நீங்க பரிகாரம்!
பணம் என்கின்ற ஒரு வார்த்தை தான் நம்முடைய வாழ்க்கையை நிர்ணயிக்கிறது பணத்தை நாம் அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். ஆனால் அதற்கு நாம் கடினமாக உழைக்க வேண்டும் கடினமாக உழைப்பதோடு அதிர்ஷ்டமும் நமக்கு தேவைப்படும். எதை செய்தால் பணம் அதிகமாக சேரும் என்று பல விதங்களில் யோசித
பணம் என்கின்ற ஒரு வார்த்தை தான் நம்முடைய வாழ்க்கையை நிர்ணயிக்கிறது பணத்தை நாம் அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். ஆனால் அதற்கு நாம் கடினமாக உழைக்க வேண்டும் கடினமாக உழைப்பதோடு அதிர்ஷ்டமும் நமக்கு தேவைப்படும். எதை செய்தால் பணம் அதிகமாக சேரும் என்று பல விதங்களில் யோசித்து முயற்சி செய்து கொண்டே இருப்போம். அந்த பணம் கூட ஒரு சிலரிடம் மட்டுமே அதிக அளவில் சேரும் ஒரு சிலரிடம் சுத்தமாக சேராது.அப்படி நம்மிடம் அதிக அளவில் ஐந்து முக்கியமான பொருட்களை வீட்டில் வாங்கி வைத்து அதன்மூலம் பணம் அதிகமாக சேர வைக்கலாம். அதனை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதவில் பார்க்கலாம்.
பணம் சேர வீட்டில் வாங்கி வைக்க வேண்டிய ஐந்து பொருட்கள்
ஒருவருடைய வீட்டில் பணம் எந்த வித குறையும் இல்லாமல் இருந்தாலே அந்த குடும்பத்தில் மகிழ்ச்சியும் தங்கும் ஏனென்றால் பணத்தினால் மட்டுமே இன்றைய காலகட்டத்தில் அதிக அளவில் பிரச்சினைகள் ஏற்படுகிறது அதனால் பணம் சேர்வதற்கு நாம் என்னென்ன முயற்சிகள் எடுக்க வேண்டுமோ அனைத்தையும் எடுக்க வேண்டும் அதற்கு ஆன்மீக ரீதியாக வீட்டில் சில பொருட்களை வாங்கி வைக்க வேண்டும் அப்படி செய்தால் வீட்டில் பணம் அதிக அளவு சேரும்.
விநாயகர் வழிபாடு
வீட்டில் முழு முதற்கடவுளான விநாயகருடைய சிலையை வாங்கி வைக்க வேண்டும் எந்த காரியத்தை நாம் தொடங்குவதாக இருந்தாலும் முதலில் விநாயகப் பெருமானை வழிபாடு செய்துவிட்டு பிறகு தான் அந்த காரியத்தை தொடங்க வேண்டும். அதிலும் நடனமாடும் கணபதியின் சிலை வீட்டில் இருந்தால் மிகவும் நல்லது வீட்டின் கதவை திறக்கும் பொழுது எதிர்ப்பக்கத்தில் விநாயகருடைய அந்த சிலை இருந்தால் பணவரவு வீட்டில் அதிகரிக்கும்.
தேங்காய்
புனிதமான ஒரு பொருளாக கருதப்படும் தேங்காயை வீட்டில் வாங்கி வைக்க வேண்டும் எந்த தெய்வத்திற்கு நாம் வழிபாடு செய்வதாக இருந்தாலும் தேங்காய் அதில் இடம் பெறும். அதனால் எப்பொழுதுமே நம் வீட்டில் இரண்டு மூன்று தேங்காய் ஆவது இருப்பது போல் பார்த்துக் கொள்ள வேண்டும் தேங்காயை வீணாக்கக்கூடாது. ஏனென்றால் அது கடவுளுக்கு படைக்கக்கூடிய நெய்வேத்தியம்.
மகாலட்சுமி தாயாருக்கு உகந்த வலம்புரி சங்கு
செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக்கூடிய மகாலட்சுமி தாயாருக்கு அம்சமாக திகழக்கூடிய வலம்புரி சங்கை வீட்டில் வாங்கி வைக்க வேண்டும். மகாலட்சுமி தாயாருக்கு நிறைய பொருட்கள் அம்சமாக இருந்தாலும் மகாவிஷ்ணுவின் கையில் இருக்கக்கூடிய வலம்புரி சங்கு மிகவும் உகந்தது எனவே இதனை நம் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வதால் மகாலட்சுமி கடாட்சம் வீட்டில் ஏற்படும்.
புல்லாங்குழல்
கிருஷ்ணருக்கு உகந்த கிருஷ்ணருக்கு பிடித்தமான பொருளான ஒன்றுதான் புல்லாங்குழல்.இதனை நம் வீட்டின் பூஜை அறையில் வாங்கி வைத்து வழிபாடு செய்யும்போது செல்வ செழிப்பிற்கு எந்த குறையும் இல்லாமல் இருக்கும். எனவே கிருஷ்ணரின் கைகளில் இருக்கக்கூடிய புல்லாங்குழலை கண்டிப்பாக வீட்டில் வாங்கி வைக்க வேண்டும்.
குபேரர் சிலை
செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக்கூடியவர் மகாலட்சுமி தேவியார் என்றால் செல்வத்தை பாதுகாத்து தரக்கூடியவர் குபேரர் குபேரரின் அருள் நமக்கு கிடைத்தால் மகாலட்சுமி தாயார் உடைய செல்வமும் நமக்கு கிடைக்கும் அதனால் ஒவ்வொருவருடைய வீட்டிலும் குபேரருடைய சிலை கண்டிப்பாக இருக்க வேண்டும் மேலும் அந்த குபேரர் சிலை வடக்கு பார்த்தவாறு இருந்தால் மிகவும் நல்லது. இந்த ஐந்து பொருட்களையும் வீட்டில் வாங்கி வைப்பதன் மூலம் பண கஷ்டங்கள் தீர்ந்து பண பிரச்சனைகள் தீர்ந்து எதிர்மறை எண்ணங்களும் அழிந்து வீட்டில் நல்லதே நடக்கும். முக்கியமாக பணப்பற்றாக்குறை நீங்கும்.
இதனையும் படியுங்கள் : பர்ஸில் நிறைய பணம் அதிகரிப்பதற்கு செய்ய வேண்டிய பரிகாரம்!